ஹைதராபாத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற கலவரம் குறித்து சிவில் உரிமைகளுக்கான கண்காணிப்பு கமிட்டி என்கிற மனித உரிமை அமைப்பின் மூலம் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு ஹைதராபாத் கலவரத்திற்கான காரணத்தையும், அதற்கு காரணமானவர்களையும் அடையாளப்படுத்தியிருக்கிறது.

சமூக சேவகரும் மனித உரிமை ஆர்வலருமான பேரா. ரிஹானா சுல்தானா தலைமையில், லத்தீப் முஹம்மது கான், கனீஸ் ஃபாத் திமா, ஷெஃபாலி ஜா, எஸ்.கியூ மசூத், எம். மந்தாக்கினி, யஹ்யா கான், முஹம்மது இஸ்மாயில் கான் உள்ளிட்ட சமூக ஆர்வலர் கள் உண்மை அறியும் குழுவின ராக செயல்பட்டு ஹைதராபாத் தில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

"ஹைதராபாத்தில் பரவிய வகுப்புக் கலவரம் திடீரென்று ஏற்பட்ட கலவரமல்ல. சமீப கால மாக ஆந்திரப் பிரதேசத்தில் வகுப்புப் பதட்டங்கள் அதிக ரித்து வருகின்றன.

தெலுங்கானா பகுதியில் தாக் கத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு பெரும் சதித் திட்டத்தின் தொடர்ச்சியின் ஒரு பகுதிதான் இந்தக் கலவரம்.

அரசியல் அதிகாரம் பெறுவ தற்காக, தனித் தெலுங்கானா மாநிலத்திற்கான பிராந்திய இயக் கம் பாஜகவால் கைப்பற்றப்பட் டுள்ளது.

மதக் கலவர சூழல்களை உருவாக்க இவர்கள் (பாஜகவி னர்) ஆர்.எஸ்.எஸ். இயக்கவாதிக ளுடன் இணைந்து தீவிரமாக பணியாற்றுகிறார்கள். மக்கள் மத்தியில் மத உணர்வுகளை ஊட்டுகிறார்கள். இதன் மூலம் இப்பிராந்தியத்தில் மத வெறுப்பு ணர்வு அதிகரித்து வருகிறது. இப் பகுதி மக்கள் ஆபத்தான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். இந்துத் துவா பாசிச சித்தாந்தத்திற்கு அவர்கள் இலக்காகி வருகிறார் கள்.

இதற்கு உதாரணமாக, பைஹின்ஸô, கறீம் நகர், சித்தி பேட், நிஜாமாபாத், சங்கரெட்டி, மேடக், மஹபூப் நகர், நல கொண்டா, ஹைதராபாத்தின் பல பகுதிகள் என 2010 முதல் தொடர்ந்து அவ்வப்போது ஏற்ப டும் கலவரங்களைச் சொல்ல லாம்' என்று சமீபத்திய ஹைதரா பாத் கலவரத்தின் பின்னணியை அலசும் உண்மை அறியும் குழுவி னர்,

2011ல் பக்ரீத் பண்டிகைக்குப் பின், முஸ்லிம் இளைஞர்களின் கழுத்தை கிழித்து ஹிந்து வாஹி னியினர் நடத்திய கொடூரத் தாக் குதல் மூலம் கலவர சூழல் உச் சத்தை அடைந்தது.

ஹிந்து வாஹினி அமைப்பி னர் இந்த தாக்குதலை நடத்தி விட்டு, “நீங்கள் எங்கள் பிராணி களின் (பசு) குரல் வளையை அறுத்தால், நாங்கள் உங்கள் குரல்வளையை அறுப்போம்...'' என பகிரங்கமாக அறிவித்தனர்.

முஸ்லிம் இளைஞர்களின் கழுத்தை அறுத்தது ஹிந்து வாஹினியினர்தான் என ஹைத ராபாத் காவல்துறை சொன்னது. மங்கள்வாத் பகுதியின் தெலுங்கு தேச கட்சியின் மாநகராட்சி உறுப்பினரான ராஜா சிங், முஸ் லிம் இளைஞர்கள் மீதான தாக் குதலுக்கு மூளையாக செயல்பட் டவர்.

