யதார்த்தங்களின் புரிதல்களுடன்!

கடந்த மாதம் 26ம் தேதி இலங்கை மட்டக் களப்பில் நடந்திருக்கும் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கி டையேயான கடந்த கால கசப்புணர்வுகளை புறந் தள்ளி எதிர்கால சகோதரத்துவ ஒற்றுமைக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்திருக்கிறது.

ஆம்! இலங்கை தமிழ் முஸ் லிம் நல்லுறவுக்கு பாலம் அமைக்கும் வகையில் அமைந்த அந்த நிகழ்ச்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கும், காத்தான் குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம் மேளத்திற்குமிடையில் நிகழ்ந்தி ருக்கிறது.

தமிழ் முஸ்லிம் நல்லுறவு குறித்தும், எதிர்கால நடவடிக் கைகள் குறித்தும் இச்சந்திப்பின் போது விரிவான கலந்துரையா டல் நடந்திருக்கிறது.

கிழக்கில் முஸ்லிம்களுக்கு இருக்கும் நிலப் பிரச்சினை - தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை தொடர்ந்து பேண வேண்டிய அவசியம் ஆகியவற்றை முஸ்லிம் தரப்பினர் வலியுறுத்திப் பேச சம்பந்தனோ,

“தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற் றுமை மிக முக்கியமானதாகும். இரண்டு சமூகங்களும் ஒற்றுமை யுடன் வாழ்வது அவசியமான தாகும். முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதத்தின் விளை வாகவே தம்புல்ல பள்ளிவாசல் தகர்ப்பு விவகாரத்தை பார்க்க முடிகிறது. மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப் என்னுடன் மிக நெருக்கமாக இருந்தார்...” என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

காத்தான்குடிக்கு வருமாறு முஸ்லிம் தரப்பு சம்பந்தனை அழைக்க... அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார் சம்பந்தன்.

காத்தான்குடி பள்ளிவாசல்க ளில் புலிகள் அமைப்பால் நடத் தப்பட்ட முஸ்லிம் படுகொலைகள்; வடக்குப் பகுதிகளிலிருந்து முஸ்லிம் மக்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் முஸ்லிம்களின் நிலங்கள் புலிகளால் ஆக்கிரமிக் கப்பட்ட நிகழ்வுகள் போன்ற வைதான் இன்றுவரை தமிழ் முஸ்லிம் உறவில் ஒரு இடைவெ ளியை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன.

அதிலும் காத்தான்குடி படு கொலைச் சம்பவம் என்பது முஸ்லிம்களின் மனதில் ஆறாத வடுவாகவே மாறிப் போயிருக்கி றது. ஆயினும் நடந்தவற்றையே பேசிக் கொண்டிருப்பதில் பய னில்லை; எதிர்கால சமூக அரசி யல் வாழ்விற்கு தமிழ் மக்களு டன் இணைந்து பயணிப்பது தான் ஆரோக்கியமானதாக இருக்கும் என உணர்ந்து புதிய மறுமலர்ச்சியை நோக்கி அவர் கள் நகரத் துவங்கியிருக்கின்றனர்.

அதே சமயம், இலங்கையி லும் தமிழகத்திலும் சில முஸ் லிம் அமைப்புகள் பழைய விஷ யங்களையே கிளறி தமிழ் முஸ் லிம் உறவு ஏற்படக் கூடாது என் கிற ரீதியில் செயல்பட்டு வரு கின்றனர். இந்நிலையில் இந்த இரு தரப்பு சந்திப்பு முக்கியத்து வம் வாய்ந்த நிகழ்வாகவும், இரு சமூக உறவுகளை வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பது வர வேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

இந்தச் சூழலில் இரு சமூக தலைவர்களின் சந்திப்பு மட்டும் பூரண ஒற்றுமைக்கு வழிகோ லாது. சில யதார்த்த நடவடிக் கைகள்தான் இந்த ஒற்றுமையை வலுப்படுத்தும்.

