அத்தி பழத்தை
குத்தி
கிழித்து
ருசித்து
பறந்தது...

விதை தூவும்
வாகனமாய்
வயிறு புடைத்து
காற்றில் நீந்தியது...

சொத்தென
விழுந்த
விதை
முட்டி
மோதி
தோற்று
மலடாகி
மறித்தது
தார் சாலையில்.

- அ.கரீம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.