தமிழக முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை (பக்ரீத் பண்டிகை) கொண்டாடுவ தற்கான முன்னேற்பாடுகளில் ஈடு பட்டிருக்க. பெருநாளைக்கு முன் தினமான 26ம் தேதி வெள்ளிக்கி ழமையன்று பிரசித்தி பெற்ற முஸ்லிம் நகரமான இளையான்குடியில் மட்டும் பெரும் பதட்டம் நிலவுவ தாக கிடைத்த தகவலை அடுத்து விசாரணையில் இறங்கினோம்.

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இளையான்குடி முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் நகரமாகும். இந்த ஊரில் உள்ள முஸ்லிம்களும், இந்து சமயத்தவர்களும் மாமன் - மச்சான் உறவுகளோடு ஒற்றுமையு டன் இருப்பதை கெடுக்கும் வகையில் பாஜக மாநில துணைத் தலைவர் ஹெச். ராஜா பேசிய விஷப் பேச்சு அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் மாநில மருத்துவரணிச் செயலா ளர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட் டார். இதனையடுத்து தமிழகத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்து விட் டதாகவும், சட்டம் ஒழுங்கு மோசமாக உள் ளதாகவும் குற்றம்சாட்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கி ழமை இளையான்குடி பேருந்து நிலையத் திற்கு எதிரில் உள்ள திடலில் காலை 11 மணிய ளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது பாஜக.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஹெச். ராஜா, முஸ்லிம்களை தீவிரவாதிகள், மனித நேயம் அற்றவர்கள் என்று பேசியது மட்டுமல்லா மல் நாடு முழுவதும் முஸ்லிம்கள் தொடர்ந்து கொலை பாதகச் செயல்களில் ஈடுபடுவதாக கூறினார். மேலும் மனித நேய மக்கள் கட்சியையும், அதன் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பின ரான ஜவாஹிருல்லாஹ்வையும் தரக்குறை வான முறையில் விமர்சித்துள்ளார். ஆர்ப் பாட் டம் நடக்கும் இடத்திற்கு எதிரில் நெசவுப் பட்டறை பள்ளிவாசல் இருப்பதால் ஆர்ப் பாட்டம் நடந்த நேரம் ஜுமுஆ நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்ததாலும் ஜுமுஆ தொழுகைக்காக பள்ளி வாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு ஹெச். ராஜாவின் மதவெறிப் பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்சகட்டமாக முஸ்லிம்களை நாய்களுக்கு சமமாக மதிப்பதாக ஹெச். ராஜா பேசியதைக் கண்டு பொறுக்க முடியாத முஸ்லிம் இளைஞர்கள் ஆர்ப்பாட்ட திட லருகே சென்று ஹெச். ராஜாவி டம், அவர் பேசியதை உடனடி யாக வாபஸ் வாங்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண் டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர். இதனால் அவசர கதியில் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு பாஜக நிர்வாகிகள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதனை யடுத்து சம்பவம் அறிந்து மேலும் திரண்ட அப்பகுதி மக்கள் மத வெறியைத் தூண்டும் வகையில் பேசிய ஹெச். ராஜாவை உடன டியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட முஸ்லிம்களிடம் இளையான்குடி இன்ஸ்பெக்டர் சமாதானப் பேச் சில் ஈடுபட்டிருந்த வேளையில் ஹெச். ராஜா தலைமையில் மீண்டும் அந்தப் பகுதிக்கு வந்து சிறிது தூரத்தில் நின்று கொண்ட பாஜகவினர், முஸ்லிம்களைப் பார்த்து மறுபடியும் தரக்குறை வாகப் பேசியுள்ளனர். ஹெச்.ராஜா உடன் வந்த ஒருவர் செருப்பை தூக்கி காட்டியதால் ஆத்திரம் அடைந்த மக்கள் அவர்களை தாக்க முற்பட்டனர். மக்களின் ஆவேசத்தைக் கண்ட ஹெச். ராஜாவும், பாஜக தொண் டர்களும் அங்கிருந்து ஓடி விட்ட னர்.

உஷாரான காவல்துறை உடன டியாக சிவகங்கையிலிருந்து போலீஸôரை வரவழைத்து பாது காப்பை பலப்படுத்தியது. மதவெ றியை தூண்டும் வகையில் பேசிய ஹெச். ராஜா மற்றும் பாஜகவி னர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளையான் குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் பெருமள வில் குவிக்கப்பட்டிருந்த போதி லும் மக்களிடையே பதட்டம் முழுமையாக தணியவில்லை. மருது பாண்டியர் பிறந்த நாள், தேவர் ஜெயந்தி ஆகிய நிகழ்ச்சிக ளுக்காக மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேண பெரும் பிரயத் தனம் காட்ட வேண்டியுள்ள நிலையில், பாஜகவினரின் போரா ட்டத்தை மாவட்டத்தின் வேறு பகுதிக்கு மாற்றாமல் முஸ்லிம் கள் அதிகம் உள்ள பகுதியில் நடத்த காவல்துறை எப்படி அனுமதி தந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.

