இந்தியாவில் மிக மலிவாகக் கிடைக்கின்ற, மக்களில் ஒரு பகுதியினர் அதிகம் பயன்படுத் தாத பாகற்காய்,புற்றுநோயை குணப்படுத்தும் அருமருந்தாக உள்ளது எனக் கண்டறிந்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவ ஆய்வாளர்.

நோயின் தன்மையை ஆராய்ச்சி செய்யும் Pathologyதுறையின் ஆய்வாளரான டாக்டர் ரத்னாராய் தான் இந்த ஆய்வை மேற் கொண்டிருக்கிறார்.அமெரிக்கா வின் செயிண்ட் லூயிஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார் ரத்னா ராய்.

கேன்சர் சிகிச்சைக்கான மருந்தை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சிக்காக இவருக்கு 39,420 டாலர்களை லோட்டி கரோலைன் ஹார்டி சாரிட்டபுள் அறக்கட்டளை வழங்கியுள்ளது.

பாகற்காய் சாறில் தலை மற்றும் கழத்து புற்றுநோய் செல்களை செயலிழக்கும் தன்மை இருப்பதாகவும்,இதன் மூலம் மேற்கண்ட புற்றுநோய் குணமாகக் கூடும் என்றும் தெரிவித்துள்ள டாக்டர் ரத்னா ராய்,

“பாகற்காய், தலை மற்றும் கழுத்து புற்றுநோயை பரவாமல் தடுக்கும் தன்மை கொண்டது என்ற அடிப்படையில் மாற்று மருந்து சிகிச்சை முறையை கண்டறிவதே எங்கள் ஆய்வின் நோக்கம் என்கிறார்...'' டாக்டர் ரத்னா.

புற்றுநோய் செல்களை செயலிழக்கச் செய்வதன் மூலம் புற்று நோய் வருவதை தடுக்க அல்லது குணப்படுத்த பாகற்காய் சாறு பயன்படுவதாக ரத்னா ராயின் ஆய்வு கூறுகிறது.

மேலும், மார்பகப் புற்றுநோய் செல்களை சாகடித்து அவை பரவுவதையும், வளருவதையும் தடுக்கும் வகையில் பாகற்காய் சாறு செயல்படுகிறது என்று ஏற்கெனவே கண்டறிந்துள்ளார் ரத்னா ராய் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் நிதியாதாரத்துடன், பாகற்காய் சாறு மூலம் விந்துப் பை புற்று நோயை தடுப்பது உள்ளிட்ட விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டிருக்கி றார் டாக்டர் ரத்னா ராய்.

அவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் நிலையில், செயிண்ட் லூயிஸ் பல்கலைக் கழகத்தின் கேன்சர் சென்டரின் இயக்குனரும்,தலை மற்றும் கழுத்து புற்றுநோய் நிபுணருமான டாக்டர் மார்க் வார்வரேசுடனும் இது குறித்து விவாதித்து வருகிறார். டாக்டர் ரத்னா ராயின் ஆய்வுகள் தலை மற்றும் கழுத்து புற்று நோயை சிகிச்சை முறையில் தாக் கங்களை உண்டு பண்ணும் என்கிறார் டாக்டர் மார்க்.

“கேன்சர் செல்களின் வளர்ச் சியை தடுத்து நிறுத்தும் அளவிற்கு பாகற்காய் சாறு கேன்சர் செல்களில் தாக்கத்தை ஏற்படுத்து கின்றது என்பதற்கான நல்ல அறி குறிகள் தென்படுகின்றன.இது மூளைக் கட்டியையும் குணப்படுத்தக் கூடியதாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்...'' என்றும் கூறுகிறார் ரத்னா ராய்.

Pin It