தம்மிடமிருந்த தொகுப்புகள் - பெரியார் அறக்கட்டளைக்கு உரிமையுடையவை என்றும், அதே தொகுப்புகளைத்தான் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள தாகவும், எனவே கி.வீரமணியின் வழக்கில் அவரது சார்பில் தன்னையும் இணைத்துக் கொள்ள விரும்புவதாகவும் தஞ்சை இரத்தினகிரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டது.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது கி.வீரமணி வழக்கு தொடர்ந்த பிறகு, இரத்தினகிரி, கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு ‘குடிஅரசு’க் காக ரூ.3500-க்கான வரைவோலை ஒன்றை தனக்காக முன்பதிவுத் திட்டத்துக்காக அனுப்பியதோடு, கொளத்தூர் மணியை பாராட்டி கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். வழக்கு பற்றிய செய்திகளை தாம் அறிந்ததாகவும், அது பற்றி கவலைப்படாமல் தொகுப்புப் பணி தொடருவது தமக்கு மகிழ்ச்சி தருகிறது என்றும், தனது 35 ஆண்டுகால கனவை கொளத்தூர் மணி நிறைவேற்றி தருவதற்காக தமக்கு நன்றி கடப்பாடு உண்டு என்றும் கூறி, திருக்குறள் ஒன்றையும் எடுத்துக் காட்டியிருந்தார்.
“சிதைவிடத்து ஒல்கார் உரவோர்புதை அம்பின்
பட்டுப்பாடு உளன்றும் களிறு”
என்று இரத்தினகிரி எடுத்துக்காட்டிய குறளின் பொருள், “யானை அம்புகளால் புண்பட்டாலும் மனம் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும்; அதுபோல் ஊக்க முடையவர்கள் தம் உயர்வுக்கு அழிவு வந்த போதும் மனம் தளராமல் தம் பெருமையை நிலைநாட்டுவர்” என்பதாகும்.
இப்படி பாராட்டு மழையை பொழிந்த - அதே இரத்தினகிரி தான், பிறகு கி.வீரமணி யோடு திடீர்நட்பாகி, கரம் கோர்த்து, உயர்நீதிமன்றத்தில் கழகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததோடு, கொளத்தூர் மணி தம்மிடம் பணம் தருவதாகக் கூறி, ஏமாற்றி விட்டதாக, ‘ஜூனியர்விகடன்’ ஏட்டுக்கு பேட்டியும் அளித்துள்ளார். இது குறித்து ‘ஜூனியர் விகடன்’ ஏட்டுக்கு கழகத்தலைவர் கொளத்தூர் மணி எழுதிய கடிதத்தையும் (அதை அந்த ஏடு வெளியிடவில்லை), இரத்தினகிரி கைப்பட கழகத் தலைவருக்கு எழுதிய கடிதத்தையும் இங்கு வெளியிடு கிறோம்.
தஞ்சை இரத்தினகிரி குறிப்பிட்டுள்ள ஒப்பந்தம் 44 தொகுதிகளும் முழுமையாக வெளியிடுவதற்கான ஒப்பந்தம் என்பதும், இந்த ஒப்பந்தம் பெரியார் திராவிடர் கழகத் தலைமை செயற்குழு ஒப்புதலுக்குப் பிறகே இறுதி செய்யப்படும் என்பதும், இரத்தின கிரியே தனது கைப்படஎழுதியிருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பொய்மை களும், மோசடிகளும் எப்படி அரங்கேறு கின்றன என்பதை தமிழின உணர்வாளர் களும், பெரியாரியல்வாதிகளும் புரிந்துணர வேண்டுகிறோம்.
கழகத் தலைவர் ‘ஜூனியர் விகடன்’ ஏட்டுக்கு எழுதியுள்ள கடிதம்:
அன்புள்ள ஜூனியர் விகடன் ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம். 5.7.2009 தங்கள் இதழின் 31 ஆம் பக்கத்தில் ‘குடிஅரசு’ நூல் வெளியீடு குறித்த தஞ்சை இரத்தினகிரியின் சில கருத்துகள் குறித்து விளக்கம் தரவே இக்கடிதம் எழுதலானேன்.
அவர் கூறியபடி 8.7.2008 இல் ஒப்பந்தம் மேற்கொண்டது உண்மைதான்.
அவ்வொப்பந்தத்தில் ‘குடிஅரசு’ இதழ் 1949 ஆம் ஆண்டு நின்று போனவரை 44 தொகுதிகளையும் முழுமையாக ஒரு சேர வெளியிட வேண்டும் என்றும்,
இதழ்களைத் தொகுத்து நகலெடுத்த மைக்கு அவருக்கு ஐந்து லட்சம் ரூபாயை தொகுதிகள் வெளியிடுவதற்கு முன் கொடுப்பது என்றும்,
இவ்வொப்பந்தம் பெரியார் திராவிடர் கழக செயற்குழுவின் இசைவுக்குப் பின்னர் தான் உறுதி செய்யப்படும் என்றும் தான் உள்ளது. (நகல் இணைக்கப்பட்டுள்ளது)
ஆனால், தற்போது 1949 முடிய உள்ள 44 தொகுதிகளும் வெளியிடப்படவில்லை; பெரியார் திராவிடர் கழகம் ஒப்பந்தத்துக்கு முன்னரே அறிவித்திருந்தபடி 1938 முடிய உள்ள காலத்துக்கான 27 தொகுதிகள் மட்டுமே வெளியிடப்படுகிறது.