இந்த தாக்குதலுக்கு முஸ்லிம் கள் எதிர்வினையை காட்ட வில்லை. மாறாக பெரும் சகிப்புத் தன்மையோடு அவர்கள் அமைதி காத்தனர்.

பெயருக்காக சாதாரண வழக் குகளில் ராஜா சிங்கையும் மற்ற வர்களையும் போலீஸ் கைது செய்து பின்னர் முறையான விசா ரணைகூட செய்யாமல் அவர் களை விடுதலை செய்தது...'' என்று தனது அறிக்கையின் முதல் அத்தியாயத்தை துவக்குகி றது உண்மை அறியும் குழு. இக்குழு வெளியிட்டுள்ள அறிக் கையின் முக்கிய பகுதிகளை வாச கர்களுக்காக செய்தி வடிவில் தருகிறோம்.

முஸ்லிம்களை வம்புக்கிழுத்த இந்துத்துவா 2011ம் ஆண்டு பக்ரீத் தொழு கைக்குப் பின் ஹிந்து வாஹினி அமைப்பினர் முஸ்லிம் இளை ஞர்கள் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு சில நாட்களுக்குப் பின்,

"கஹ்ன்ட்டி பஜாவ் (மணி அடி யுங்கள்) என்கிற ஒரு நிகழ்ச்சிக்கு தெலுங்கு தேச கட்சியின் மாநக ராட்சி உறுப்பினர் ராஜா சிங் அழைப்பு விடுத்தார். வெள்ளிக்கி ழமை முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த நேரத் தில் சார்மினாரை ஒட்டியிருக் கும் கோவிலில் நூற்றுக்கணக் கான ஹிந்து வாஹினி தொ(கு) ண்டர்கள் சரியாக தொழுகை நேரம் பார்த்து மணியடித்து முஸ் லிம்களை வம்புக்கிழுத்தனர். அப்போது முஸ்லிம்கள் அமைதி காத்தனர். அவர்களின் செயலை அலட்சியப்படுத்தினர்.

பின்னர் ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி விழாக்கள் வந்தன. இந்த நேரத்தில்தான் முழு ஹைத ராபாத் நகரமே ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங் தள், ஹிந்து வாஹினி அமைப்பினரின் கட் டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்பது போன்ற பதட்டம் காணப்பட்டது.

அப்போது, இவர்கள் முஸ்லிம் களை கோபப்படுத்தும் எல்லா வகையிலான காரியங்களிலும் இறங்கினர்.

முஸ்லிம் வீடுகளை பார்த்த படி (நேர் எதிராக) இருந்த சாமி சிலைகள், ஹனுமன் போஸ்டர் கள் ஆகியவற்றை அவமதிப்பது, டிரம்ஸ் அடித்து முஸ்லிம்களின் கோபத்தை தூண்டிவிடும் வகை யிலான பாடல்கள் பாடுவது, ஜெய் ஸ்ரீராம், மந்திர் வஹீன் பனேங்கே (பள்ளிவாசலை அங் கேதான் கட்டுவோம்) பாரத் மாதாகீ ஜெய் (பாரத மாதா வாழ்க!) வந்தே மாதரம் (பாரதத் தாயை வணங்குவோம்) என்பது போன்ற வாசகங்களை உரக்க முழங்குவது, முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் அடிக் கடி ரவுண்ட் அடிப்பது போன்ற காரியங்களில் ஹிந்துத்துவாவி னர் ஈடுபட்டனர். ஆனால் முஸ் லிம்கள் அமைதி காத்தே வந்த னர்.