முஸ்லிம் சமூகம் புலிகள் மற்றும் போராளி அமைப்புகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இழப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். அந்த இழப்புகளுக்கு குறைந்தபட்சம் ஆறுதல் அளிக்கும் வகையில் முஸ்லிம் களை நோக்கி முனைந்து நேசக் கரம் நீட்ட வேண்டியது தமிழ் அமைப்புகளின் தார்மீகக் கடமை என்பதை உணர்ந்து முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் வழங்கத் தவறிய உரிமைக ளையும் அந்தஸ்ததையும் அளிக்க அவை முன் வர வேண்டும்.

தமிழ் முஸ்லிம்களுக்கிடை யேயான உறவு என்பது பாரம்ப ரியமிக்கது. சிங்களச் சமூகம் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்தபோதெல்லாம் தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து வந்துள்ளனர். தந்தை செல்வாவின் பெடரல் கட்சியுடன் முஸ்லிம்கள் நல்ல உறவுகளைக் கொண்டிருந்தனர் என்பது மூத்த அரசியல்வாதிக ளுக்குத் தெரியும்.

இலங்கை முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வட கிழக்கிற்கு வெளியே வாழ்ந் ததால் தேசிய சிங்களக் கட்சி யான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என தேசிய அரசியலில் இணைந்து அவர்கள் ஈடுபட்ட போதும் வட கிழக்கில் தமிழ் கட்சிகளு டனே ஓரளவு புரிந்துணர்வுடன் இணைந்து செயல்பட்டனர் அப்பிரதேச முஸ்லிம்கள். இன் னும் சொல்லப்போனால் சுயாட் சிக்கான போராட்டம் ஆரம்ப மானபோது தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்க ளோடு முஸ்லிம் இளைஞர்க ளும் தம்மை இணைத்துக் கொண்டனர்.

காலப்போக்கில் தமிழ்ப் போராளிகள் முஸ்லிம்களின் பக்கம் தங்களது துப்பாக்கி களை திருப்பியபோதுதான் இரு சமூகத்திற்கிடையே இடை வெளி உருவானது. அந்த இடை வெளியை ஏற்படுத்தியது தமிழ்ப் போராளிகள்தான். முஸ் லிம்களை "தமிழ் பேசும் சமூகம்' அல்லது "தமிழர்கள்' என்ற வரை யறைக்குள் கொண்டு வர முடி யாது என்று போராளி அமைப் புகளால் ஆயுத பாஷையில் முஸ்லிம்களுக்கு புரிய வைத்து இடைவெளி ஏற்படுத்தப்பட் டது.

தமிழ்த் தாயகத்தில் முஸ்லிம் கள் வந்தேறிகள் என்ற சொல் லாக்கம் வரலாறு நெடுகிலும் தமிழ்ப் போராளிகளால் சொல் லப்பட்டது. இதன் அடுத்தடுத்த கட்டங்கள் தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கிடையிலான இடை வெளியை அதிகப்படுத்தியது.

வடகிழக்கில் முஸ்லிம்க்ள இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். ஒரே இரவில் 5 மாவட் டங்களிலிருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

இஸ்ரேலின் மொசாத் மற் றும் இந்தியாவின் "ரா' அமைப்பு கள் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்ப் போராளிகள் முஸ்லிம் எதிர்ப்பாளர்களாக மாறிப் போயினர்.

இந்த இரு நாடுகளும் வட கிழக்கில் முஸ்லிம்கள் இருக்கும் வரை தமிழ்த் தாயகம் என்கிற உங்களின் இலட்சியத்திற்கு தடை என்பதை தமிழ்ப் போராளிகளுக்கு சொல்லிக் கொடுத்தன. இந்த இரு நாடுகளின் சுய நலன்களுக்காக முஸ்லிம்களை நோக்கி தங்களது துப்பாக்கிகளை திருப்பிய உண்மையை புரிந்து கொள்ள தமிழ்ப் போரா ளிகளுக்கு சுமார் 30 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

தமிழ் இனத்தின் நியாயமான சுயாட்சிக்கான போராட்டம் யுத்தத்தின் மூலம் நசுக்கப்பட்ட தற்கான முக்கிய காரணம் முஸ்லிம்களின் தனித்துவத்தை, உரி மைகளை, தமிழினம் என்கிற முஸ்லிம்களின் தேசியத்தை மறுத்து, சிங்கள இனவாதத்தைப் போன்றே தமிழினவாதத்தை தமிழ்ப் போராளிகள் ஆயுத முனையில் முஸ்லிம்கள் மீது திணித்ததுதான்.

