அய்யா அய்யா இவர்யாரு
அறிவுத் தந்தை பெரியாரு
பையா பாப்பா இவர்யாரு
பகுத்தறிவுப் பெரியாரு
தொண்டில் சிறந்த பெரியாரு
தூய தாடிப் பெரியாரு
கண்ட கண்ட சாமிகளைக்
கழித்துப் போட்ட பெரியாரு
சாதி மறுத்த பெரியாரு
சமயம் வெறுத்த பெரியாரு
நீதிக் காகப் போராட
நெஞ்சு நிமிர்த்திய பெரியாரு
மண்ணில் யார்க்கும் ஒப்பான
மதிப்புத் தந்த பெரியாரு
பெண்ணை மிகுந்த உயர்வோடு
பேச வைத்த பெரியாரு
ஓமம் வளர்த்த வேதியரை
ஓடச் செய்த பெரியாரு
காம ராசர் துணையோடு
கல்வி கொடுத்த பெரியாரு
விதியை மதியால் வெல்லுகிற
வீரம் தந்த பெரியாரு
புதிய தமிழக விடியலுக்குப்
பொற்கதிராகப் பெரியாரு!
- தமிழேந்தி