கடந்த சில மாதங்களில் ஹைதராபாத் மதனப்பேட், கர்ம குடா போன்ற பகுதியில் அமைந் திருக்கும் முஸ்லிம் வீடுகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த வாக னங்கள் தொடர்ச்சியாக தீ வைத் துக் கொளுத்தப்பட்டிருக்கின் றன. "நாங்கள்தான் இந்த வாக னங்களைக் கொளுத்தினோம்' என்று ஹிந்து வாஹினி அமைப் பினர் வெளிப்படையாக அறிவித் திருந்த போதும் அவர்களுக்கு எதிராக காவல்துறை எவ்வித நட வடிக்கையையும் எடுக்கவில்லை. முஸ்லிம்கள் புகார் அளித் பின்ன ரும்கூட காவல்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கவில்லை என்பதை அறிய முடிகிறது.

சமீபத்திய வன்முறையின் பின்னணியும், உண்மைகளும் ஹனுமன் ஜெயந்தி அன்று ஹைதராபாத்திற்கு வந்த வி.ஹெச்.பி.யின் தலைவர் பிரவீன் தொகாடியா கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக ஆத் திரமூட்டும் வகையில் பேசியிருந் தார்.

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை கொண்டாட அனுமதிக் கக் கூடாது (முஸ்லிம்கள் நபி (ஸல்) பிறந்த நாளை கொண்டா டக் கூடாதுதான். ஆனால் தொகாடியா சொல்லும் தொனி உள்நோக்கம் கொண்டது) ஹஜ் யாத்திரைக்கான மானியம் வழங்கக் கூடாது; கிறிஸ்தவர்க ளின் "குட் ஃபிரைடே' விழாவை கொண்டாட அனுமதிக்கக் கூடாது... என்றெல்லாம் பேசியி ருந்தார் தொகாடியா.

போலீஸ் பாதுகாப்புடன் ஹைதராபாத் நகருக்குள் நுழைந்த தொகாடியா, காவல் துறை உயர் அதிகாரிகள் முன்னி லையிலேயே மத வெறியைத் தூண்டும் வகையில் பேசியிருக்கி றார். பேரணி நடத்தவும் காவல் துறை அனுமதித்திருக்கிறது. காங் கிரஸ் அரசு தொகாடியாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள் ளிட்ட எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. இருந் தும் முஸ்லிம்கள், அரசின் நட வடிக்கைகளையும் தொகாடியா வின் ஆத்திரமூட்டும் பேச்சையும் சகித்துக் கொண்டனர்.

தொகாடியா ஹைதரா பாத்தை விட்டு புறப்பட்டவுடன் கலவரம் உருவானது. ஹைதரா பாத்தின் பல பகுதிகளில் ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட் டது. இந்த நிலை தொடரும் போதே மீண்டும் தொகாடி யாவை ஹைதராபாத்திற்குள் அனுமதித்தது காங்கிரஸ் அரசு.

அதோடு வி.ஹெச்.பி.யும், ஹிந்து வாஹினி அமைப்பும் நிகழ்ச்சி நடத்த எல்லாவித ஏற் பாடுகளும் செய்து கொடுக்கப் பட்டன. இங்கும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார் தொகாடியா.

இந்த முறை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக் கீட்டை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தேசத் திற்கு ஆபத்து என்று பேசினார் தொகாடியா.

சமூகங்களுக்கு மத்தியில் மத வெறுப்புணர்வுடன், விஷத்தை யும் கலக்கும் தொகாடியா போன் றவர்களை காங்கிரஸ் அரசு எப்படி அனுமதிக்கிறது என்று ஹைதராபாத்வாசிகள் ஆச்சர்யத் தையும் கவலையையும் வெளிப்ப டுத்தினர்.

கடந்து போன ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி விழா காலங் களில் அல்லது அதற்கு அடுத்த நாட்களில் வகுப்பு கலவரம் உருவாகலாம் என ஹைதராபாத் மக்கள் எதிர்பார்த்தனர். அச்சம யத்தில் வகுப்பு பதட்டத்தை உருவாக்கும் வதந்திகள் பரவின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஆயினும், தொகாடியா போன் றவர்களின் ஆத்திரமூட்டும் பேச் சுக்குப் பின்னரும் ஹைதராபாத் நகரில் பெரிய அளவிலான வன் முறை வெடிக்கவில்லை. இத னால் நிம்மதியடைந்த மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி னர்.

