அம்பலப்படுத்திய விக்கி லீக்ஸ்

மஹாராஷ்டிரா மாநிலம் சங்கிலி, மிராஜ் மற்றும் கோலாபூரில் கடந்த 2009ம் வருடம் நடைபெற்ற கலவ ரத்திற்கு பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள்தான் காரணம் என்றும் அதற்காக அக்கட்சிகள் திட்டம் தீட்டிய தகவல்கள் தமக்கு கிடைத்த தாகவும் விக்கி லீக்ஸ் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இக்கலவரம் 2009 அக்டோபரில் நடைபெற்ற மஹாராஷ்டிரா மாநிலத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நெருக் கத்தில் மேற்கண்ட பகுதிகளில் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த ரகசியத் தகவல் கடந்த செப்டம்பர் 9, 2009ல் தனக்குக் கிடைத்த தாகக் கூறும் விக்கி லீக்ஸ், அக்டோபர் 2009ல் மஹாராஷ்டிரா மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு முன் வாக்காளர்களுக்கு மத்தியில் மோதலை ஏற்படுத்தி அதன் மூலம் பாஜகவும், சிவசேனாவும் தங்களுக் குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கின என்று தெரிவித்துள்ளது.

மேலும் அந்த ரகசியத் தகவலில் “சங்கிலி, கோலாபூர், மிராஜ் போன்ற மஹாராஷ்டிராவின் தெற்கு மாவட்டங்க ளில் நடைபெற்ற கலவரங்கள், இந்து - முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் மோதலை உருவாக்கி, அத்தொகுதிகளில் இந்துத்துவா தேசிய கட்சிகளுக்கு சாதகமான நிலையை உருவாக்கும் நோக்கம் என்பது தெளிவா கப் புலப்படுகிறது...'' என்று குறிப்பிட்டுள் ளது.

தென் மஹாராஷ்டிராவின் அரசியல் சூழ்நிலையைப் பற்றி குறிப்பிடும் அந்த ரகசியத் தகவல், “தென் மஹாராஷ்டிர சட்டமன்றத் தொகுதிகளில் இந்து வாக் காளர்களை ஒருங்கிணைத்து மாநிலத்தின் மொத்த தொகுதிகளில் 30 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்; அதற்கு வன்மு றையை பிரயோகிக்க வேண்டும் என பாஜக, சிவசேனா கட்சிகள் சதித் திட்டம் தீட்டின...'' என்றும் கூறுகிறது.

மேலும் செப்டம்பர் 25, 2009ல் விக்கி லீக்ஸ்சுக்கு கிடைத்த ரகசியத் தகவலில் அக்டோபர் 2009ல் நடைபெற்ற மாநிலத் தேர்தலை முன்னிட்டு இரண்டு முக்கிய மாநிலக் கட்சிகளான பால் தாக்கரேவின் சிவசேனா, ராஜ் தாக்கரேவின் மஹாராஷ்டிரா நவ நிர்மான் சேனா ஆகியவை லேபர் பிரச்சி னையைத் தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடை யவும், இதற்கென அமெரிக்காவி லிருந்தும், இந்தியக் கம்பெனிகளிடமிருந்தும் நிதியைத் திரட்ட திட்டமிட்டன என்றும் கூறுகி றது விக்கி லீக்ஸ்.

இந்துத்துவா அமைப்புகளின் இதுபோன்ற சதித் திட்டங்கள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமல்ல குஜராத், ராஜஸ் தான், உத்திராஞ்சல், மத்தியப் பிர தேசம் போன்ற பாஜகவுக்கு ஓர ளவு செல்வாக்குள்ள மாநிலங்க ளிலும் தீட்டப்பட்டு தேர்தலில் வன்முறை- வகுப்புக் கலவரங் களை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சிக்கு வரத் துடிக்கின்றன பாசிச சக்திகள்.

குஜராத் ஃபார்முலாவைத் தான் தாங்கள் ஆட்சிக் கட்டிலில் ஏற சரியான வழிமுறையாக இந் துத்துவா அமைப்புகள் நினைக் கின்றன. தேர்தல் காலங்களில் இந்துத்துவா கட்சிகளை கூர்ந்து கவனித்து நடவடிக்கையை தீவி ரப்படுத்த வேண்டிய வேலை மத் திய அரசுக்கு இருக்கிறது. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதற்கான பதிலை தேர்தல் காலங்களில் தெரிந்து கொள்ள லாம்.

- ஃபைஸ்

நன்றி : டி.என்.ஏ. நாளிதழ், மும்பை பதிப்பு