புனித நதியாக கருதப்படும் கங்கை நீரில் கார்சினோ ஜென்ஸ் எனப்படும் புற்று நோயை உண்டாக்கக் கூடிய காரணிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

லட்சக்கணக்கான இந்தியர்களின் நீர் ஆதாரமாகவும், புனித நதியாகவும் கருதப்படும் கங்கை நதி நம்மக்களின் ஒழுங்கீனத்தாலும் அரசின் கவனமில் லாததாலும் முற்றிலும் மாசடைந்து விட்டது. தொடர்ந்து ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளிலிருந்து நீர்நிலை பகுப்பில் கார்சினோஜென்ஸ் எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பதாக தேசிய புற்றுநோய் பதிவ கம் தனது ஆய்வின் முடிவில் கூறியுள்ளது.

இதன்படி இந்தியாவில் வாழும் மக்களில் கங்கை நதியை தங்களது நீர் ஆதாரமாக உபயோகிக்கும் மக்களுக்கு மற்றவர்களைவிட அதிகமாக புற்றுநோயுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

இது குறித்து தேசிய புற்றுநோய் பதிவகம் வெளியிட்டுள்ள ஆய்வில், நதியில் கொட்டப்பட்டுள்ள கன உலோகங்கள் மற்றும் இரசாயனங்களால் பெருமளவு நீர் வாழ் நுன்னு யிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன, இது தற் போது எல்லா அளவு கோலையும் தாண்டி மக்களின் உயிரை பறிக்க கூடிய புற்று நோய்க்கான காரணியாக உருவெடுத்துள்ளது.

இதற்கு பெரும்பாலும் பாதிக்கப்பட கூடியவர்களாக உத்தர பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மக்களாக இருப்பார்கள். இந்த பகுதியில் உள்ள ஆற்றங்கரை நச்சு தன்மையுடன் இருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் அதிகமாக பாதிப் படைய கூடிய புற்று நோய் வகை, பித் தப்பை புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகும், இப்பகுதிகளில் வாழும் மக்கள் இந்த நோயால் அதிக பாதிப்பிற்க்கு உள்ளாக வாய்ப் புள்ளதாகவும் அவை நிரூபிக்கப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் ஒவ்வொரு 10,000 மக்களிலும் 450 ஆண்களும் 1,000 பெண்களும் பித்தப்பை புற்று நோயாளிகளாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சிறுநீரக புற்று நோய், உணவுக்குழாய், கல்லீரல், சிறுநீர்ப்பை மற்றும் தோல் புற்றுநோய் என பல்வேறு வகையான புற்று நோய்களாலும் இங் குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவலை இந்த ஆய்வு கூறியுள்ளது.

இந்த விஷ ஆற்றில் குளிப்பவர்க ளுக்கும் இதே அளவு சம பாதிப்பு உள்ளதாக இந்த ஆய்வு எச்சரித்துள் ளது.

பாவங்களை கரைக்க கூடியது என்று ஹிந்து மக்களால் நம்பப்படும் இந்த நதி தீராத பாவமெல்லாம் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் கங்கையில் முங்கி எழுகின்றனர்.

இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதன் நம்பிக் கையில் இறந்தவர்களின் அஸ்த்தியை யும், உடலையும் கங்கை நதியில் விட்டு விடுவதாலும் வாழும் உயிர்க ளுக்கு பெரும் பாதிப்பை மத நம்பிக் கையால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

முன்னதாக 2007 ஆண்டே கங்கை நதி உலகின் ஐந்து மிகவும் மாசுபட்ட நதிகளில் ஒன்றாக உள்ளதாகவும், வாரணாசி ஆற்றில் மலையளவு நுண்கிருமி வகை நூற்றுக்கணக்கில் உள்ளதாகவும் கூறப்பட்டது. இதை அதிகாரப்பூர்வமாக இந்திய அரசாங்கம் ஏற் றது.

ஆனால் இதற்கு பின்னரும் மாசுவை தடுக்க எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முற்படவில்லை, மக்களுக்கு தானாகவும் எந்த விழிப்புணர்வும் இல்லை.

- அபு சனா

Pin It