இந்நிலையில்தான் திடீ ரென்று ஏப்ரல் 8ம் தேதி கர்ம குடா பகுதியிலுள்ள ஹனுமன் கோவிலில் மாட்டுக்கறி வீசப் பட்டு வகுப்புக் கலவரம் வெடித் தது.

கர்மகுடா, தீன் தேவல் சாலை யில் அமைந்துள்ள ஹனுமன் கோவிலை உண்மை அறியும் குழு பார்வையிட்டது. கர்மகுடா பகு தியில் ஒவ்வொரு மூலையிலும் ஹனுமன் கோவில்கள் அமைந் துள்ளன. இங்கு இருக்கும் ஒரு ஹனுமன் கோவில் சுவரில் மிகப் பெரிய அளவில் ஹனுமன் போட்டோ தொங்கவிடப்பட் டுள்ளது. "அபாயஞ்சநேயா சுவாமி தேவாலயம்' என்கிற பெயரில் அமைந்த இந்த கோவி லில்தான் மாட்டுக்கறி வீசப்பட்டு கலவரம் உருவாக்கப்பட்டது.

ராஜேந்திர சிங், என்.ஏ. ஜெய குமார் என்கிற இரண்டு காவலர் கள் நாங்கள் விஜயம் செய்த போது கோவில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

3 மாதங்களுக்கு முன்புதான் இக்கோவில் உருவானது என்று கூறும் உள்ளூர்வாசிகள், அதற்கு முன்பு சிறு ஹனுமன் சிலை அரச மரத்திற்கு கீழே வைக்கப்பட்டி ருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் பெரும் கோவிலாக இது கட்டப்பட்டு இதனைச் சுற்றி சுற்றுச் சுவரும் எழுப்பப் பட்டு பெரிய கிரில் கதவுகளும் பூட்டப்பட்டுள்ளன என்கின்ற னர்.

இக்கோவிலின் இரு புறமும் உள்ள சுவர்கள் முஸ்லிம் வீடுகளு டன் இணைந்திருக்கிறது. கோவி லுக்கு நேர் எதிரே அமைந்திருப் பதும் முஸ்லிம் வீடுகள்தான்.

(அதாவது முஸ்லிம் பகுதியில் திடீரென மூன்று மாதத்திற்கு முன் இந்தக் கோவில் கட்டப்பட் டுள்ளது. முஸ்லிம் பகுதிகளில் சிறிய அளவில் சிலை வைத்து பிரச்சினைகளைக் கிளப்பி - அரசு இயந்திரத்தின் உதவியுடன் பெரிய கோவிலாகக் கட்டுவது ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல் திட் டத்தில் உள்ள ஒரு அம்சமாகும்.)

கர்மகுடா பகுதியில் உள்ளூர் மாநகராட்சி கவுன்சிலர் சஹா தேவ் யாதவ் என்பவரின் அடி யாட்கள் இக்கோவிலை பராம ரித்து வருகின்றனர். அரசமரத் திற்கு கீழே ஹனுமன் சிலையாக இருந்தவரை அங்கே பக்தர்களின் வருகை இருக்கவில்லை. கோவில் கட்டப்பட்ட பின்னர்தான் அங்கே பூஜை, புனஸ்காரங்கள் துவங்கின.

இக்கோவிலுக்கு ஒரே சமயத்தில் பெருமளவு நிதி வந்து குவிந் திருக்கிறது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் எங்களிடம் தெரி வித்தன. இதன் காரணமாக யார் இந்தக் கோவிலை கட்டுப்பாட் டுக்குள் வைத்துக் கொள்வது என் பதில் பல்வேறு குழுக்கள் அவர்க ளுக்குள் போட்டி போடுகின்ற னர்.