வட கிழக்கு முஸ்லிம்கள் சிங்களப் பேரினவாதத்திடம் பாதுகாப்பு தேடிப் போகக் கூடிய சூழ்நிலையை உருவாக்கியதில் தமிழ்ப் போராளிகளின் பங்களிப்பு மிக அதிகம்.

இந்த வரலாற்று நிகழ்வுகளை இங்கே சுட்டிக் காட்டுவதற்கு காரணம் தமிழ்ப் போராளி அமைப்புகளால் முஸ்லிம்க ளுக்கு மறுக்கப்பட்ட உரிமை களை, அங்கீகாரத்தை தமிழ்க் கட்சிகள் தர முன் வர வேண்டும் என்பதற்காகத்தான்!

நாம் எடுத்துக் காட்டுவது கசப்பான உண்மைகள்தான். ஆயினும், முஸ்லிம்களின் மன திலுள்ள ஆழமான வடுக்களை அகற்றும் முயற்சிகளில் தமிழ் கட்சிகளின் தலைமைகள் ஆர் வம் காட்ட வேண்டும். இந்த முன்னெடுப்புகள்தான் தமிழ் முஸ்லிம் உறவை நீட்டித்திருக் கச் செய்யும்.

இன்றைய இலங்கை அரசிய லில் தமிழ் முஸ்லிம் உறவு என்பது வலிமை பெறவேண்டும் என்கிற அவசியத்தை தமிழ் தரப்பு மட்டுமல்ல... முஸ்லிம் தரப்பும் நன்கு உணர்ந்தே வைத் திருக்கின்றது.

"கடந்த கால கசப்புணர்வு களை மறந்து விடுங்கள்... நடந் தது நடந்து விட்டது' என்பது போன்ற தேறுதல் வார்த்தைக ளுக்கு அப்பால் தமிழ் சக்திகள் முஸ்லிம்களின் நம்பிக்கைகளை உறுதிப்படுத்தும் காரியங்களை ஆற்ற வேண்டியுள்ளது. இலங் கைக்குள் இருக்கும் தமிழ்ச் சக்தி கள் மாத்திரமல்லாமல் இலங் கைக்கு வெளியே இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசும் முஸ்லிம்களின் உரிமைகளை அங்கீகரித்து அவர்களுக்கான சம அந்தஸ்தை தரும் வகையி லான திட்டங்களை முன் வைத்து செயலாற்ற வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசைப் பொறுத்தவரை தமிழகத்தில் அந்த அமைப்பிற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முயற்சிகளில் அது ஈடுபட்டு வருவதை அறிய முடிகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசின் செயல்பாடுகள் ஜனநாயகத் தன்மை பெற்றிருந்த போதும், முஸ்லிம்களை அரவணைத்தே செல்ல வேண்டும் என்கிற அதன் எண்ணம், அவ்வமைப்பின் செயற்பாடுகள் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது என்ற போதிலும் புலிகளின் வேறு வடிவம்தான் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற விமர்சனமும் சிலரால் முன் வைக்கப்படுகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசோ அல்லது தமிழ் கட்சிகளோ முஸ் லிம்களுடனான உறவை வலுப் படுத்தும் வகையிலும், அவர்க ளுக்கு நம்பிக்கையை ஏற்படுத் தும் வகையிலும் சில யதார்த்த புரிதல்களின் அடிப்படையில் சிலவற்றை வெளிப்படையாக மேற்கொண்டாக வேண்டும்.

