வேடிக்கை காட்டும் மத்திய உளவுத்துறை

இந்துத்துவா தீவிரவாதிகள் இந்தியாவில் நிகழ்த்திய குண்டு வெடிப்பு மற்றும் மதக் கல வரங்களின் பட்டியல் மிக நீளமானது. இந் துத்துவா பயங்கரவாதம் இந்த நாட்டில் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒரு குண்டு வெடிப்பு நடந்தால் விசாரணை அமைப்பு களுக்கும், உளவு நிறுவனங்களுக்கும் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகள் மீது இயல்பாக சந்தேகம் ஏற்பட வேண்டும்.

ஆனால் ஹைதராபாத் தில்சுக் நகர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உளவு நிறுவனங்களுக்கோ, விசா ரணை அமைப்புகளுக்கோ இந் துத்துவா அமைப்புகள் மீது ஏனோ துளிகூட சந்தேகம் ஏற்படவி ல்லை. மாறாக சம்மந்தமில்லாமல் அறிவு கெட்டத்தனமாக பெங்க ளூரு சிறையில் இருக்கும் கேரளா மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானி மீது சந்தேகப்பட்டு அவரை விசாரிக்க மத்திய உள வுத்துறை முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி வேடிக் கையாக இருக்கிறது.

பெங்களூருவில் 2008ல் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் சம்மந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி மதானியை கைது செய் தது பெங்களூரு காவல்துறை. மதானி குடகு பகுதியில் இருந்து குண்டு வெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டினார் என்பதுதான் மதானி மீதாக பொய் குற்றச்சாட்டு.

இது பொய் குற்றச்சாட்டு என்று நாம் அடித்துச் சொல்வ தற்கு காரணம், குடகு பகுதிக்கு அவர் சென்றிருக்க முடியாது என் பதால்தான். இதனை தெஹல்கா பத்திரிகையும் தனது நிருபர் ஷாயினாவை குடகு பகுதிக்கு அனுப்பி அங்குள்ள கிராம மக்க ளிடம் மதானியின் புகைப்படத் தைக் காட்டி விசாரித்து தெளி வாக செய்தியை வெளியிட்டிருந் தது என்பது கூடுதல் தகவலாக இருந்தாலும், நாம் சொல்வது என்னவென்றால்...

1998 கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சுமார் 9 ஆண்டுகள் சிறைவாசத் திற்குப் பின் நிரபராதி என்று கூறி விசாரணை நீதிமன்றத்தால் விடு தலை செய்யப்பட்டார் மதானி. அவர் விடுதலை செய்யப்பட்ட வேகத்தில் கேரளாவிற்கு சென்ற கர்நாடக போலீஸார் பெங்களூரு வழக்கில் அவரை கைது செய்த னர்.

கோவை சிறையிலிருந்து விடுத லையான மதானிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந் தது. மாநில உளவுத்துறை அவரை தொடர்ந்து கண்காணித்து வந் தது. விசாரணை அதிகாரிகளும் மதானி மீது கண் பதித்திருந்தனர்.

இது தவிர, மதானி இன்னொரு வருடைய துணையின்றி எங்கும் பயணம் செய்ய முடியாத வகை யில் சக்கர நாற்காலியோடு வாழ் ந்து வருபவர். இத்தனை பாது காப்பு, கண்காணிப்புகளையும் மீறி அவர் கர்நாடாகாவிலுள்ள குடகு பகுதிக்கு சென்று குண்டு வெடிப்பு நடத்த சதித் திட்டம் தீட் டினார் என்று பெங்களூரு போலீஸ் சொல்வது காவல்து றைக்கே அவமானம்.

மதானியின் சிகிச்சைக்காக கூட ஜாமீனில் விடாத கர்நாடக காவல் துறை வெறும் விசாரணைக் கைதி யாகவே அவரை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஒரேயொரு ஆதாரத்தைக் கூட நீதி மன்றத்தில் கர்நாடக காவல்துறை யால் சமர்ப்பிக்க முடியவில்லை.

ஆகஸ்டு 2010ல் கைது செய்யப் பட்ட மதானி இன்றுவரை பெங்க ளூரு சிறையில்தான் இருக்கிறார். அவரை யார் சந்திக்கிறார்கள்? என்ன பேசுகிறார்கள் என்ற விப ரங்களையெல்லாம் அறிந்து வைத் திருக்கும் காவல்துறை, ஹைதரா பாத் குண்டு வெடிப்புடன் அவரை தொடர்புபடுத்த முயற்சிப்பது அயோக்கியத்தனம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

மதானியை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தோடு தொடர் புபடுத்த இன்னொரு அபத்தத்தை தனது சந்தேகமாக வெளியிடுகி றது மத்திய உளவுத்துறை.

பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த நூரிஷா தரீகத் மதரஸா என்ற அரபு கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த சிலரையும் கைது செய்தி ருக்கிறது கர்நாடக காவல்துறை. இவர்கள் மதானியுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மதரஸாவின் தலைவர் அபு என்பவரிடத்தில் மதானிக்கு பழக்கம் இருக்கிறதாம். அபுவின் அழைப்பை ஏற்று மதரஸாவில் பலமுறை மதானி மார்க்க சொற் பொழிவு நடத்தியிருக்கிறாராம். அதனால்தான் மதானியை விசா ரிக்க முடிவு செய்துள்ளதாம் மத் திய உளவுத்துறை.

தில்சுக் நகர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டது நூரி தரிக்கத் மதரஸா என்ற நிறுவனம்தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதைப் போலவும், அதன் தொடர்ச்சியாக மதானியை விசாரிக்க இருப்பதாக வும் உள்ள இந்த செய்தி எவ்வளவு அபத்தமானது.

சிறையில் மதானியோடு இருக் கும் மதரஸாவைச் சேர்ந்தவர்கள் மாயாவி போல இரவோடு இர வாக ஹைதராபாத் வந்து குண்டு வைத்து விட்டு, மீண்டும் கர்நாடக சிறைக்கு சென்று விட்டார்கள் என்ற இந்த ரகசிய தகவல் மத்திய உளவுத்துறைக்கு மட்டும் கிடைத் திருக்கிறதோ?

சூப்பர் உளவுத்துறை தான். அப்படியானால், ஹைதரா பாத் குண்டு வெடிப்பில் இந்தியன் முஜாஹித்தீனுக்கு தொடர்பு இருக்கிறது என்று கிளப்பப்படும் சந்தேகம் ஏன்?

நூரி தரீக்கா மதரஸாதான் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி யது என்று அறிவிக்க வேண்டியது தானே இந்த அபத்தத்தில் இன் னொரு அபத்தம் என்னவென் றால்... நூரிஷா மதரஸாவுடன் மதானிக்கு தொடர்பு இருப்பதால் ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம் மந்தமாக அவரிடம் விசாரணை யாம். ஆனால் நூரிஷா மதரஸாவி னரிடம் விசாரணை இல்லையாம்.

மத்திய உளவுத்துறையின் மூளையை வாட்டர் வாஷ் பண்ண லாமா?

- ஹிதாயா

Pin It