காலை 5 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் இந்த ஹனுமன் கோவில் திறக்கப்படுகிறது. இங்கு தான் கோவில் சுவரில் பச்சை நிறம் பூசப்பட்டும், வென்டிலேட் டரில் வெட்டப்பட்ட மாட்டுக் கால்களும் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் கோவில் பூசாரி அதி காலையில் கோவிலைத் திறந்த போது சுவரில் பூசப்பட்டிருந்த பச்சை நிறத்தை கவனிக்கவில்லை என்கிறார். ஆனால் காலை 7-8 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் யாரே ஒருவன் கோவிலின் சுவ ரில் பச்சை வர்ணம் பூசப்பட்டுள் ளது என்று கத்தத் துவங்கினான் என்று உள்ளூர் மக்கள் சொல் கின்றனர்.

எங்கள் உண்மை அறியும் குழு வினர் அறிந்த வகையில், உள்ளூர் முஸ்லிம்களும் இந்துக்களும் இப்பிரச்சினையை பெரிதாக்கா மல் சுமூகமாக முடித்து விடவே முயற்சித்துள்ளனர். ஆனால் சில (இந்துத்துவ) இளைஞர்கள்தான் எஸ்.எம்.எஸ். மூலமாகவும், அலைபேசி அழைப்புகள் மூலமா கவும் கும்பலைத் திரட்டியுள்ள னர்.

அப்பகுதியில் உடனடியாக திரண்ட கும்பல் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடத் துவங்கி விட் டது.

அப்பகுதியின் வி.எச்.பி. பிரமுகர் கோவிந்த் சிங் மற்றும் பாஜக, ஹிந்து வாஹினி தலை வர்கள் சில நிமிடங்களுக்குள் அப்பகுதிக்கு வந்து விட்டனர். அவர்களில் ஒருவர்தான் கோவில் வென்டிலேட்டரில் வெட்டப் பட்ட மாட்டின் கால்கள் சொரு கப்பட்டிருக்கிறது என அறிவித் துள்ளார்.

அங்கே (வென்டிலேட்டரில்) சொருகப்பட்டிருந்தது மாட்டின் கால்கள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? என உள்ளூர் மக்களிடம் நாங்கள் கேட்ட போது, அவர்கள் குறிப்பிட்டு எதையும் சொல்லவில்லை.

அதே சமயம் வி.எச்.பி., பஜ்ரங் தள் தலைவர்கள்தான் இப்படிச் சொல்கிறார்கள். ஆனால் நாங் கள் நேரடியாக அதைப் பார்க்க வில்லை... என்கின்றனர் அவர்கள்.

மேலும், அவர்கள் தொடர்ந்து கூறுகையில், “காவல்துறை உயர திகாரிகள் மாறி மாறி அவ்விடத் திற்கு வருகை தந்தபடியே இருந்த னர். மோப்ப நாய்கள் வரவழைக் கப்பட்டன. போலீஸின் இந்த ஓவர் ஆக்ஷனால் சூழ்நிலை கட்டுப்பாட்டை மீறிச் சென்றது. கூட்டமும் அதிகரிக்கத் துவங்கி யது.

மோப்ப நாய்கள் அங்குமிங் கும் ஓடியது. இதனால் அங்கு சல சலப்பு உண்டானது. சைதாபாத் நான்கு முனை சாலைகளில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கு வரை மோப்ப நாய்கள் ஓடி நின்ற தால் ஹிந்து வாஹினி குண்டர் கள் அங்கு வந்த ஆர்.டி.சி. பஸ்க ளையும், புர்கா அணிந்த பெண் களையும், பிற முஸ்லிம்களையும், வாகனங்களையும் தாக்கத் தொடங்கினர்...'' என்கின்றனர் உள்ளூர் மக்கள்.

கர்மகுடா பகுதியைச் சேர்ந்த ரஸியா என்பவர், “நான் அன் றைய தினம் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். இரவு வீட்டிற்கு திரும்பி வந்தபோது என் வீட் டின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு வீடு சேதப்படுத்தப்பட்டிருந் தது...'' என்கிறார்.

