மார்ச் 3, 2013 அன்று வெளியான "தி ஹிந்து' நாளிதழின் 14ம் பக்கத்தில் "ஓபன் பேஜ்' என்ற பகுதியில் சமீரா அஹ்மத் என்ற வாசகியின் கட்டுரை ஒன்று இடம் பெற்றுள்ளது. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு முஸ்லிம்கள் காட்டிய எதிர்ப்பை எதிர்த்து சமீரா எழுதியிருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த சமீரா அஹ்மத் தன்னை அறிவுஜீவியாக காட்டிக் கொள்ள தி ஹிந்துவில் பிதற்றியிருப்பதுடன், கமலஹாசன் அல்லது விஸ்வரூபம் ஆதரவுப் போக்கு கொண்டவர்களை சந் தோஷப்படுத்த முயற்சித் திருக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது.

“நான் ஒரு முஸ்லிம். மிகவும் பெருமைப்படத் தக்க முஸ்லிம். உண்மை யாகவே எனது மார்க்க த்தை நான் கடை பிடிக்கி றேன். ஆனால் அதை என் னளவில் வைத்துக் கொள் கிறேன். மார்க்கத்தை இத யப்பூர்வமாக நம்புகி றேன். ஆனால் அதை நான் பிறர் மீது திணிப்ப தில்லை.

நான் 5 வேளைத் தொழுகிறேன். ஆனால் அதை நான் வெளியே காட்சிப்படுத்துவதில்லை. ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு வைக் கிறேன். இதில் மற்றவர்க ளுக்கு எந்த சின்ன அறிகு றியும் தென்படாது. எனது நம்பிக்கைகளை நான் நம் புகிறேன். எனது நம்பிக் கைகள் தனிப்பட்ட விஷ யம். உங்களுடையதும் இப்படியே...'' என்று அட் டகாசமாக ஆரம்பிக்கும் கட்டுரையாளர் சமீரா...

அடுத்து, “நான் சென்னையில் பிறந்து - கிறிஸ்தவர்கள், முஸ்லிம் கள் மற்றும் சமணர்கள் என்று வகைப்படுத்தப்பட்ட இந்து பெரும்பான்மையைக் கொண்ட பழமைவாத சமூகத்தில் வளர்ந்த வள். ஆயினும் பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் வசிக்கும் நான் ஒருபோதும் என்னை சிறுபான் மையாக கருதியதில்லை.

இந்துக்கள் எங்கள் வீட்டிற்கு பண்டிகைகளின்போது சுவை யான பிரியாணி சாப்பிட வருகி றார்கள். நான் ஞாயிற்றுக்கிழ மைகளில் சர்ச்சுக்குப் போய், பாதிரியார் இறைவனைப் புகழு வதைக் கேட்கிறேன். நான் எனது தோழியுடன் சேர்ந்து கோவிலுக் குப் போவேன். அவள் 108 முறை கோவிலை சுற்றி வருவதை கவ னிப்பேன். இதுதுôன் நமது மண். இங்கே எல்லோரும் ஒன்றே...'' என்று கூறுகிறார்.

இப்படிச் சொல்வதன் மூலம் தான் பிற சமயத்தவர்கள் மத்தி யில் நல்ல முஸ்லிமாக வெளிப் பட முடியும் என்று நம்புகிறார் இந்த கட்டுரையாளர்.

எம்மதமும் சம்மதம் என்று கூறும் ஒருவர் தனது கொள்கை யில் நிலைத்திருக்கவோ அதை உறுதியாக செயல்படுத் தவோ முடியாது. பிற மத கடவுள் நம் பிக்கைகளை விமர்சிக்கக் கூடாது என்று கூறும் இஸ் லாம் அந்த நம்பிக்கைகளை மறுக்கிறது. அப்படியிருக்க கட்டுரையாளர் தன்னை இஸ் லாத்தை கடை பிடிக்கும் உண்மையான முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வது அபத்தம். இது போலித்தனத்தை வெளிப் படுத்துவதாகவே அமையும். இதில் தன்னை பெருமைக்குரிய முஸ் லிம் என்று வேறு சொல் லிக் கொள்கிறார். இது ஒருபுறம் இருக்கட்டும்!

விஸ்வரூபம் படம் பற்றி பேச வரும் இவர், “விஸ்வரூபம் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் திணறடித்து விட்டது. ஒரு சூப் பர் ஸ்டாரைச் சுற்றி சூறாவளியே சுழன்றடித்தது இந்த பிரச்சினை யில்!

