தொலைந்து விடுதலின் மகத்துவம்
கசிந்து உருவாகிறது
ஒவ்வொரு சந்திப்பினுடேயும்
அடக்கவியலாப் பேராவலோடு
தாகத்துடன் காத்திருக்கின்றன
வெளியேற வழியற்று
திகைத்து நிற்குமென்
நேசப்பெருவெளி
உன்னோடு அளாவுளாவ
இரவின் கதவு திறந்து
தனிமையில் உறவாடத் தொடங்குகிறது
என் அந்தரங்க பரிமாணங்கள்
இருளேந்திய வெளிச்சத்தில்
உன்னை இறுக்கியணைக்க
தேகக் கொடிகளின் சல்லாபம்
எனது உள்ளக்கிடக்கைகளை உயிரூட்ட
தகிப்பின் வெம்மைதணில்
துவண்டு விழுகிறேன்
தூக்கம் புறக்கணித்து
நீளும் ஒரு இரவில்
தனிமையைக் கைப்பற்றி
சுயத்தை வரைகிறதென் தூரிகைகள்
யாருமற்ற வனாந்திரமாய்
அலைகிறது என் வானம்

- நீதிமலர், வழக்கறிஞர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.