இதே பகுதியைச் சேர்ந்த நர்சிங் ராவ், மகேஷ் என்கிற சகோதரர்கள், “முஸ்லிம் - இந் துக்களிடையே பிரிவினையை உண்டு பண்ணும் நோக்கில் சமூக விரோதிகள் செய்த செயல்தான் இது. இப்பகுதியின் தொகுதி சீர மைப்புக்கு முன், மஜ்லிúஸ இத்தி ஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் கவுன்சிலர் வெற்றி பெற்றிருந் தார். இப்போது 200 வாக்குகள் வித்தியாசத்தில் சஹாதேவ் யாதவ் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் பாஜகவைச் சேர்ந்தவர்.

இது முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட கலவரம்தான். அரசியல் பிரச்சி னைகள் அரசியல்வாதிகளுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். இவர்களின் மாச்சர்யங்களுக்காக பொது மக்களை ஏன் குற்றவாளி களாக்க வேண்டும்...'' எனக் கேள்வியெழுப்புகின்றனர்.

ஹனுமன் கோவிலுக்கு நேர் எதிரே வசிக்கும் அத்தீ மற்றும் ஷாஹிதா பேகம் தம்பதியர், “(ஏப்ரல் 8) ஞாயிற்றுக்கிழமை காலையில் தூங்கிக் கொண்டிருந் தோம். அப்போது எதிர்பாராத விதமாக சுமார் 150-200 பேர் வரை கும்பலாக வந்த உள்ளூர் இளைஞர்கள் எங்கள் வீட்டை தாக்கத் தொடங்கினர். கதவுகள் உடைக்கப்பட்டன. எங்கள் குழந் தைகள் கடுமையாக காயமடைந் தனர். ஆனால் காவல் துறையின் தொந்தரவு கருதியும், மீண்டும் இந்து இளைஞர்கள் எங்களுக் குத் தொல்லை தரக் கூடும் என்று கருதியும் நாங்கள் புகார் அளிக்க வில்லை...'' என்கின்றனர்.

இதே பகுதியைச் சேர்ந்த வயது முதிர்ந்த இந்துப் பெண் மணி ஒருவர், “நூறு வருடங்களுக் கும் மேலாக நாங்கள் முஸ்லிம்க ளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகி றோம். முஸ்லிம் சமூகத்துடன் நாங்கள் எந்தவித வித்தியாசமும் காட்டுவதில்லை. என் வாழ்நா ளில் முதன் முறையாக இது போன்ற வன்முறையைப் பார்க்கி றேன்...'' என்கிறார்.

இப்படி நாங்கள் சந்தித்த பலர் இது போன்ற வன்முறை இப்ப குதியில் இதுவரை நடந்ததில்லை என்கின்றனர்.

“இந்தக் கலவரம் திட்ட மிட்டே நிகழ்த்தப்பட்டது என் பதை யாரும் புரிந்து கொள்ள முடியும்...'' எனக் கூறும் உள்ளூர் வாசியான மத்தீன் ஹுûஸன், ஷேக் பாரூக் ஆகியோர், “ஹிந்து வாஹினி மற்றும் பஜ்ரங்தளத் தினர் ஏற்கெனவே கற்கள், பீர் பாட்டில்கள் போன்றவற்றை சேகரித்து வைத்திருந்திருக்கின்ற னர். அவர்கள் முஸ்லிம்களின் வீடுகள் மீது அவற்றை வீசியெ றிந்தனர்...'' என்கின்றனர் இருவ ரும்.

ஏன் இதுபோன்றசம்பவங்கள் நிகழ்கின்றன என அவர்களிடத் தில் கேட்டபோது, “இந்த ஏரி யாக்களில் வி.எச்.பி., பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அதிகரித் துள்ளனர்.

இங்குள்ள இளைஞர்களுக்கு மத்தியில் அவர்கள் முஸ்லிம்க ளுக்கு எதிரான வெறுப்புணர்வு களை விதைக்கின்றனர். பாஜக கவுன்சிலர் (சஹாதேவ்) இப்பகுதி யில் வெற்றி பெற்ற பின்னர் வகுப் புப் பதட்டம் நிறைந்த பகுதியாக இது மாறி விட்டது.

