பரந்த பாரத தேசத்தில் பெண்மையைப் போற்றும் வண்ணம் பழந்தமிழ் இலக்கியம் தொட்டு இன்று வரை பேசப்பட்டு வருகிறது. பெண்ணியம் என்ற சொல்லும் இயக்கமும் தமிழகத்தில் முத்திரைப் பதித்து வருகிறது. பெண்ணியம் என்ற சொல்லுக்கு பொருள் என்னவென்றும் அதைப்பற்றிய புரிதல் அவசியம் நமக்கெல்லாம் தேவை என இந்தக் கட்டுரையில் வலியுறுத்தி கூறுவதில் பெருமை கொள்கிறேன்.

feminism 288பெண்ணியம் சொல்லின் பிறப்பிடம்

பெண்மைக்குரிய இயல்புகளை உடையவள் என்ற பொருளில் Feminism என்னும் ஆங்கிலச் சொல் Femina எனும் இலத்தீன் மொழியில் இருந்து பிறந்தது என்றே கூறுகிறார்கள். தமிழில் பெண்ணியம், மகளிரியல், பெண் நலக் கொள்கை, பெண்ணிலைவாதம் போன்ற சொற்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

குறிக்கோளும் செயலாக்கமும்

இன்றையச் சூழலில் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை இன, சமூக, கலாச்சார மத எல்லைகளைக் கடக்கும் அடிப்படை இயக்கமாகவே கருதுகிறார்கள்.

பெண்ணியம் பல்வேறு குறிக்கோள்களை கொண்டது

  • · பெண்ணியம் என்பது அனைத்து வகைப் பெண்களுக்கும் சம உரிமை கிடைக்கப் போராடுதல்
  • · ஆண், பெண் இருபாலரும் சமத்துவ உரிமைகளை ஒன்றாக இணைந்து நிலைநாட்டுதல்
  • · போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  • · பொருளாதார சுதந்திரம் பெற்றுத் தருதல்
  • · ஆணாதிக்கத்தைக் கண்டறிந்து அகற்றுதல்
  • · பெண்களின் மீதான ஒடுக்குமுறைகளைக் களைதல்
  • · பெண்களின் நலனைப் போற்றிப் பாதுகாக்கும் சட்டங்களை வடிவமைத்து செயல் படுத்துதல் போன்ற குறிக்கோள்களைக் கொண்டு பெண்ணியம் ஒரு இயக்கமாக அடையாளம் காணப்படுகிறது.

பெண்ணியத்தின் வரலாறு

1885 ஆம் ஆண்டிலேயே காசிம் அமீன் என்பவர் புதுமைப்பெண் (THE NEW WOMAN) என்ற நூலை எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் நமது மகாகவி சுப்ரமணிய பாரதியார் “ வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் “ என்று புரட்சி வரிகளை எழுதினார். புதுமைப்பெண்கள் வெளியில் வரவேண்டும். ஆடவருக்கு இணையானப் பணிகளைச் செய்யவேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து பெண்மையின் சிகரமாக , சரோஜினி தேவி, அன்னிபெசன்ட் அம்மையார், நிவேதிதா, அன்னை தெரசா, அன்னை இந்திரா போன்றோர் மிகச்சிறந்த ஆளுமைகளாக இருந்தனர். தமிழகத்தில் வேலு நாச்சியார் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர்.

பக்தி இலக்கியத்தில் ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றோர்கள் சிறந்த ஆளுமைக் கவிஞர்களாகத் திகழ்ந்தார்கள்.

இவர்களைக் காட்டிலும் ஈரோட்டுச் சிங்கம் என்றழைக்கப்பட்ட ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் பெண்ணியத்திற்காகப் பிரசாரம் செய்தார். ஆணுக்கு நிகராக ஆடை அணியவேண்டும் என்ற வேள்வி நடத்தியவர். இப்படிப் பல்வேறு நிலைகளில் பெண்ணியம் காக்கப்பட்டது சரித்திரத்தில் நிலைபெற்றுள்ளது. இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ளது அரசியல் சட்டம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க “நிர்பயா பெண்கள் பாதுகாப்பு சட்டம்” இயற்றப்பட்டுள்ளது.

ஆணுக்கு நிகரான பெண்ணியத்தைக் காக்கும் பொறுப்பு இன்றையச் சூழலில் அனைத்துத் தரப்பினருக்கும் உண்டு.

பண்பாட்டுக் கட்டமைப்பு, தாய்வழிச் சமூகம், தந்தைவழிச் சமூகம், பாலியல் பணிவேறுபாடு, அதிகாரம் மற்றும் விடுதலை போன்ற கோட்பாடுகளில் கருத்து ஆக்கங்கள் செயல்பட்டு வருகிறது என்பது இந்திய மண்ணின் பெருமை.

பெண்களே நாட்டின் கண்கள்

இனி வேண்டாம் எப்போதும்

பெண்ணடிமை

என்று இக்கட்டுரை வழி எடுத்துக் கூறுகிறேன்.

Pin It