உன் வாசல் மரம் போதும்
புத்தர்கள் சித்தார்த்தர்கள் ஆக.
இனி பெயர் வைத்துக்
கொண்டு திரி
யசோதரை என்றும்.....!

****
கொஞ்சம் அசை
கும்பிடத் துவங்கி விட்டது
கூட்டம்

***
உன் வீட்டில்
பேப்பர் விழுவது தான்
முதல் செய்தி வீதிக்கு

***
படித்துறையின் ஞாபகத்தில்
நீந்திக் கொண்டேயிருக்கின்றன
தினம் தினம்
புதுமீன்களென
உன் பாதங்கள்

***
சாளரம் வழியே
எட்டிப் பார்க்கிறாய்
சவம் சாமியாகிறது

- கவிஜி

Pin It