ஹனுமன் ஜெயந்திக்கு முன் சிவாஜி ஜெயந்தியையும் புதிதாக இவர்கள் கொண்டாடினார்கள். ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த காலத்தில் கூட அவர்கள் 10-12 மணிவரை கும்பலைத் திரட் டிக் கொண்டு பஜனை பாடிக் கொண்டிருந்தனர். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் முஸ்லிம் களை ஆத்திரமூட்டி அவர்களை வன்முறையின் பக்கம் தூண்டி வருகின்றனர்.

ஆயினும் முஸ்லிம்கள் சகோத ரத்துவத்திற்காகவும், சமூக ஒற்று மையை கருதியும் அமைதி காத்து வருகின்றனர். ஆர்.எஸ். எஸ்.காரர்கள் தினமும் சரூர் நகரில் அணி வகுப்பை நடத்தி வருகின்றனர்.

கலவரத்தில் முஸ்லிம்கள் படு காயம் அடைந்தபோதும், அவர் களின் வீடுகள் சேதப்படுத்தப்பட் டபோதும், காவல்துறையின் சித்திரவதைக்கு அஞ்சி அவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. அப்பாவி முஸ்லிம்களை காவல் துறையினரிடத்தில் காட்டிக் கொடுக்கும் வேலையை இன்ஃ பார்மர்கள் கச்சிதமாக செய்தனர்.

தவறான மத போதனைகள் இளைஞர்கள் மனதில் வகுப்பு வாத வெறியை ஊட்டுகின்றன. இரு சமூகத்திற்கிடையே நடத்தப் படும் மத ஊர்வலங்கள் இரு சமூ கத்திற்கிடையே உள்ள இடை வெளியை அதிகப்படுத்துகின் றன...'' என்று விரிவாக பேசுகின்ற னர் இருவரும்.

சைதாபாத் ஜாஹிர் உசேன் காலனி பகுதியிலுள்ள டாக்டர். ஜாகீர் நகர் வெல்ஃபேர் சொûஸட்டியின் செக்ரட்டரி யான மஸôர் எங்களிடம் பேசும் போது, “யூசுப் பஸ்தி பகுதியிலி ருந்து 400க்கும் மேற்பட்ட கும் பல் எங்கள் காலனியை நோக்கி வந்து ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டபடியே முஸ்லிம் வீடுகளின் மீது கற்களை வீசி னார்கள்.

மற்றும் தொலைக்காட்சி ரிப் போர்ட்டர்கள், ஒரு பக்க சார்பு டன் நடந்து கொண்டனர். கலவர கும்பல் முஸ்லிம் வீடுகளின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத் தியபோது ரிப்போர்ட்டர்கள் தங் களின் காமிராக்களை மறுபக்கத் தில் திருப்பி ரெக்கார்டிங் செய்த னர். சரூர் நகர், சைதாபாத் பிரதே சம் இந்துத்துவமயமாகி வருகி றது...'' என்று கூறுகிறார்.

மேலும், அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் கலவரத்தை கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, மஸôர் வீட்டில் அமர்ந்து கொண்டு புகார் பதிவு செய்யக் கூடாது என்று மிரட்டியதாகவும், ஆனால் ஜாகீர் உúன் வெல்ஃபேர் சொûஸட்டியினர் புகார் அளித் தும் காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை என்றும் கூறுகிறார் மஸôர்.

கோவிலின் பெயரால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் இலக்கு வைக்கப்படுகிறது. ஹிந்து சமூகத்தினர் அவர்களாகவே செய்த குற்றங்கள் வெளிப் படுத்தப்பட்ட பின்பும் போலீஸ் அவர்களை பாதுகாக்கிறது. இது என்ன அநியாயம்? இது எப்படிப் பட்ட ஆட்சி? எங்களுக்கு சுதந்திரம் இல்லை. நடப்பது எல்லாமே அரசியல் ஆதாயத்திற்காகவே...!'' என்றும் வேதனையை வெளிப்படுத்துகிறார் மஸார்.

