"முயலுடன் ஓடிக் கொண்டே வேட்டை நாய்களை வைத்து வேட்டையாட முடியாது"
 
நடராஜா பாலசுப்ரமணியம் (பிஎஃப்எல்டி -யுகே)

"அரசாங்க தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக மேற்கு நாட்டு அரசியல் தலைவர்கள் தாக்குதலை நடத்தியவர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் மனித உரிமைகள் பற்றி பேசுகின்றனர், ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர், இருந்தாலும் த்ங்களது சுயநல அரசியலை மறப்பதில்லை என்பதை தெரிந்துகொள்ளலாம்" என்று 2011 செப்டம்பர் 19ம் தேதி ஜெனீவா லயோலா பல்கலை கழகத்தில் ஈழத்தமிழர் பற்றி பேசிய சமூகவியல் அறிஞரும் பேராசிரியருமான ஜான் பி. நீல்சன் பேசினார். மேற்கு நாடுகளின் அரசாங்கங்கள் மீது தமிழர்கள் வைத்திருந்த நம்பிக்கையின் அனுபவம் பற்றிப் பேசிய அவர், "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (டிஜிடிஈ) அல்லது குளோபல் தமிழ் ஃபோரம் (ஜிடிஎஃப்) ஆகிய அமைப்புகள் மேற்கு நாடுகள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். ஆனால் நீங்கள் அவ்வாறு செயல்படாதீர்கள் என்று நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அழுத்தம் திருத்தமாக பேசினார்.

"இலங்கைக்கு ஆதரவாக, உங்களது போராட்டத்தை குற்றமாக்குவது உங்களை மடக்குவதற்காக செய்வதாகும். ஆனால் நீங்கள் அதற்கு மடங்கிவிடாதீர்கள்", என்று பேராசிரியர் நீல்சன் தக்க தருணத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"என்னைப் பொறுத்தவரை நாடுகள் என்பவை உலக ஆதிக்கத்திற்காக சதுரங்க அட்டையில் ஆடப்படும் மாபெரும் ஆட்டத்தில் நகர்த்தப்படும் காய்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று இந்தியாவின் வைசிராயான கர்ஸான் பிரபு 1898-ம் ஆண்டு கூறினார். சதுரங்கத்தில் போர்வீரன் பதவி உயர்வு பெறும் நிலை உண்டு. அமெரிக்ககா, டிஜிடிஎஃப் மற்றும் ஜிடிஎஃப் ஆகிய இரண்டையும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான அடுத்தகட்ட பதவி உயர்வாக நகர்த்த பயன்படுத்த உள்ளது. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இதற்கு பலிகடாவாக ஆகும் வரை அல்லது யுஎஸ், யுகே நிதியளிக்கும் குழுக்களில் இருக்கும் வரை அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதோடு மற்ற தமிழர்களையும் ஏமாற்றுவார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தற்போது இந்த பிரச்சனையில் என்ன நிலை எடுக்கிறார்கள் என்பதை முடிவு செய்ய வேண்டிய உச்சகட்ட நேரம் இதுவே. நீங்கள் முயல்களுடன் ஓடிக்கொண்டே வேட்டை நாய்களை வைத்து வேட்டையாட முடியாது. ஈழத்தமிழர்கள் போரால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் போருக்குப் பின்னரான இலங்கை அரசாங்க அரசியல் நடவடிக்கைகளுக்கும் பலிகடாவாகி வருகின்றனர். உண்மையில் இது மாற்று வடிவிலான போரின் தொடர்ச்சி அல்லது இது வெளிப்படையான இனப்படுகொலையின் தொடர்ச்சியே ஆகும். மேலும் இனப்படுகொலையின் பங்குதாரர்கள், கிழக்கு மற்றும் வடக்கு இலங்கையில் அது தமிழர்களின் தாய்நிலம் என்பதற்கான அனைத்து தடயங்களையும் அழித்து, இலங்கை தனது இனப்படுகொலையை அலட்சியப்படுத்தி இன அழிப்பை முழுமையாக அரங்கேற்ற ஊக்கமளித்து வருகின்றன.

எல்டிடிஈயின் ராணுவ பலம் தோற்கடிக்கப்பட்ட பின், ஈழத்தமிழர்களின் உணர்வுகள் சிதறடிக்கப்பட்டுள்ளன. ஈழத்தமிழர்களாகிய நாம் நமது அறியாமை மற்றும் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டு இருக்கிறோம். உண்மையில் நாம் தோல்வி மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆனால் தமிழர்களான நாம் வலிமையானவர்கள், நம்முடைய நண்பர்களும் உண்மையானவர்களாக இருக்க வேண்டும். நீதியும் தார்மீக காரணங்களும் நம்பக்கமே உள்ளன. தமிழினப் படுகொலையைச் செய்த இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் குற்ற உணர்வால் ஆட்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கான நம்பகமான விளக்கத்தை அவர்களால் கொடுக்க இயலவில்லை.

