ஈ.வெ.ரா.வின் தலையாய கொள்கை மதுவிலக்கு பிரச்சாரம்என்று பார்ப்பன தினமலர்எழுதப் போய் அதற்கு விடுதலைஇவ்வாறு பதிலளித்துள்ளது:

பெரியார் மதுவிலக்கை ஆதரித் தது; அதில் மாற்றுக் கருத்துக் கொண் டது போன்ற வரலாறு எல்லாம் தெரியாமல், பேனா பிடிப்பதைப் பார்த்து, எந்த புறத்தால் சிரிப்பதோ

- ஒரு கட்டத்தில் மதுவிலக்கை பெரியார் ஆதரித்தார்; பிறகு அவரே தீவிரமாக எதிர்த்தார். இந்த வரலாறு எப்போது மக்களிடம் சரியாகப் போய்ச் சேரும்? காலவரிசைப்படி, பெரியார் கருத்துகள் முழுமையாகத் தொகுக்கப்படும்போது தானே? அப்படி, ஒரு தொகுப்பு இல்லாமை யினால் தானே, இப்படி எல்லாம் பெரியாரியலை, தவறாக அடையாளப் படுத்த முடிகிறது?

பெரியார் திராவிடர் கழகம் இப்படி காலவரிசைப்படி தொகுக்க முன் வந்தால் - அதனால் குழப்பம்ஏற்படும் என்று எழுதியது இதே விடுதலைதானே! 

அப்படி தொகுக்கப்படாததால் தான் தினமலர்பார்ப்பன ஏடுகள் குழப்பம்செய்கின்றன என்பதை, இப் போதாவது ஒப்புக் கொள்வார்களா?

பாலபாடம் யாருக்கு?

“(பெரியார் சிந்தனைகள்) நூலின் முதல் தொகுதியில் பதிப்பாசிரியர் முன்னுரையில், பதிப்பாசிரியர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

பெரியார் அவர்களின் சொற்பொழிவுகளையும் எழுத்துகளையும் தொகுக்கும் பணியினை சிந்தனையாளர் கழகத்தார், அன்புடன் என்பால் ஒப்புவித்தனர். இந்த ஏற்பாடுகள் அனைத்துக்கும் பெரியார் அவர்கள் மனமுவந்து 9.1.72 இல் முழு ஒப்புதல் அளித்தார்கள்என்று குறிப்பிடப்பட்டுள்ளதே. 

இதிலிருந்து தெரியும் உண்மை - பெரியார் எழுத்துகளை வெளியிடுவதாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் தேவை என்பது பால பாடம்.

- ‘விடுதலை’ (31.7.2009)யில் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 

மிகச் சரியான, உண்மையான கருத்து. இந்த பால பாடம்வீரமணிக்கு தெரியவில்லை என்பதை கட்டுரையாளர் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார் போலும்! 

பெரியார் எழுத்துகளை வெளியிட்ட திருச்சி சிந்தனையாளர் கழகத்துக்கு பெரியாரே ஒப்புதல் வழங்கியது போல் கி. வீரமணியை பொதுச்செயலாளராகக் கொண்ட நிறுவனத்துக்கு, பெரியார் ஒப்புதல் எதையும் வழங்கவில்லை. இந்த பால பாடம் கி.வீரமணிக்குப் புரிய வேண்டாமா, என்று விடுதலை கட்டுரை மறைமுகமாக கேட்கிறதோ! 

வீரமணி செயலாளராக உள்ள நிறுவனத்தின் விதிகளில் அப்படி பெரியார் வழங்கிய உரிமைகள் ஏதும் இடம் பெற்றுள்ளதா? இல்லையே! 

தனது எழுத்து பேச்சுகளுக்கு குறிப்பிட்ட எவருக்கும் - பெரியார் உரிமைகளை எழுதி வழங்கிடவில்லை. அதற்கான சான்றுகள் எதுவும் வீரமணியிடம் இல்லை. 

அதுமட்டுமல்ல, பெரியார் மறைவதற்கு 7 நாட்களுக்கு முன்பு மாலை முரசுநாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தனக்கென்று வாரிசு எவரும் கிடையாது. என்னுடைய சிந்தனைகளும் கருத்துகளுமே வாரிசு என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வளவுக்குப் பிறகும் பதிப்புரிமை’, ‘வாரிசுரிமைகோரி, பெரியார் எழுத்துகளை முடக்குவது, பெரியாருக்கு இழைக்கப்படும் துரோகம் அல்லாமல் வேறு என்ன?

அன்றும் இன்றும்!

ஆயிரம் ஆயிரம் பக்கங் களாக தொகுதிகளை வெளியிடு வதால் யாருக்குப் பயன்? பணம் கொடுத்து வாங்கும் சக்தி உள்ளவர்களின் அலமாரிகளில் அழகு செய்யும். சாதாரண மக்களுக்கு சென்றடையாது.

- விடுதலை (24.08.2008) கலி. பூங்குன்றன் கட்டுரை  

300 பக்கங்களுக்கு மிகைப் படாமல் இருந்தால்தான் வெகு மக்களை சென்றடைய முடியும். 

விடுதலை’ 3.3.2009 மின்சாரத்தின் கருத்து. 

இது அன்று - வைத்த வாதம். 

இன்று...?

சந்திரசேகரப் பாவலர் எழுதிய இராமாயண ஆராய்ச்சி தனித்தனி காண்டமாக வெளி யிடப்பட்டு வந்தது. அந்த ஏழு நூல்களையும் ஒரே தொகுதி யாக்கி வெளியிட்டது யார்? 718 பக்கங்களைக் கொண்ட அந்த நூலின் விலை என்ன தெரியுமா? வெறும் 200 தான்.

- இது இப்போது மின்சாரத்தின் கட்டுரை, ‘விடுதலை’ (2.8.2009)

பெரியார் திராவிடர் கழகம் தொகுதி தொகுதியாக வெளி யிட்டால் 300 பக்கங்களுக்கு மேலே போனால், அது மக்களிடம் போகாதாம்!  

ஆனால், திராவிடர் கழகம் ஏழு நூல்களை ஒன்றாக்கி, 718 பக்கங்களில் வெளியிட்டால், அண்டசராசரம் அத்தனையும் கடந்து விண்வெளிக்கும் போய் பரவிடுமாம்! இது என்ன கதை! 

மறுப்புரை தரவேண்டும் என்ற பார்வை ஒன்றைத் தவிர எந்த கருத்தோ, சிந்தனையோ இல்லாமல் எழுதுவதால் எழும் குழப்பங்கள் இவை. என்ன செய்வது? பாட்டுக்காரரின் சுருதி பேதம், பக்க வாத்தியத்தையும் பாதிக்கத்தானே செய்யும்! 

Pin It