உன் சிரிப்பில்

உதிரும்

முத்துப்பரல்களை விடவா

காணாமல் போன

கால் கொலுசு

கவிதை பாடிவிடப்போகிறது?

*******

காத்திருந்து காத்திருந்து

நீயும், நானும்

எத்தனையோ முறை

ஏமாந்து போனாலும்

காத்துக்கிடக்கிறது

நமக்காக காதல்.

*******

அமுதம் சிந்தும் வார்த்தைகள்

மட்டுமின்றி அவ்வப்போது

நஞ்சும் கக்குகிறாய்

ஆனாலும்

எப்போதும் எனக்கு

மாணிக்கம் நீ.

*******

உன்னைக் காணும் முன்வரை

அரிச்சந்திரனாய் இருந்தேன்

என்பதை நம்பாத நீ

அடுக்கடுக்காய்

அவிழ்த்து விடும்

பொய் மூட்டைகளை மட்டும்

எப்படி ரசிக்கிறாய்?

 

Comments

2 comments

2
nallu
நமக்காக காத்துக்கிடந்தது காதல் நல்ல கற்பனை கவிஞருக்குப் பாராட்டுக்கள் ஒரு சின்ன சந்தேகம். கவிஞர் பெயர் ஏதோ பாண்ட் பெயர் போல் உள்ளதே!அதை சரி செய்தால் நன்றாக இருக்கும்.
sathish
உன் சிரிப்பில் உதிரும் முத்துப்பரல்களை விடவா காணாமல் போன கால் கொலுசு கவிதை பாடிவிடப்போகிறது? ******* காத்திருந்து காத்திருந்து நீயும், நானும் எத்தனையோ முறை ஏமாந்து போனாலும் காத்துக்கிடக்கிறது நமக்காக காதல். ******* அமுதம் சிந்தும் வார்த்தைகள் மட்டுமின்றி அவ்வப்போது நஞ்சும் கக்குகிறாய் ஆனாலும் எப்போதும் எனக்கு மாணிக்கம் நீ. ******* உன்னைக் காணும் முன்வரை அரிச்சந்திரனாய் இருந்தேன் என்பதை நம்பாத நீ அடுக்கடுக்காய் அவிழ்த்து விடும் பொய் மூட்டைகளை மட்டும் எப்படி ரசிக்கிறாய்?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.