கட்டுச்சோறு மூட்டை என்று தென்பகுதி கிராமங்களில் ஒரு சொல் உண்டு. அதில் கூட்டு, பொரியல், ஊறுகாய், சோறு போன்றவை ஒரு பொட்டலமாக இருக்கும்.

தேர்தல் நெருங்கி வருகிறது. என்டிஏ கூட்டணியில் சேர அழைத்தாலும் யாரும் வரவில்லை. என்ன செய்வது? அதிமுக, பாமகவின் ஒரு பிரிவு, ஐ.ஜே.கே, தமிழ் மாநிலக் காங்கிரஸ் போன்ற நிழல் கட்சிகளை எல்லாம் மிரட்டி சோற்று மூட்டைக் கூட்டணியாக வைத்திருக்கிறது பா.ஜ.க.

பாஜக தமிழகத்தில் போணியாகாது. அதிமுக, பாஜகவிடம் தேய்ந்து கொண்டு இருக்கிறது. திமுகவுக்கு எதிரான சக்தி இல்லையே!

அப்போது மாட்டியதுதான் நடிகர் விஜயின் தவெக.

கட்சியை ஆரம்பித்தார். ஈரோடு போனார். 41 உயிர்கள் பலியாயின. பறந்து போனார் பனையூருக்கு. கட்சியில் எல்லோரும் தலைமறைவு. 'ஜனநாயகன்' வந்தான். தணிக்கைச் சிக்கலில் மாட்டிக் கொண்டான்.

அந்த தவெக கட்சியில் - ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆன்ந்த், செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்பட யாரும் அரசியல் பேசவில்லை, தேர்தல் களம் நோக்கிச் செல்லவில்லை அமைதி, அமைதி, அமைதி!

ஆனால் திமுகவுக்கு எதிராக தவெக வந்து விட்டது, கணிசமான ஓட்டைப் பிரிக்கப் போகிறது, விஜயுடன் காங்கிரஸ் போகப் போகிறது, தவெக பிள்ளையார் சுழி போட்டு விட்டது. திமுகவுக்குப் போட்டியாக வந்து விட்டார் விஜய், விஜய்,விஜய் என்று முடிந்தவரையும் கூப்பாடு போட்டுப் பார்த்து விட்டன பார்பனப், பார்ப்பனச் சார்பு ஊடகங்கள். அதாவது திமுகவுக்கு எதிராக வேலை செய்கிறதாம் அவை.

மக்களுக்குத் தெரியாத அரசியலா என்ன?

அமித்ஷாவின் சர்க்கசையும், சில ஊடகங்களின் அரிதார வேலைகளையும் தேர்தல் முடிவுகளின் மூலம் புஸ்வாணமாக்க இருக்கிறார்கள், மக்கள்.

கிழக்கில் உதிக்கும்! உச்சிக்கு வரும்! மக்களோடு மக்களாக இருக்கும் எங்கள் உதயசூரியன்!

- கருஞ்சட்டைத் தமிழர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.