பொருளா தார நெருக்கடி தன்னில்
உருண்டை உலகம் அழியா திருக்க
வினைஞர் ஆட்சியே ஒரேவழி என்று
அனைத்து நாட்டிலும் பரப்புரை செய்து,
புண்ணிய நாடெனப் பீற்றிக் கொள்ளும்
மண்ணில் வருண அமைப்பைக் கண்டு
திறமை யிலினும் உயர்நிலை நிற்கும்
அறமெதிர்ப் பார்ப்பனர் ஒழியா விடிலோ
எத்தகைத் தீர்வும் நீர்த்துப் போமெனும்
உத்தம உண்மை அறிந்ததி னாலே
பார்ப்பன ஒழிப்பை முதலில் முடிக்க
ஆர்த்தெழு மாறு கூறிச் சென்றோம்

(பொருளாதார நெருக்கடியினால் உலக மக்கள் அழியாது இருப்பதற்குத் தொழிலாளர்களின் (சோஷலிச) ஆட்சியே ஒரே வழி என்று அனைத்து நாடுகளிலும் பிரச்சாரம் செய்து விட்டுப் புண்ணிய நாடு என்று பீற்றிக்  கொள்ளப்படும் (இந்திய) மண்ணில் உள்ள வருணாசிரம அமைப்பபைக் கண்ட பிறகு, திறமை இல்லாவிட்டாலும் உயர்நிலைகளுக்குச் சென்றுவிடும் அறத்திற்கு எதிரான பார்ப்பனர்கள் ஒழியாவிட்டால் எத்தகைய நல்ல தீர்வுகளும் நீர்த்துப் போய்விடும் என்ற உயர்ந்த உண்மையை அறிந்து கொண்டோம். ஆகவே (இந்திய மக்களிடம்) முதலில் பார்ப்பன ஒழிப்பை முடிப்பதற்கு ஆர்த்தெழுமாறு கூறிவிட்டுச் சென்றோம்)

- இராமியா

Pin It