நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் நாம் ஏற்கெனவே சொன்னது போல தமிழக அரசியல் களத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி 60 ஆண்டுகால திராவிட அரசியல் கட்சிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்து இருக்கின்றது. இப்படியான ஒரு மாற்றம் வரும் என்று தேர்தலுக்கு முன்பே நம்மை போன்ற சாதாரண மக்களுக்கு தெரிந்த கள எதார்த்தம் கூட 60 அண்டுகளாக கட்சி நடத்துபவர்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்தான்.
திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் மிகப்பெரும் நம்பிக்கையில் தேர்தலில் களமாடின. அதிலும் குறிப்பாக திமுக நூறு ஓட்டு, இருநூறு ஓட்டு உள்ள கட்சிகளை எல்லாம் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே மிகப் பெரிய கூட்டணி வைத்து தேர்தலில் களமாடியது.
திமுக தனக்கு மிகப்பெரும் பலமாக கருதியது அது விலைக்கு வாங்கியிருந்த ஊடகங்களைத்தான். கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊடகங்களை அண்ணா அறிவாலயத்தின் கொத்தடிமைகளாக திமுக மாற்றி வைத்திருந்தது. எந்த ஊடகத்தில் வேலை பார்த்தாலும் திமுகவின் குரலாக பலர் வேலை செய்தார்கள்.
குறிப்பாக புற்றீசல் போல யூடியூப் சேனல்கள் பல உருவாக்கப்பட்டு தமிழ்நாட்டு மக்கள் மீது பெரும் கருத்தியல் போரே கட்டவிழ்த்து விடப்பட்டது. தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக இடைவிடாமல் யூடியூப் ஓதுவார்கள் ஓதிக் கொண்டிருந்தார்கள்.
ஏசி அறைகளில் உட்கார்ந்து கொண்டு நாம் என்ன வாந்தி எடுத்தாலும் மக்கள் நம்பி விடுவார்கள் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தார்கள். முன்னால் புரட்சிகர ஓடுகாலிகளில் சிலர் தங்கள் பங்கிற்கு தமிழ்நாட்டு கார்ப்ரேட் ஸ்டாலினை ரஷ்ய ஸ்டாலினாக மக்களுக்கு புரோமோட் செய்தார்கள். எந்தக் கட்சியை கார்ப்ரேட் கட்சி, மக்களை சுரண்டும் கட்சி, வர்க்க எதிரி, இவர்களை ஒழித்தால்தான் புரட்சி பூத்துக் குலுங்கும் என்று நரம்பு புடைக்க உச்சி முடி நட்டுக் கொள்ளும் அளவிற்கு வீர வசனம் பேசினார்களோ கடைசியில் அதே கட்சி மேடையில் ஸ்டாலினை தொழுது பக்தி பரவசத்தில் பாக்களை பாடிக் கொண்டிருந்தார்கள்.
ஆடுரா ராமா தாண்டுரா ராமா என்று தமிழ்நாட்டில் இருக்கும் பல அறிவு ஜீவிகளை கழக கண்மணிகள் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களும் கிடைத்தவரை லாபம் என்று நாக்கை விற்று வயிறு வளர்த்தார்கள்.
ஆனால் மக்கள் இவர்களின் வெற்று பசப்பல்களை மயிறு அளவிற்கு கூட மதிக்கவில்லை. எப்படி மதிப்பார்கள்? படித்த முடித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை, அப்படியே வேலை கிடைத்தாலும் மலிவான சம்பளம், மலிவான சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தாலும் பணி நிரந்தரமின்மை, போதாத குறைக்கு 24 மணி நேரமும் காவல்துறையின் துணையோடு கட்சி ரவுடிகள், உள்ளுர் அரசியல்வாதிகள் என அனைவரையும் கைக்குள் வைத்துக் கொண்டு நடத்தப்பட்ட சாராய சாம்ராஜ்ஜியம், சந்து பொந்தெல்லாம் விற்கப்பட்ட கஞ்சா இதனால் சமூகம் முழுவதும் அலைபோல எழுந்த பெண்களுக்கு எதிரான வன்முறை, கொலை, கொள்ளை, ரவுடிசம் என ஒட்டுமொத்த சமூகமே சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடந்தது.