ஈழ நாடு, என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகவோ அல்லது அங்கீகரிக்கப்படாதாகவோ ஒரு தேசமாக உள்ளது. 26-11-2003 அன்று ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத் துறை அமைச்சரான திரு கிரிஸ் பேட்டன் வன்னிக்கு சென்று நமது தலைவர் பிரபாகரனை சந்தித்தது இதனை அரசாங்க ரீதியாக அடையாளம் காட்டியதாகவே உள்ளது. இந்த உண்மை நமது நினைவலைகளில் நிற்கிறது. இதுவே நமக்கு ஊக்கத்தை தருவதாக உள்ளது. தாய்நாட்டில் உள்ள நமது உறவுகள், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்றுள்ள வெற்றி வீரனான இலங்கை அரசாங்கம் அளிக்கும் லஞ்சத்தையும் அச்சுறுத்தலையும் அலட்சியப்படுத்தி நமக்கு ஒரு நல்ல பாடத்தை கற்றுத் தந்துள்ளனர்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்த பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்கு பற்றிய கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. என்டிடிவியின் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர விவகார ஆசிரியர் நிதின் ஆனந்த் கோகலேயின் புத்தகமான ஸ்ரீ லங்கா- ஃப்ரம் வார் டூ பீஸ் இந்த கேள்விக்கு பதில் அளிக்கிறது. இந்தியா இலங்கைக்கு ஹெலிகாப்டர்களை அளித்து உளவுத்துறை தகவல்கள் மற்றும் இந்திய கப்பற்படையின் உதவியுடன் விடுதலைப் புலிகளின் கப்பல்களை தகர்க்க உதவி புலிகளின் வாசல்க் கதவுகளை மூடியது. புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா எத்தனை சதவீதம் உதவியது என்ற கேள்வியை எழுப்பும்போது 'சுமார் 25 சதவீதம்' என்று பதில் வருகிறது. மேலும் அவர் துணிச்சலாக, "சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு வெறுமனே படைக்கருவிகளை மட்டுமே வழங்கியபோது, இந்தியா இலங்கைக்கு புலிகளை வீழ்த்தும் இறுதி அடியை (நாக் அவுட் பஞ்ச்) கொடுத்தது" என்று கூறுகிறார்.

"நாங்கள் ரஷ்யத் தயாரிப்பான எம்ஐ-17 ஹெலிகாப்டர்களை கொடுத்து, அவற்றை அவர்களது நாட்டு வண்ணத்தில் இயக்க சொன்னோம்" என்று அவர் குறிப்பிடுகிறார். போரில் சிங்களவர் ராணுவமாக செல்ல விரும்பவில்லை. ஆனால் நாங்கள் அவர்களுக்கு மனித சகிப்புத்தன்மை, விடாமுயற்சி மற்றும் தைரியத்திற்கான உச்சக் கட்ட சோதனைக்கு உட்பட்ட ஒரு ராணுவத்தை கொடுத்து அவர்களது சீருடையில் போர்புரியச் சொன்னோம்" என்பதை அவர் சொல்லவில்லை. எந்தவொரு நாட்டையும் விட தாய்நாட்டுக்கான போரில் உயிர்த்தியாகம் செய்துள்ள, உலக ராணுவத்தில் தலைசிறந்த ஒன்றாக கருதப்படும் இந்திய ராணுவத்தை குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவது என்பது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் யூகிக்க முடியும். அதனை தவிர்க்கவே இந்தியா முயன்று வருகிறது.

இலங்கை விஷயத்தில் இந்தியா மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகள் கோழைத்தனமானவையும் தீர்மானமில்லாதவையும் உள்ளன. 'ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை ஒருபுறம் மனதில் வைத்துக் கொண்டு, மறுபுறம் இலங்கை, துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் சீனா-பாகிஸ்தான் ஆதரவுக்கு எதிராக குள்ளநரித்தனமாக செயல்பட்டது.

"குறுகிய கால ஓட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இந்திய பெருங்கடலில் நடைபெறும் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டால் நீண்ட கால அடிப்படையில் அது பெரிதும் அவதிப்பட வேண்டியிருக்கும். அவர்கள் சீன டிராகனை விட மாபெரும் இந்தியா தீங்கில்லாதது என்பதை இன்னமும் உணராமல் இருக்கலாம்" என்று ஓய்வு பெற்ற கர்னல் (டாக்டர்) அனில் அத்தாலே கூறுகிறார்.

2008 பிப்ரவரி 20ம் தேதி "ஸ்ரீ லங்கா'ஸ் ரிடர்ன் டூ வார்- லிமிட்டிங் த டேமேஸ்" என்ற தலைப்பிடப்பட்ட சர்வதேச சிக்கல்கள் குழு அறிக்கையை படித்தால், யாரும் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தில் வல்லரசுகளின் சதித் திட்டம் என்னவென்று புரிந்துகொள்ள முடியும்.

புலிகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் அவர்கள் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளில் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது –

"....அமைதிக்கு ஆதரவு தெரிவிப்போர் தனிநாடு கோரிக்கையை துறக்க ஒரு காலக்கெடு வைக்க வேண்டும். அதன் பின் அவர்கள் தற்போதைய புலித் தலைவர்கள் மீதான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மீது மும்முரமாக நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்...."

ஆக புலித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வல்லரசுகளின் முகவர்கள் இனப்படுகொலைக்கு முன்பே திட்டமிட்டு விட்டனர். எனவே இனப்படுகொலைக்காக ஐநா மீது யாராவது குற்றம் சொல்ல முடியுமா?

தமிழில் தேவன்

Pin It