ஏனெனில் இரத்தினகிரி ஐந்து லட்சம் கொடுப்பதற்கும், 44 தொகுதிகளையும் ஒரு சேர வெளியிடுவதற்கும், மறு பதிப்புரிமையை தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்துக்கு வழங்கு வதற்கும் பெரியார் திராவிடர் கழக செயற் குழு ஒப்புக் கொள்ளவில்லை. இதனை 12.07.2008 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழக தலைமைக் குழு கூட்டம் முடிந்தவுடன் அவருக்கு அறிவிக்கப் பட்டு விட்டது.
ஆனால் ஏற்கனவே என்னிடம் 2,30,000 ரூபாயும், சில பெரியார் பற்றாளர்களிட மிருந்து 1,15,000 ரூபாய்களும் பெற்று, அப்பணத்தில் தட்டச்சு செய்திருந்தவற்றில் 1928, 1929, 1930, 1932 ஆகிய ஆண்டுகளுக்கான குறுந்தகடுகளையும், அச்செடுத்த நகல்களை யும் மட்டுமே கொடுத்துவிட்டு மற்றவற்றைக் கொடுக்காமல் சாக்கு போக்கு சொல்லி காலம் கடத்தினர்.
மீதி ஒன்பதரை ஆண்டுகளுக்கான 19 தொகுதி களும் எங்களின் கடுமையான தனி முயற்சியிலேயே தொகுக்கப்பட்டு, அச்சிடப் பட்டுள்ளன.
அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து, ‘விடுதலை’யில் வீரமணியின் எதிர்ப்பு அறிவிப்பு வெளிவந்த பின்னரும், 13.08.2008 அன்று இதே இரத்தினகிரி, வீரமணியின் அறிவிப்பை பற்றிய கவலையின்றி பணி தொடர்வதை அறிந்து மகிழ்ச்சி தெரிவித்தும், தனது 35 ஆண்டுகால கனவை நிறைவேற்றி தருவதற்காக எனக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதியதோடு, தனது சார்பில் ‘குடிஅரசு’ நூல்களுக்கு முன் வெளியீட்டுத் தொகைக்கான வங்கி வரைவோலையையும் அனுப்பியிருந்தார். (நகல் இணைக்கப்பட் டுள்ளது)
1987-லிருந்து வீரமணியை நாங்கள் இதுவரை பயன்படுத்தியே இராத சொற்களால் விமர்சனம் செய்து வந்த இரத்தினகிரி, இவ்வளவு நடந்த பின்னர் திடீரென வீரமணியோடு சேர்ந்து கொண்டு ‘குடிஅரசு’ வெளியீட்டுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு செய்தது (அது தள்ளப்பட்டு விட்டது) ஏன் என்பதை வாசகர்களின் யூகத்துக்கே விட்டுவிடுகின்றேன்.
முதல் ‘குடிஅரசு’ இதழ் வெளி வந்து 84 ஆண்டுகளும், பெரியார் இறந்து 36 ஆண்டு களும் கடந்த நிலையிலும், பெரியாரின் சொத்துக்களையும், உட்கட்டுமானங்களை யும் வைத்துக் கொண்டு அறிவுசார் சொத்தும் தனக்கே என்று வழக்காடும் வீரமணி தங்களிடம் மூன்று ஆண்டுகளுக்கான ‘குடிஅரசு’ இதழ்கள் இல்லை என்றும், யாரேனும் இருந்தால் அனுப்பி வையுங்கள் என்றும் ‘விடுதலை’ ஏட்டில் தற்போதுதான் (டிசம். 20, 2008) விளம்பரம் வெளியிட் டுள்ளார். ஆனால், நாங்கள் ‘குடிஅரசு’ இதழ்களை பாதுகாத்து வைத்திருந்த பெரியார் பற்றாளர்களைத் தேடி அறிந்து சில இதழ்களின் சில பக்கங்களைத் தவிர முழுமையாகவே திரட்டியிருக்கிறோம். அந்தத் தொகுப்புகளைப் பார்த்து மனம் பூரித்து மகிழும் உண்மையான, நேர்மையான பெரியார் பற்றாளர்களின் மகிழ்ச்சிக்கு முன் னால், இந்த தன்னலவாதிகளின் தடைகளும், பொறுமல்களும், குற்றச்சாட்டுகளும் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.
- தா.செ. மணி