இவற்றை எல்லாம் அம்பலப்படுத்த வேண்டிய ஊடகங்கள் அனைத்தும் வரலாறு காணாத இழிநிலைக்கு தள்ளப்பட்டது. திமுகவிற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது அல்சேசன் நாய்களாக ஊடக கொத்தடிமைகள் கடித்துக் குதறினார்கள்.
சமூகம் எல்லாவற்றையும் உற்று நோக்கியது என்பதை இந்த உபிக்களும் கொத்தடிமைகளும் உணர்ந்து கொள்ளவில்லை. குறிப்பாக விஜயின் ரசிகர்களை தற்குறிகள் என்றது, குரங்குக் கூட்டம் என்றதெல்லாம் இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
திமுகவிற்கு இருந்த ஒரே நம்பிக்கை இந்த கொத்தடிமை கூட்டமும், பணபலமும்தான். எப்படியும் பணத்தை வாரி இரைத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று உறுதியாக நம்பியது. சொன்னார்போலவே இதுவரை இந்திய தேர்தல் வரலாறு காணாத வகையில் வாக்களர்கள் மீது பணமலை பொழியப்பட்டது. அண்டா, குண்டா, தங்கக்காசு, வெள்ளிக் கொலுசு,குக்கர், மிக்சி என பொதுமக்களே மிரண்டு போகும் அளவிற்கு பணம் வாரி இரைக்கப்பட்டது.
என்ன செய்து என்ன பயன்? மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று.
தனிநபர் செல்வாக்கு, சாதி செல்வாக்கு, பணபலம், குண்டர்கள் பலம் என அனைத்தையும் உடைத்தெரிந்து புதிய நபர்களை, இளைஞர்களை மக்கள் தேர்தெடுத்து இருக்கின்றார்கள். சென்னை எங்கள் கோட்டை, திருச்சி எங்கள் கோட்டை, கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை என வீரவசனம் பேசிய குறுநில மன்னர்களின் எண்ணங்களுக்கு எல்லாம் மக்கள் வேட்டு வைத்தார்கள்.
பழம் தின்றுகொட்டை போட்ட அரசியல்வாதிகள் எல்லாம் புதியவர்களிடம் மண்ணைக் கவ்வினார்கள்.இதனால் தங்க முடியாத வயிற்றெரிச்சலில் தூக்கத்தை தொலைத்து இன்னமும் பிரமை பிடித்தவர்கள் போல சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
திமுக மீது மக்களுக்கு எந்த அளவிற்கு கோபம் இருந்தது என்பதற்கு அக்கட்சியின் சார்பில் தோல்வியடைந்த திமுகவின் முக்கிய முகங்களே சாட்சி!.
திமுகவின் 15 அமைச்சர்கள் படு தோல்வி அடைந்தனர். அதில் குறிப்பிடத்தக்க தோல்விகளில் ஒன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகும்.
பத்து தோல்வி பழனிசாமி என்று எடப்பாடியை வம்பிழுத்தவர்கள் தொந்த தொகுதியில் தூக்கியெறியப்பட்டார்கள். ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு எவ்வளவோ செய்திருக்கின்றார். அந்தத் தொகுதியை சிங்கப்பூரைப் போல மாற்றி வைத்திருந்தார். எனவே அவருக்கு ஓட்டு போடாத கொளத்தூர் தொகுதி மக்கள் நன்றி கெட்டவர்கள் என்றெல்லாம் கல்லடி பட்ட நாயைப்போல கழக கண்மணிகள் இன்னமும் கத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்னும் பலரோ என்ன இருந்தாலும் ஸ்டாலின் தோற்றதில் எனக்கு வருத்தம், அவர் கண்டிப்பாக ஜெயித்து சட்ட மன்றம் சென்றிருக்க வேண்டும் என பினாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஒரு காற்றாட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது சிக்கிய எல்லாமே சின்னாபின்னமாகத்தானே செய்யும். அதில் ஸ்டாலின் என்ன? அவரின் ஆஸ்தான கொத்தடிமைகள் என்ன? அனைவரும் அடித்துக் கொண்டு போக வேண்டியதுதானே!