எங்கெல்லாம் மதக் கலவரங் கள் நடந்ததோ அந்தப் பகுதிக ளில் எல்லாம் இம்மாதிரியான மதவெறிப் பேச்சுகள்தான் தூண் டுகோலாக அமைந்தது என்பது காவல்துறை மிக நன்றாகவே அறிந்து வைத்திருக்கும் உண்மை. காவல்துறை இம்மாதிரியான மதவெறிப் பேச்சுகளை பேசுபவர் கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும். சிறிய பொறி ஏற்படும்போதே அதை அணைக்காவிட்டால் அது பெரும் தீயாக மாறி தீர்க்க முடி யாத பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்பதை காவல்துறை உணர்ந்து கொண்டால் சரி.

தரக்குறைவான பேச்சுதான் பிரச்சினைக்கு காரணம்!

இளையான்குடி சம்பவம் குறித்து மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட மக்கள் தொடர்பாளர் ஷேக் இப்ராஹிம் நம்மிடம், “பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள "வாள் மேல் நடந்த அம்மன் கோவில்' திடலில் பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஹெச். ராஜா, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைப் பற்றியோ, மின் தடை பற்றியோ பேசி அரசை கண்டிக்காமல் தேவையில்லாமல் மனித நேய மக்கள் கட்சி யையும், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல் லாஹ்வையும் தரக்குறைவாக பேசியதுதான் பிரச்சினை யின் துவக்கம்.

ஹெச். ராஜாவை கைது செய்யக் கோரி மக்கள் சாலை மறியல் நடத்திக் கொண்டிருந்தபோது ஜமாஅத் பெரியவர்களும், மனித நேய மக்ககள் கட்சியின் மாநிலச் செயலாளர் மௌலானா நாசரும் மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தனர். கூட்டம் கிட்டத்தட்ட கட்டுக்குள் வந்த நிலை யில் பாஜக தரப்பைச் சேர்ந்த ஒருவர் செருப்பை தூக்கி காட்டியதுதான் பிரச்சினை பெரிதாகக் காரணம். காவல்துறையினர் சாக்கு போக்கு சொல்லாமல் ஹெச். ராஜா மீதும், பாஜகவினர் மீதும் கடுமையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண் டும்...'' என்றார் கோபமாக!

ராஜாவின் மதவெறிப் பேச்சு புதிதல்ல!

நம்மிடம் பேசிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா, “ரமலான் பெருநாளின்போதும் மெஹந்தி யின் பெயரால் வதந்தி பரப்பப்பட்டு முஸ்லிம்கள் பெருநாளை கொண்டாட விடாமல் பதட்டம் ஏற்படுத்தப்பட்டது.

இப்போது பாஜகவினர் ஹஜ்ஜுப் பெருநா ளைக்கு முதல் நாள் ஆர்ப்பாட்டம் நடத்தி மதவெ றிப் பேச்சுகளை பேசி பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளனர். ஹெச்.ராஜா இதுபோன்ற மதவெறிப் பேச்சு களை இளையான்குடியில் பேசுவது இது முதல் முறை யல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, “இளையான்குடி யில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள். இளையான்குடி இந்தியாவில் இருக்கிறதா? பாகிஸ்தானில் இருக்கிறதா?'' என்று பேசி பதட்டத்தை ஏற்படுத் தியவர்தான் இந்த ராஜா.

பண்டிகைக்கு முதல் நாள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுத்து இருப்பதும், ஆர்ப்பாட் டத்தை காவல்துறை வீடியோ எடுக்கவில்லை என்று சொல்வதும் காவல்துறை மீது சந்தேக த்தை ஏற்படுத்துகிறது.

தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் மதவெறிப் பேச்சுகளை பேசி வரும் ஹெச்.ராஜாவை காவல்துறை உடனடி யாக கைது செய்ய வேண்டும். அதுதான் இளையான்குடி யில் அமைதிக்கு வழிவகுக்கும்...'' என்றார் சமூக அக்கறையுடன். என்ன செய்யப் போகிறது காவல்துறை?

Pin It