மனிதநேயத்துடன் வாழ்ந்த பெரியார் அனைத்து நன்மையான செயல்களையும் மனிதநேயத்துடன் செய்யப் பாடுபட்டார். பெயரளவில் பெரியாரைத் தொட்டுக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் முழு அளவில் ஈடுபட்டால் இன்னும் சில காலங்களிலேயே பெரியாரின் செயல்கள் முழுமையாக வெற்றி பெறும். பதவிக்கு மட்டும் பதட்டப்படும் திராவிட அரசியல் கட்சி கள் லாவண்யம் பாடுவது மிகவும் அதிகமாகிவிட்டது. “நான் இத்தனை கழிவறை கட்டினேன்; விளையாட்டு இடத்திற்கு தூண் கட்டினேன்; போகாத இடத்திற்கு சாலை போட்டேன், என்று கொள்ளையடிக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதில் குறியாக இருந்துவிட்டனர்.

பச்சைத் தமிழன் காமராசு அவர்கள் பெரியார் செயல் களை அதிகாரத்தில் இருக்கும் பொழுது மன நிறைவுடன் செய்தார். “நான் செய்கிறேன்; நீங்கள் வெளியிலிருந்து கேளுங்கள்” என்று பெரியாருக்கு வேண்டுகோள் விடுப்பார். ஆனால் இப்பொழுது, பெரியார் படங்களை மட்டும் போட்டு ஓட்டுக் கேட்டு ஆட்சிக்கு வருபவர்கள் நான் செய்ததைத் தொடர்ந்து அடுத்து வரும் கட்சிகள் செய்வதில்லை; நான் சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகளை மூடினேன்; பூசாரிகளுக்கு சம்பளம் கூட்டினேன்; கட்சி வெற்றி பெற ரவுடிகளை வளப்படுத்தினேன்; கல்விக் கொள்ளை யர்களை வளப்படுத்தினேன். மருத்துவக் கொள்ளையர்களை வளப்படுத்தினேன்; வேலை வாய்ப்பு அலுவலகங்களை சம்பளம் மட்டும் கொடுத்து காப்பாற்றி வந்தோம்; உற்பத்தி யாளரை விட்டுவிட்டு, கூத்தாடிகளுக்கு அதிகம் விருது கொடுத்து ஊக்குவித் தோம் என்று கூறும் இவர்கள் விவசாயத்திற்கு, பயன்படும் பொருட்களை விலை கூட்டினார்கள்.

இலவசமாக அரிசி கொடுப்பவர்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்தினால் இலவசம் தேவை இல்லை. இலவசமாகக் கல்விக் கொடுத்தால் கல்வி கொள்ளையர்கள் இருக்க மாட்டார்கள். வருங்காலம் வளம்பெறும். அனைத்து மதுபான கடைகளையும் சுடுகாட்டில் இடம் ஒதுக்கி கடை நடத்தலாம். ஓட்டுக் கேட்கும் பொழுது இதைத் தருவோம்; அதைத் தருவோம் என்று கூறிவிட்டு வெற்றிபெற்ற பிறகு அதை நிறைவேற்றாத குற்றமே. இதையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது தேர்தல் ஆணையமே நீதியாக நேர்மையாக இல்லை எனக் குற்றம் சொல்லலாம். மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றைச் செய்திருக்காம். உதார ணத்திற்கு ஏரிகளை சரியாக தூர் எடுத்து அளந்து நீர்வளம் காக்கலாம். மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்புக்கு முக்கியத் துவம் கொடுத்து நலம் காக்கலாம். இதை விட்டுவிட்டு லாவண்யம் பாடும் திராவிட அரசியல் கட்சிகள் நமக்கு நன்மை செய்யும் என்ற நம்பிக்கை அற்றுள்ளது. மீண்டும் பெரியார் கொள்கைகளை பின்பற்றும் தொண்டனே வருங் கால தமிழின மக்களை காப்பாற்ற முடியும்.

Pin It