* தமிழ்ப் போராளிகள் தராத அங்கீகாரமான முஸ்லிம்களும் இலங்கையின் தேசிய அடை யாளமுள்ள தனிச் சமூகம் என் பதை சர்வதேச அரங்குகளில் அவை ஒலிக்க வேண்டும்.

* இனப் பிரச்சினைக்கான தீர்வு திட்ட முயற்சிகளின்போது முஸ்லிம் சமூகம் தனித்தரப்பாக பங்கு கொள்வதை உறுதிப்ப டுத்த வேண்டும்.

* வடக்கிலிருந்து வெளியேற் றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது வாழ்விடங்களுக்கு சென்று மீள்குடியேற அவர்க ளுக்கு இருக்கும் உரிமைகளை சர்வதேச அரங்குகளில் வலியு றுத்த வேண்டும்.

* மீள் குடியேற்றத்திற்காக இந்தியாவும், இலங்கையின் வேறு நட்பு நாடுகளும் தரும் உதவிகள், ஒத்துழைப்புகளில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களும் பயன் பெறும் வகையில் கடந்த கால தவறுகளை சரி செய்ய வேண்டும்.

இந்திய அரசு முல்லைத் தீவில் தமிழ் மக்களுக்கு கட்டிக் கொடுத்த 50 ஆயிரம் வீடுகளில் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப் பட்ட ஒரு முஸ்லிம் குடும்பமும் பயனடையவில்லை. இது குறித்து தமிழ் கட்சிகள் மௌனம் காத்தன. இந்த நிலை மாற்றப்பட்டு, முஸ்லிக்ளின் நியாயமான உரிமைகளைப் பெற் றுத் தர முனைப்பு காட்ட வேண் டும்.

* வடக்கிலிருந்து விரட்டிய டிக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலங்கள், வீடுகளில் புலிகள் அமைப்பிற்காக போராடிய மாவீரர் குடும்பங்கள் குடியேற் றப்பட்டுள்ள நிலையில் அதனை பெருந்தன்மையாக ஏற்று அருகாமையிலுள்ள நிலங்களில் முஸ்லிம்கள் குடியேற முயற்சிக் கும்போது அதற்கு எதிர்ப்பு காட்டும் சக்திகளை கண்டிக்க முன் வர வேண்டும்.

* வடகிழக்கில் புலிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இன்றுவரை முஸ்லிம்களுக்கு வழங்கப்படா மல் இருக்கும் முஸ்லிம்களின் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை முஸ்லிம்களிடம் ஒப் படைக்க அரசாங்கத்தோடு பேச வேண்டும். அல்லது அந்த பேச் சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

* எல்லாவற்றுக்கும் மேலாக, வட கிழக்கின் அதிகாரப் பரவல் குறித்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கு இருக்கும் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். இது குறித்த பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம்கள் உறுதியாக பங்கு கொள்ள வழிவகை காண வேண்டும்.

இவை வட கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகள் மட்டுமல்ல... தமிழ்ப் போராளிகள் கொடுக்க அல்லது அங்கீகரிக்கத் தவறியவை.

தமிழ்ப் போராளிகள் செய்த வரலாற்றுத் தவறுகளை சரி செய்யும் இந்த யதார்த்த முயற்சிகள்தான் உள்ளபடியே இரு சமூகத்திற்கிடையேயான உறவை வலுப்படுத்தி எதிர்கால லட்சியங்களுக்கு வலுவூட்டுவ தாகவும், தமிழ் முஸ்லிம் நலன் களுக்கு சாகதமாகவும் அமை யும்.

இவை நிகழவில்லை என்றால் இழப்பு என்பது தமிழ் - முஸ் லிம் சமூகங்களுக்குத்தான். சிங் கள பேரினவாதச் சக்திகள் இரு சமூகங்களுக்கிடையிலான முரண் பாடுகளை வைத்து நன்மை அடைவதை இதன் மூலம் மட் டுமே தடுத்து நிறுத்த முடியும். இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு தமிழ் கட்சிகள் கள மாட வேண்டும்.

- ஃபைஸ்

Pin It