மியான்மரில் கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த கலவரததில் பௌத்த இனவெறி 90க்கும் அதிகமான முஸ்லிம்களை பலி கொண் டது. 3 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. சுமார் 1 லட்சம் பேர் வரை தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு நிவாரண முகாம்களில் இன்றுவரை தங்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் மியான்மரில் கலவரம் வெடித்துள்ளது. மியான்மரின் மேற்கு மாகாணமான ராகையின் பகுதியில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ராகைன் பிரிவினருக்கும், ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள தாக மியான்மர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு பிரிவினருக்குமிடையில் மோதல் என்பதை விட முஸ்லிம் கள் மீது மீண்டும் பௌத்த இன வாதிகள் பாய்ந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி தொடரும் வன்முறை மூலம் இதுவரை 112 முஸ்லிம்கள் மியான்மரில் பௌத்த இனவெ றிக்கு பலியாகி உள்ளனர்.

ரொஹிங்கியா பிரிவு முஸ்லிம் கள் ராகைன் மாகாணத்தில் தலைமுறை தலைமுறையாக வசித்து வந்த போதிலும் அவர் களை பங்களாதேஷிலிருந்து குடி யேறியவர்களாகவே பௌத்தர் கள் கருதுகிறார்கள். இந்த வன் முறை குறித்து செய்தி வெளியி டும் மீடியாக்கள் நடத்தவற்றை வெறும் செய்தியாக வெளியிட்டு வருகின்றவே தவிர, இது மதத் தீவிரவாதம் என்றோ, சகிப்புத் தன்மையில்லாத பௌத்தர்கள் என்றோ, மதவெறியர்கள் என்றோ விமர்சிப்பதில்லை.

ஆனால் முஸ்லிம்கள் தொடர் பான செய்திகள் வெளியிடப்ப டும்போது மட்டும் செய்திகளினூ டாக இஸ்லாம் குறித்தும், முஸ் லிம்கள் குறித்தும் தங்களின் கடு மையான விமர்சனங்களையும் முன் வைக்கின்றன என்பது கவ னத்திற்குரியதாக உள்ளது.

இரண்டாவது முறையாக கடந்த வாரம் மீண்டும் மியான் மரில் வன்முறை வெடித்ததைய டுத்து சற்றே அசைந்து கொடுத்தி ருக்கும் மியான்மர் அதிபர் தெய்ன் கீன், “மியான்மரில் ஜனநாயக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வரு வதை சர்வதேச சமூகம் கவனித்து வரும் நிலையில் இதுபோன்ற மோதல்கள் நாட்டின் நற்பெ யரை சிதைத்து விடுகின்றன. அமைதியும், ஸ்திரத்தன்மையும் திரும்புவதற்கு நாட்டின் இராணு வமும், போலீசும் மக்களின் ஒத் துழைப்புடன் முயற்சிகளை மேற் கொள்ளும்'' என அறிக்கை வெளி யிட்டிருக்கிறார்.

இந்த அறிக்கை கூட, ஐக்கிய நாடுகள் சபையின் பான்கி மூன், “மியான்மரில் ஏற்பட்டுள்ள பதற் றம் வருத்தமளிக்கிறது. சட்ட த்தை மீறி நடக்கும் அனைத்து விவகாரங்களையும் கட்டுக்குள் கொண்டு வர மியான்மர் அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' என்று கேட்டுக் கொண்ட பின்னர்தான் மியான் மர் அதிபரிடமிருந்து வெளியி டப்பட்டுள்ளது.

மியான்மர் ஜனநாயக மாற்றத்தை நோக்கி நகர்ந்து வருவதா கவும், சர்வதேச சமூகம் இதனை கவனித்து வரும் நிலையில் வன்முறைகள் மியான்மருக்கு சர்வ தேச அரங்கில் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது என்றும் உண் மையிலேயே அதிபர் தெய்ன் கருதுவாரானால், இராணுவம், காவல்துறை போன்றவற்றின் மூலம் வன்முறையை தடுத்து நிறுத்த முயற்சிப்பது அரசு நடவ டிக்கையாக இருந்தாலும், அதை யும் தாண்டி இந்த வன்முறைக்கு தங்கள் நாட்டு பௌத்த மக்கள் மத்தியில் குடி கொண்டிருக்கும் இனவெறிதான் காரணம் என் பதை விளங்கி அதைக் களையும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

சமூக ஆர்வலர்கள் மூலம் கருத்தரங்குகளை அரசே ஏற்பாடு செய்து ரொஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரின் குடிமக்களே... அவர்களுக்கு எல்லாவித உரிமை களும் இந்த நாட்டில் உள்ளது என்று உணர்த்த வேண்டும். அத்தோடு, ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட், ரேஷன் கார்டு மற்றும் ஏனைய இருப்புச் சான்றிதழ்களை உடனடியாக வழங்கி அவர்களுக்கான அங்கீகாரத்தை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

இதுபோன்ற ஆக்கப்பூர்வமான ஏற்பாடுகளை செய்து விட்டு தனது நாடு குறித்த சர்வதேச சமூகத்தின் பார்வை பற்றி மியான்மர் அதிபர் கவலைப்படட்டும்.

- ஃபைஸல்

Pin It