அப்படித்தான் குறுநில மன்னர் துரைமுருகனும் காட்பாடி தொகுதியில் 7,643 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மா.சுப்பிரமணியம் சைதாப்பேட்டை தொகுதியில் 28,514 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மதுரை மத்திய தொகுதியில் பழனிவேல் தியாகராஜன் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்), எம். மதிவேந்தன் (ராசிபுரம்) எஸ். முத்துசாமி (ஈரோடு மேற்கு), பி.கீதாஜீவன் (தூத்துக்குடி), ஆர். ராஜேந்திரன் (சேலம் வடக்கு), மற்றும் பி. மூர்த்தி (மதுரை கிழக்கு) ஆவடியில் எஸ்.எம். நாசர் ஆகியோரும் மண்ணைக் கவ்வினார்கள்.
திமுக அதன் அரசியல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றது கிடையாது. இனியும் அதற்கான வாய்ப்பு எள்ளளவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் திமுக ஒருபோதும் இனி ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது.
சமூக ஊடகங்கள் இவ்வளவு வளர்ந்திருக்கும் காலத்தில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக வெளிப்படையாக பார்களில் சாராயம் விற்ற கும்பலை, மணற்கொள்ளை நடத்திய கும்பலை, கனிம வளங்களை கொள்ளையடித்த கும்பலை இதுவரை தமிழக மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.
மன்னர் குடும்பம் தமிழ்நாட்டை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து கொள்ளை அடிக்கலாம் என்ற நினைப்பில் ஐந்தாண்டுகளாக செய்த அயோக்கியத்தனத்திற்கெல்லாம் விஜய் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார்.
தவெக ஒரு நல்ல ஆட்சியை தருமா என்று நமக்குத்தெரியாது. ஆனால் சாமானிய மக்கள் விஜய் அவர்களின் மீது பெரும் நம்பிக்கையை வைத்திருக்கின்றார்கள். அந்த மக்களின் நம்பிக்கையை அவர் ஏமாற்ற மாட்டார் என்று நம்புகின்றோம்.
ஆட்சிக்கு வந்தவுடன் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த 700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. அரசு ஒப்பந்த்தாரர்கள் இந்த அரசில் கமிசன் முறை ஒழிக்கப்பட்டு வெளிப்படையான நிர்வாகம் நடப்பதாக சொல்கின்றார்கள், பல சட்டவிரோத குவாரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. பழைய ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றசாட்டுகள் விசாரிக்கப்படும் என்று தெரிகின்றது.
ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட முடியாத நிலையில் நாம் பெரிய எதிர்பார்ப்பை எல்லாம் அவர்கள் மீது திணிக்க முடியாது என்று நமக்குத் தெரியும். பல ஆண்டுகளாக ஊழலில் மூழ்கி முத்தெடுத்த அதே அரசு ஊழியர்களை வைத்துக் கொண்டுதான் இவர்கள் வேலை செய்தாக வேண்டும். மாற்றம் என்பது ஒரே நாளில் வரவேண்டும் என்றில்லை. ஆனால் அதை நோக்கிய பயணம் நேர்மையாக இருந்தால் நிச்சயம் நினைத்த மாற்றத்தை அடைய முடியும்.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசுக்கு வாழ்த்துகளை சொல்லிக் கொள்வோம். நேர்மையான விமர்சனங்களை தொடர்ந்து முன்னெடுபோம்.
- செ.கார்கி