lady 368மழலையின்
மனம் ஒத்த உள்ளசைவுடையவள்
கண்களைப் போத்திக்கொண்டு
கனவுகாணும் பட்டாம்பூச்சி அவள்…

மூச்சுக்காற்றையும் முகவரியோடு
கைப்பற்றத் துடிப்பவளவள்
தனதுடலில் தீப்பந்தமேந்தி தேடலின் வழியே
கூடடையத் துடிக்கும் மின்மினிப்பூச்சி அவள்…

விழியின் சைகையால் தன்வசப்படுத்தும்
சூனியக்காரியவள்
உன் தோள் சாய்ந்து இரசித்துப்போன
ஒற்றை நிலாவை தொலைத்துவிட்டு
தேடியலையும் முகில்கூட்டம் அவள்…

மலையை விடப் பெரியது
வானத்தை விடப் பரந்தது
அவளின் எதிர்பார்ப்பு
உனக்கும் அவளுக்கான காதல் பயணத்தில்...

- வழக்கறிஞர் நீதிமலர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.