நான் அந்தப் படம் பார்த் தேன். அதில் சண்டைக் காட்சி கள், காதல் காட்சிகள், மர்மம் நிறைந்த காட்சிகள், நுனி இருக்கைக்கு நம்மை தள் ளும் காட்சிகள், துண்டா டப்பட்ட உடல்கள், இரத் தத்தை ஓட்டுதல், கொலைக் காட்சிகள், சிதறிய உடல் கள் என எல்லாமே இருந் தது.

நான் பழமைவாதியாக கூட இருக்கலாம்.

ஒரு இஸ்லாமிய நாட் டில் ஒருவரை பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடும் முன்பு தொழுகையில் நான் அன் றாடம் பயன்படுத்தும் வச னம் ஓதப்பட்டால் அநே கமாக நான் காயப்பட்டி ருக்கக் கூடாது.

அமெரிக்க வீரர் ஒருவ ரின் தலை வெட்டப்படும்போது நான் ஒலிக்கும் ஒரு வார்த்தை கோடிக்கணக்கான தடவை வீடியோ காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒலிக்கும்போது அநேக மாக நான் காயப்பட்டிருக்கக் கூடாது.

எல்லா பயங்கரவாதிகளும் முஸ்லிம்களாக சித்தரிக்கப்படும் போது அநேகமாக நான் காயப் பட்டிருக்கக் கூடாது. அநேக மாக நான் காயப்பட்டிருக்கவே கூடாது...'' என்றெல்லாம் சொல்லி விட்டு,

“ஒரு மண் வெட்டியை மண் வெட்டி இல்லை என்று கூறு வதை எப்பொழுதிலிருந்து நாம் நிறுத்தினோம்?

தீவிரவாதத்தை இப்படியல் லாமல் வேறு எப்படி சித்தரிக்க முடியும்?'' என்று கேட்கிறார் சமீரா.

இதன் மூலம், கமலஹாசன் விஸ்வரூபத்தில் - நிஜத்தில் நடப்பதைத்தான் காட்டியிருக்கி றார் என்றும் முஸ்லிம்கள் தீவிர வாதத்தில் ஈடுபடுகிறார்கள்; அதைத்தான் கமலஹாசன் வெளிப் படுத்துகிறார் என்றும் தனது புத்தி ஜீவிதனத்தை ஆணவத்து டன் வெளிப்படுத்துகிறார். முஸ் லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபடு வதைத்தானே கமலஹாசன் காட்சிபடுத்தியுள்ளார் எழுத்து வன்மத்தினூடாகச் சொல்கிறார் இந்தக் கட்டுரையாளர்.

தான் ஒரு பெருமைபடத்தக்க முஸ்லிம் என்று தன்னைத் தானே பெருமைப்படுத்திக் கொள்ளும் இவருக்கு, எல்லா பயங்கரவாதச் செயல்களோடும் முஸ்லிம்கள் சம்மந்தப்படுத்தப் படுவது பற்றி கவலை இல்லை. ஆனால், விஸ்வரூபத்திற்கு எதி ராக முஸ்லிம்கள் எதிர்ப்பு காட் டியதை விமர்சிக்க மட்டும் இவ ரது மேல்தட்டு வர்க்க விரல்கள் நீளுகின்றன என்றால் இவரை முஸ்லிம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

இவரது எழுத்துகள், தேர்ந்த இஸ்லாமிய எதிரியின் எழுத்து களை நினைவூட்டுகின்றன. இஸ் லாமியர்களை வைத்தே இஸ் லாத்திற்கு எதிராக களமாட வைக்கப்படும் மனுஷ்ய புத்தி ரன், சல்மா, ஷபானா ஆஸ்மி, ஜாவித் அக்தர், எஸ்.ஜி. ரசூல் போன்றவர்களின் பட்டியலில் சமீரா அஹ்மது புது வரவுதான்.

அடுத்து அவர் போடும் தீவிர வாதப் பட்டியலைப் பாருங்கள்;

“கடவுளின் பெயரால்... விமா னங்கள் கட்டிடங்களில் மோத விடப்படுகின்றன; (அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலைச் சொல்கிறார்) ஹோட்டல்கள் தீவிரவாதிகளின் பிடிக்குள் கொண்டு வரப்படுகின்றன (மும்பை தாஜ் ஹோட்டலை சொல்கிறார்); ரயில் நிலையங்கள் துப்பாக்கி சூடு நட த்தும் களங்களாகின்றன (இது வும் மும்பை ரயில் நிலையத் தாக் குதல்தான்) குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாகி விட்டன. தற்கொலைப் படையினரின் நீண்ட பட்டியல் முடிவுறாமல் இருக்கிறது (பாலஸ்தீன் மக்க ளின் தற்கொலைப் படைத் தாக் குதலைச் சொல்கிறார்).

