திருமணம் ஆகாதவர்களை விட திருமணம் முடித்தவர்களுக்கு குறைந்த அளவே மாரடைப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சி முடிவை வெளி யிட்டுள்ளனர் பின்லாந்து மருத்துவ நிபுணர்கள். மேலும் திருமணமானவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டாலும், மண முடிக்காதவர்களைக் காட்டிலும் அவர்கள் விரைந்து குண மடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்காக 1993 - 2002வரையில் கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்ட பின்லாந்து மக்களில் 35 முதல் 99 வயதிற்கு உட்பட்ட சுமார் 15,330 பேரின் தரவுகளை திரட்டி இந்த ஆய்வை அவர்கள் மேற் கொண்டுள்ளனர்.

இதில்,மாரடைப்பு நிகழ்ந்த தும் 28 நாட்களுக்குள் பாதிக் கும் மேற்பட்ட நோயாளிகள் மர ணமடைந்துள்ளதையும் அவர் கள் கண்டறிந்துள்ளனர்.

திருமணமான தம்பதியரை விட, திருமணமாகாதவர்களில் 58 முதல் 66 சதவீதத்தினர் மார டைப்புக்கு ஆளாக அதிக வாய்ப் புகள் இருப்பதாகவும், இதில் வயது வித்தியாசமில்லை என் றும் அவர்கள் தெரிவித்துள்ள னர்.

பெண்களைப் பொறுத்த வரை திருமணம் சார்ந்த நன்மை கள் ஏராளமாக இருந்தபோதி லும், திருமணமாகாத பெண்க ளில் 60 முதல் 65 சதவீதம்வரை மாரடைப்பு மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள் ளது.

‘இதய நோயை தடுப்போம்' என்கிற ஐரோப்பிய இதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

திருமணமானவர்களில் ஆண், பெண் இரு பாலாரும் மாரடைப் பில் மரணமடைவது கணிசமாக குறைந்து காணப்படுகிறது என் றும் கூறுகின்ற இந்த ஆய்வு, திரு மணமான ஆண்கள் - பெண்க ளோடு ஒப்பிடுகையில், திருமண மாகாத ஆண்களில் 60 முதல் 168 சதவீதத்தினரும், திருமணமா காத பெண்களில் 71 முதல் 175 சதவீதத்தினரும் மாரடைப்பு ஏற் பட்ட 28 நாட்களுக்குள் மரணிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக வும், பிரம்மச்சாரி வாழ்க்கை வாழுகின்ற அல்லது திருமணம் செய்யாமலிருக்கின்றவர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் அதி கரித்திருப்பதாகவும், இதைப் பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ளும் தன்மையும் வயது வித்தியாசமில்லாமல் ஆண், பெண் களிடையே மோசமடைந்து வரு வதாக அந்த ஆய்வு கூறுகிறது.

மன அழுத்தம், மனவெ ழுச்சி, மனக் குழப்பம், தேவை யற்ற பய உணர்வு போன்ற வைகளும் இதயத்தை வெகு வாக பாதிப்பில் ஆழ்த்துகின் றன என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதைத்தான் மேற்கண்ட ஆராய்ச்சியிலும் திருமணமாகா தவர்களுக்கு திருமணமானவர் களைக் காட்டிலும் மாரடைப்பு மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு அதிக மான வாய்ப்புகள் உள்ளன என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக் கின்றனர்.

மனிதனின் காம உணர்வு என்பது இயல்பானது. அதற்கு தடை போட முடியாது. அந்த இயற்கையின் உணர்விற்கு வலிந்து தடை போட முயற்சித் தால் மனிதன் ஒழுக்கக் கேடான வற்றின் பக்கம் வீழ்வான் என்ப தற்கு தினமும் நாம் செய்தித் தாள்களில் படிக்கும் சாமியார்க ளின் சம்பவங்கள் சான்றளிக் கின்றன.

திருமண பந்தம்தான் மனித வாழ்க்கையை பூரணப்படுத்தும். அதனால் பிரம்மச்சர்ய கோட்பாடுகளை கடைபிடிப்பவர் அதற்கு விடை கொடுக்க வேண்டும்.

Pin It