1993ல் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தால் தண்டனை வழங்கப்பட்டிருப்பதில் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆறுதல் அடைந்திருக்கின்றன.

ஆனால், 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்னர் மும்பையில் வரலாறு காணாத மதக் கலவரம் மூண்டது. சுமார் இரண்டு மாதங்கள்வரை இந்தக் கலவரம் தொடர்ந்தது. இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் அரசாங்கம் சரியான நடவடிக்கையை முன்னெடுத்து, இறுதியில் குண்டு வெடிப்புக் குற்றவாளிகளுக்கு தண்டனையையும் வழங்கியிருக்கும்போது, கலவரத்தில் ஈடுபட்ட சிவசேனா குண்டர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை ஏன் விட்டு வைத்திருக்கிறது மஹா ராஷ்டிரா அரசு?

திரிசூலம் மற்றும் துப்பாக்கி குண்டுகளால் கொல்லப்பட்டவர்களின் வலியைக் காட்டிலும், குண்டு வைத்து கொல்லப்பட்ட வர்களின் வலி மட்டும் அதிகமாக இருக்குமோ? என கேள்வியெழுப்பியுள்ளனர் கலவரத்தால் பாதிக் கப்பட்ட மும்பை முஸ்லிம்கள்!

1993ம் ஆண்டு குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்டவர்கள் என்று யாகூப் மெமனுக்கு தூக்கு தண்டனையும், ஏற்கெனவே தூக்கு தண்டனை பெற்ற 10 குற்ற வாளிகளுக்கு ஆயுள் தண்டனை யாக குறைத்தும், தடா சட்டம், இ.பி.கோ, ஆயுதத் தடைச் சட் டம் ஆகியவற்றின் கீழ் 22 பேருக்கு ஒரு வருடம் முதல் 10 வருடங்கள்வரை தண்டனை வழங்கி யும் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

257 பேர் கொல்லப்பட்ட, 713 பேர் படுகாயமடைந்த, சுமார் 27 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதப்படுத்தப்

பட்ட 1993 குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனையை முஸ்லிகளும், முஸ்லிமல்லாதவர்களும் வர வேற்றுள்ளனர்.

ஆனால் அதே சமயம், டிசம் பர் 1992 மற்றும் ஜனவரி 1993ல் முஸ்லிம்களுக்கு எதிராக சிவசே னாகாரர்களும் காவல்துறையும் நடத்திய பயங்கர தாக்குதலில் 900 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்காதது மட்டுமல்ல... கலவர சம்பவம் குறித்து விசாரிக்க அமைக் கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் அறிக்கையில், கலவரத்தில் ஈடுப ட்டதாக சுட்டிக் காட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் கடந்த 20 ஆண்டுகளில் பதவி உயர்வு கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது.

டிச. 6, 1992ல் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட அடுத்தடுத்த நாட் களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்ட மிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்திற்கான எதிர்வினை தான் மும்பை தொடர் குண்டு வெடிப்பு என்பது சந்தேகத்திற்கிடமில்லாத தெளிவான விஷ யம்.

"ரியாக்ஷன்' காட்டிய (குண்டு வெடிப்பு) குற்றவாளிகள் வெளி நாடுகளில் இருந்தபோதும் அவர் களை பின்தொடர்ந்து சென்று கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வந்து இறுதியாக தண்டனையும் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் "ஆக்ஷன்' காட்டிய (கலவர) குற்றவாளிகள் யாரையும் தொடக்கூட முடியாத வகையில் மும்பையின் உள்ளூர் பகுதிகளில் பெரும் எண்ணிக்கை யில் அவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்.

கலவரத்தின்போது தமது கடமைகளைச் செய்யத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்ல... பள்ளிவாசல்களுக்குள் புகுந்து அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிகளும்கூட பதவு உயர்வும், வீரப் பதக்கங்களும் பெற்று காவல்துறையில் வீற்றிருக்கிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட அரசியல் வாதிகள் இப்போது பெரும் செல் வாக்கு பெற்று திகழ்கின்றனர்.

கலவரம் நடந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டன. ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகி விட் டன. ஆனால் இந்த அறிக்கை யின்படி நடவடிக்கை எடுக்க ஒரு சிறு முயற்சியைக் கூட மஹாரா ஷ்டிரா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

கேபினட் அமைச்சர் ஷரத் பவார், மஹாராஷ்டிரா அமைச்சர் சகன் புஜ்பால் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்  நாராயன்ரானே        போன்ற     அரசியல் வாதிகளை குற்றம்    சாட்டியிருந்த ஸ்ரீ. கிருஷ்ணா கமிஷன் அறிக்கை குப்பைத் தொட்டியில் வீசியெறி யப்பட்டிருக்கிறது.

இந்த வகையில், குறைந்தபட் சம் நரேந்திர மோடியை பாராட் டலாம். 2002 குஜராத் கலவரம் நடந்த பின் 10 ஆண்டுகளுக்குள் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகள் பலர் சிறைக்கு சென்றிருக்கின்றனர். மோடியின் கேபினட் அமைச்சர் மாயா கோத்னானிக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால், காங்கிரஸ் ஆளும் மஹாராஷ்டிராவில் மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வெறும் கனவா கவே இருக்கிறது. ஒன்றிரண்டு வகுப்புக் கலவரங்களைத் தவிர முஸ்லிம்களுக்கு இதுவரை நீதி கிடைத்ததில்லை.

மும்பை குண்டு வெடிப்பை நிகழ்த்தியதில் மூளையாக செயல் பட்டவர்கள் கடத்தல்காரர்களும், கிரிமினல்களும்தான். ஆனால் இது பயங்கரவாதம் என அழைக்கப்படுகிறது. அதே சமயம், முஸ்லிம்களின் இனப் படு கொலையை நடத்தியதில் மூளையாக செயல்பட்டவர்கள் அரசியல்வாதிகள், போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம். ஆனால் இது வகுப்புக் கலவரம் என அழைக்கப்படுகிறது.

குண்டுவெடிப்பு மூலம் கொல்லப்பட்டால் அதற்கு பெயர் பயங்கரவாதம். திரிசூலங்கள் மற்றும் போலீஸின் துப்பாக்கி குண்டுகளால் கொல்லப்பட்டால் அதற்குப் பெயர் வன்முறை! அரசு மற்றும் அரசமைப்பின் இந்த இரட்டை நிலை முஸ்லிம்கள் இந்நாட்டின் இரண்டாம் தர குடிமக் களாக நடத்தப்படுவதையே காட்டுகிறது. இந்த வெட்கக் கேடான உண்மை நமது ஜனநாயகம் என் பது போலித்தனமானது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

Pin It