யாரும் எதிர்பார்த்திராத வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன!

திமுக, அதிமுக கட்சிகளின் இரண்டு பெரும் கூட்டணிகளையே பின்னுக்குத் தள்ளி விட்டு, நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் 'தமிழ்நாடு வெற்றிக் கழகம்' என்னும் கட்சி 108 இடங்களில் வென்றிருக்கிறது!

இப்படி ஒரு புதிய கட்சி தமிழ்நாட்டில் இவ்வளவு இடங்களை முதல் தேர்தலிலேயே பெற்றிருப்பது மிகப் புதிது! அதே மாதிரி, தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டிருப்பதும் 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது நிகழ்ந்திருக்கிறது!

இந்தச் சூழலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை இந்த நிமிடம் வரையில், யாராலும் கணிக்க முடியவில்லை! எதுவும் நடக்கலாம் என்னும் நிலைதான் நீடித்து வருகிறது!

காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று, தவெக விற்கு ஆதரவு கொடுத்த பின்னும், இன்னும் ஐந்து இடங்கள் ஆட்சி அமைக்க விஜய் கட்சிக்குத் தேவைப்படுகிறது!

இதற்கு இடையில், திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்னும் செய்தியும் வெளிவருகிறது!

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்குச் சான்றாகவே, இன்றைய நிலைமை அமைந்துள்ளது!

மக்களுக்கு இதுவரையில் எதையும் செய்திராத, எந்தத் தெளிவான கொள்கையும்இல்லாத விஜய் கட்சிக்கு மக்கள் வாக்களித்திருப்பது ஒரு குழப்பத்தைத் தருகிறது என்றால், இன்னொரு பக்கம் திமுக அதிமுக இணைந்து ஆட்சியை அமைக்கக் கூடும் என்னும் செய்தி அதைவிடக் கூடுதல் குழப்பத்தைத் தருகிறது!

மொத்தத்தில் தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழல், ஆரோக்கியமானதாகவோ, மகிழ்ச்சி தரக்கூடியதாகவோ இல்லை என்பதே கசப்பான உண்மை!

- சுப.வீரபாண்டியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.