''நான் ஒரு புத்தவாதி! இரக்கத்தையும், சகிப்புத்தன்மையையும் கடைபிடிப்பவன்...''- இப்படிச் சொல்லி சர்வதேச சமூகத்தின் முன் வேதம் ஓதும் சாத்தானாக வெளிப்பட்டிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே.

இலங்கையில் இறுதிகட்டத்தில் நடந்த முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது போர் தடை செய்யப்பட்ட பகுதியென அறிவித்து, அங்கே திரண்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 40 ஆயிரம் பேரை கொன்று குவித்தார் ராஜபக்சே.

இது போர்க் குற்றம்; எனவே ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக ஐ.நா. மன்றம் அறிவிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வந்த நிலையில், இங்கிலாந்திலிருந்து வெளிவரும் சேனல் - 4 தொலைக்காட்சி, இறுதிகட்ட போரில் இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கிறது; இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் அத்துமீறல்களை நிகழ்த்தியிருக்கிறது என்று கூறி ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டது.

இந்த ஆவணப் பதிவுகளில் சர்வதேச மக்களின் அதிக கவனத்திற்குள்ளானது புலிகளின் தலைவ ரான பிரபாகரனின் 12 வயது மகன் பாலச் சந்திரன் இராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்ததுதான். இது, இலங்கை இராணுவத்தின் கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணத்தை சர்வ தேச மக்களுக்கு அடையாளப்படுத்தியது.

இந்த ஆவணப் பதிவு இலங்கை அதிபர் ராஜபக் சேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்த நிலை யில், தமிழர்கள் மறுவாழ்வு தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் இலங்கை அதிபரை இக்கட்டில் ஆழ்த்தும் வகையில் அமைந் திருக்கிறது.

அமெரிக்காவின் இந்தத் தீர்மானம் 4ம் தேதி ஐ.நா. மன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த தீர்மானத்தின் மீது இந்திய அரசு இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.

வழக்கம் போல, இலங்கைத் தமிழர்கள் நலனில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்படும் என்கிற செயற்கைத்தனமான, அரசியல்தனமான பதி லையே மத்திய அரசு இலங்கைக்கு எதிரான நிலைப்பாடுகளின்போது சொல்லி வந்திருக்கிறது.

இப்போது கூட, இலங்கைப் பிரச்சினை தொடர் பாக ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தின் முழு விபரமும் தெரிந்த பின்பு சரியான நேரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கும் என மத்திய இணை அமைச்சரான நாரா யணசாமி கூறுகிறார்.

இதுதான் கிரேட் எஸ்கேப் என்பது! நாராயண சாமியின் இந்தப் பேச்சே... இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பதை மறைமுகமாக உணர்த்துவதாக உள்ளது.

மத்திய அரசைப் பொறுத்தவரை இலங்கை அரசுக்கு ஆதரவாகத்தான் இதுவரை அது நடந்து வந்துள்ளது. அதனால் அமெரிக்காவின் தீர்மா னத்தை அது ஆதரிக்கப் போவதில்லை. இலங்கை அரசு - இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதி செய்ய காத்திருக்கிறது.

இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா ஒருபோதும் எடுக்காது என்ற தைரியம் இலங்கை அரசுக்கு எப்போதுமே உண்டு. ராஜீவ் - ஜெயவர்த்தனேவுக்கிடையே நடந்த இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் 25 ஆண்டு காலத்தை வெற்றிகரமாக கடத்தி வந்த இலங்கை அரசை இந்தியாவால் நிர்ப்பந்திக்க முடியவில்லை.

இதற்கு காரணம் இந்தியா தனக்கு எதிரான நிலை எடுத்தால், தனது வெளிநாட்டுக் கொள் கையை இலங்கை மாற்றிக் கொண்டு, இந்தியாவின் எதிரி நாடுகளாக இருக்கும் பாகிஸ்தான், சீனாவு டன் கைகோர்த்து விடுமோ என்கிற பீதியிலேயே இந்தியாவால் இலங்கைக்கு எதிராக குரல் எழுப்ப முடியாமல் போகிறது.

இதற்காக இந்தியா பேசும் நியாயங்கள் விசித்தி ரமானவை. தமிழர்களையும், தமிழ் கட்சிகளையும் திருப்திபடுத்த எப்படி தமிழக நலனில் அக்கறை இருக்கிறது என்பதை திரும்பத் திரும்ப மத்திய அரசு கூறி வருகிறதோ அதேபோல, இலங்கை அரசை திருப்திபடுத்த இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பதுதான் இந்தியாவின் கொள்கை என்பதை சொல்லி வருகி றது. இதைத்தான் இலங்கைக்கு எதிராக புகார் எழும்போதெல்லாம் இலங்கை அரசும் பிரதிப லித்து வருகிறது.

இலங்கையில் நடந்த, நடக்கின்ற அத்துமீறல் களை ஆய்வு செய்ய சர்வதேச மனித உரிமை அமை ப்புகளுக்கு அனுமதி மறுப்பதற்கும் இதே காரணத் தைத்தான் இலங்கை அரசு கூறி வந்திருக்கிறது.

ஆனால், இந்தியாவின் இந்தக் கொள்கை சுய நலமானது; இரட்டை நிலைப்பாட்டைக் கொண் டது; இந்தியாவின் இறையாண்மையை கேள்விக் குறியாக்கக் கூடியது.

வங்காள தேசம் கிழக்குப் பாகிஸ்தானாக இருந் தபோது அங்கே பாகிஸ்தான் இராணுவத்தினரால் மனித உரிமைகள் மீறப்பட்டபோது இந்தியா தலையிட்டதே அப்போது எங்கே போனது இந்திய அரசின் கொள்கை?

மியான்மர் நாட்டில் தலையிட்டு நாட் டாண்மை செய்ததே அது எப்படி? ஹைதராபாத், சிக்கீம், காஷ்மீர் போன்ற தேசங்களை சுதந்திரத் திற்குப் பின் கபளீகரம் செய்ததே அது எப்படி?

இந்தியா ஒரு சாதாரண நாடாக, பொருளாதார, இராணுவ பலம் இல்லாத நோஞ்சான் நாடு என்று இருந்தால் இந்தியாவின் கூற்றில் உள்ள நியா யத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஒரு வல்லரசு நாடாக உருவாகி வரும் இந்தியா, ஐ.நா. மன்றத்தில் உறுப்பு நாடாக ஆவதற்காக பிரயத்தங்களை மேற்கொண்டு வரும் இந்தியா, உல கின் எந்த மூளையில் மனிதகுல விரோத அத்து மீறல்கள் நடந்தாலும் தனது நிலைப்பாட்டை தெரி விக்க வேண்டும்.

அப்படி தெரிவிப்பதுதான் சர்வதேச அரங்கில் இந்தியாவின் இறையாண்மையை வெளிப்படுத்து வதாய் அமையும். இதுவரை இந்தியாவின் நிலைப் பாடு எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கைக்கு அருகில் உள்ள நாடு என்ற வகையில் இந்தியாவின் நிலைப்பாட்டை சர்வதேச நாடுகள் முக்கியத்து வத்துடன் எதிர்பார்க்கின்றன. அந்த எதிர் பார்ப்பை இந்தியா நிறைவேற்றுவதில்தான் அதன் இறையாண்மை சர்வதேச அளவில் மதிக்கப்படும்.

Pin It