ஆக, சமூகத்திலுள்ள ஒரு சிறு குழுவினரால் ஒட்டுமொத்த சமு

தாயமும் பாதிக்கப்படுகிறது. விசாக்கள் மறுக்கப்படுவது முதல் விமான நிலைய பரிசோதனைக ளின்போது மானத்தை பாதிக் கும் உள்ளாடை சோதனை வரை, பெண்களின் புர்கா தடை செய் யப்படுவது முதல் வீடுகள் வாட கைக்கு மறுக்கப்படுவதுவரை சாதாரண மனிதன் (முஸ்லிம்) பாதிக்கப்பட்டிருக்கிறான்...'' என் கிறார் கட்டுரையாளர்.

இதில் முழுக்க முழுக்க முஸ் லிம்களையே பயங்கரவாதத் திற்கு காரணகர்த்தாக்கள் ஆக்கு கிறார் இந்தக் கட்டுரையாளர்.

இவருக்கு, அமெரிக்கா தாக்கு தல், மும்பைத் தாக்குதல், பாலஸ் தீனத் தாக்குதல் மட்டும் நினை வுக்கு வருகிறது. இந்தியாவில் காவி பயங்கரவாதிகள் நிகழ்த் திய ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்போ, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்போ, சம் ஜவ்தா எஸ்பிரஸ், மாலேகான் உள்ளிட்ட பல குண்டு வெடிப்பு சம்பவங்களோ, குஜராத் முஸ் லிம் இனப் படுகொலைகளோ நினைவுக்கு வராததில் ஆச்சர்யம் இல்லை. ஏனெனில் இவர் இஸ் லாத்திற்கு எதிரானவர்களை திருப்திபடுத்த எழுதுவதால் அதனை இவரிடம் எப்படி எதிர் பார்க்க முடியும்?

முஸ்லிம்களையே பயங்கரவா தத்தோடு தொடர்புபடுத்தும் இக் கட்டுரையாளர், போனால் போகட்டும் என்ற ரீதியில், “ஆம்! பயங்கரவாதிகள் பிற மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார் கள் என்ற ஆதாரம் இருந்தபோதி லும் ஒரே மதத்தை திரும்பத் திரும்ப பயங்கரவாதத்தோடு இணைக்கும் போக்கு மாற வில்லை.

69 அப்பாவி மக்களைக் கொன்று குவித்த நார்வேயைச் சேர்ந்த மனநோயாளி ஒருவன், முஸ்லிம்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அதற்கு காரணம் கூறி னான் என்ற போதிலும், ஒரே மத த்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு மாற வில்லை...'' என்று முஸ்லிம் சமு தாயத்தின் மீது போலித்தனமாக கவலைப்படுகிறார்.

இப்படியெல்லாம் சொல்லி கமலஹாசனுக்கு முட்டு கொடுக் கும் சமீரா அஹ்மது,

“ஆக, விஸ்வரூபம் படம் எடுத் தவரை நாம் குற்றம் சொல்லக் கூடாது. அவர் தரப்பிலிருந்து ஒரு கதையை அவர் நமக்குச் சொல்கிறார். அந்தக் கதை உண் மையோ, கட்டுக் கதையோ அது எப்படியிருந்தாலும் சினிமா என் பது வெறும் படம்தான். இதில் அலட்டிக் கொள்ள ஒன்றுமே இல்லை...'' என்று கூறி கமலஹாச னுக்கு அழகாக வால் பிடிக்கிறார்.

ஒரு சமுதாயத்தை புண்படுத்தி அந்தக் கட்டுக் கதையோ, உண் மையோ இருப்பது பற்றி இவ ருக்கு கவலையில்லை.

ஒரு மதத்தை தீவிரவாத மத மாக காட்டி படம் எடுப்பவரை குற்றம் சொல்லக் கூடாதாம். பிறகு யாரை குற்றம் சுமத்த வேண்டுமாம்? அதையும் இந்தக் கட்டுரையாளர் சமீராவே கூறுகி றார்.

“நீங்கள் யாரையாவது குற்றம் சொல்ல வேண்டுமானால் தங்கள் மூளைகளில் தவறான கருத்து களை கொண்டிருக்கிற அடிப்ப டைவாதிகளை குற்றம் சுமத்துங் கள்.

தற்கொலைப் படையினராக மாறுவதன் மூலம் செர்க்கம் கிடைக்கும் என்று இளைஞர்க ளுக்கு பயிற்சி அளிப்பவர்களை குறைசொல்லுங்கள். ஒரே பட்ட னில் ஒரு நாட்டையே அழிக்கக் கூடிய இரக்கமற்ற சிந்தனை கொண்டவர்களை குற்றம் சுமத்துங்கள்.

நாடு முழுவதும் ஆரம்ப பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தி, தன் நாட்டு குடிமக்களை சுதந்திர மாக ஆயுதம் ஏந்த வைத்து வாழ்க்கையை நிலையற்ற தாக்கு பவர்களை குற்றம் சுமத்துங்கள்.

நொண்டிச் சாக்குகளைச் சொல்லி மற்ற நாடுகள் மீது போர் தொடுப்பவர்களை குற்றம் சுமத்துங்கள். அதனால், மதம் என்ற பெயரில் எதிர்ப்பது ஒரு (நொண்டிச்) சாக்குதான்...'' என முடிக்கிறார்.

இப்படி எழுதுவதன் மூலம் அமெரிக்க அராஜகத்தை மறை முகமாக மென்போக்கோடு சுட் டிக் காட்டும் இவர், தாலிபான்க ளையும், அமெரிக்கர்களையும் ஒரே புள்ளியில் சேர்க்கிறார்.

தாலிபான் என இவர் பெயர் குறிப்பிடவில்லையென்றாலும் அவர்களை பயங்கரவாதிகளாக வன்மத்துடன் பதிவு செய்கிறார். அமெரிக்காவைப் பற்றி கூறும் இடங்களில் அந்த வன்மம் இல்லை. இதன் மூலம் தாலிபான் கள் மீது இயல்பிலேயே அவ ருக்கு இருக்கும் வெறுப்பு மன நிலையை வெளிப்படுத்துகிறார்.

தாலிபான்கள் நாடு முழுவதும் ஆரம்ப பள்ளிக் கூடங்களை மூடி யிருக்கிறார்கள் என்கிறார். பள்ளிக் கூடம் நடத்த உலக நாடுகளி டம், தொண்டு நிறுவனங்களிடம் தாலிபான்கள் நீதி கேட்டபோது, அதனை மறுத்து பாமியானில் இருந்த பிரம்மாண்ட புத்தர் சிலையின் மூக்கை சரிப்படுத்த பில்லியன் டாலர் செலவு செய்யப் பட்ட பின்னணி சமீராவுக்கு தெரியாமல் போனது ஆச்சர் யமே!

இளைஞர்கள் கைகளில் தாலி பான்கள் சுதந்திரமாக ஆயுதங் கள் கொடுத்ததற்கு என்ன கார ணம்? பொதுவாக எல்லா போராளி அமைப்புகளும் இளைஞர்களை போராட்டத்திற்கு தயார்படுத்து பவர்கள்தான். ஆனால் தாலிபான் இளைஞர்கள் கைகளில் ஆயுதங் களைக் கொடுத்தது ஏன்? தமது மண்ணை மீட்பதற்காக! அமெரிக் காவின் அத்து மீறலுக்கு, அராஜ கத்திற்கு எதிராக அநியாயமான அந்நிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக என்பதையெல்லாம் இந்தக் கட்டு ரையாளருக்கு தெரியவில்லை என்கிறபோது, தவறான பதிவை மேற்கொள்ள அவருக்கு தார்மீக உரிமை உண்டா?

அமெரிக்காவின் அராஜகங் களை பட்டியல் போட்டு பரப்ப துப்பில்லாத சமீரா அஹ்மதுவும் கமலஹாசனைப் போன்றே அமெரிக்க விசுவாசியாகவே இருக்கக் கூடும்.

உண்மையில் தாலிபான்கள் மிகப் பெரும் போராளிக் குழு வாக இருந்த போதிலும் அது அண்டை நாடுகளில் எந்த பயங் கரவாச் செயல்களிலும் ஈடுபட்ட தில்லை. தாலிபான் வரலாற்றை நடுநிலையோடு படிக்கட்டும் சமீரா அஹ்மது.

தாலிபான்களின் அந்நிய ஆக் கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தை பயங்கரவாதம் என்று கொச்சைப்படுத்துவதில் சமீராக் களுக்கும், "தி ஹிந்து' போன்ற நாளேடுகளுக்கும் அப்படியொரு ஆனந்தமோ?

வாசகியின் கருத்துக்கு முக்கி யத்துவத்துடன் மறுப்பு தர வேண்டுமா என்று வாசகர்கள் நினைக்கலாம்.

நமது இந்த மறுப்பு என்பது சமீராவுக்கானது மட்டுமல்ல - சமீராவைப் போன்ற பெயர் தாங்கி முஸ்லிம்களை வைத்து, இஸ்லாத்தை, இஸ்லாமியர்களை விமர்சிப்பதை ஊக்கப்படுத்தும் தி ஹிந்துவுக்கானதும்தான்.

- ஹிதாயா

Pin It