பேக்கரி கடை நடத்தும் முஹம்து ரஃபத் உசேன் இப்பகுதியிலுள்ள முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களால் "மாமு' என்று செல்லமாக அழைக்கப்படுபவர். அவரிடம் பேசியபோது,

“யார் என் கடையில் பொருட் களை வாங்குகிறார்களோ, யாருடன் நான் பண்டிகைகளின் போது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறேனோ, யாரை தினமும் "விஷ்' பண்ணுகி றேனோ அவர்களே எங்களை தாக்குவது வேதனையளிக்கி றது. முஸ்லிம்கள் கோவிலுக்கு தீங்கு விளைவிக்க மாட்டார் கள். இந்த கோவில் கட்டப்பட்ட சமயத்தில் நானே மரங்களை அறுப்பதற்கு உதவி செய்திருக் கிறேன்...'' என்கிறார் உசேன்.

உள்ளூர் மக்கள் இன்னொரு தகவலையும் சொல்கின்றனர். என்.ஜி.ஓ.க்கள், உண்மை அறியும் குழுவினர் என்று சொல்லிக் கொண்டு எங்களைச் சந்தித்த சிலர் குழுவினர், எங்களது வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டும், எங்களது தொடர்பு எண்கள் உள்ளிட்ட எல்லாவித மான தகவல்களையும் சேகரித் துக் கொண்டும் - உங்களுக்கான உதவிகள் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டுச் சென்ற னர்.

தற்போது அவர்கள் எங்க ளுக்கு போன் செய்து (அவர் களை) மன்னித்து விடுங்கள்; சமா தானமாகப் போய் விடுங்கள், நேசக்கரம் நீட்டுங்கள் என்றெல் லாம் ஆலோசனை தருகின்றனர். நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். எங்கள் வலிகளை, இழப்புகளை இந்த என்.ஜி.ஓ.க்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என கண் களில் கண்ணீர் மல்க கூறுகின் றனர் உள்ளூர் மக்கள்.

கலவரத்தில் போலீஸ் இன்ஃபார்மர்களின் பங்கு!

உண்மை அறியும் குழுவினராக பயணித்த எங்களிடம் சைதாபாத், மதனப்பேட், கர் மகுடா பகுதிகளிலுள்ள உள்ளூர் மக்கள், போலீஸ் இன்ஃபார்மர்கள் குறித்து தகவல் தந்தனர்.

முஸ்லிம் இளைஞர்களைக் காவல்துறையினரிடம் காட்டிக் கொடுப்பதில் இன்ஃபார்மர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.

பதட்டம் நிறைந்த பகுதியில் சமூக நல்லிணக்கத்திற்காக காவல்துறையால் அமைக்கப்பட்ட பீஸ் கமிட்டி கூட இன்ஃபார்மர் கமிட்டியாக செயல்பட்டுள்ளது. தனிப்பட்ட முன் விரோதத்தை வைத்து முஸ்லிம் இளைஞர்களை காவல்துறை யினரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர் இன்ஃபார்மர்கள்.

இதில், நன்கு படித்த குடும்பப் பின்னணி கொண்ட முஸ்லிம் இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவல்களைத் தந்த இப்பகுதி மக்கள் போலீஸ் இன்ஃபார் மர்கள் போலீஸின் வளர்ப்பு நாய்கள்தான். இவர்களை சமூ கத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர்.

காவல்துறை எப்படி நடந்து கொள்கிறது?

உண்மை அறியும் கூடுதல் கமிஷ்னர் அலுவலகத்திற்குச் சென்று, சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணையை மேற்கொண்டது. கலவரம் குறித்தும், தற்போதைய சூழ்நிலை குறித்தும் விசாரித்தபோது... இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. கலவர இடங்களை உங்கள் குழு பார்வையிட்டிருக்கிறது. அதனால் நிலைமையை நீங்கள் நன்கு புரிந்து கொண்டிருப் பீர்கள். சட்டம் ஒழுங்கை பராமரிக்க எங்களால் முடிந்தவரை செயல்படுகிறோம் என அவர்கள் பதிலளித்தனர்.

நாங்கள், கலவரத்தின்போது போலீஸ் இன்ஃபார்மர்களின் பங்கு குறித்து கேட்டபோது, அவர்களைப் பற்றிய புகார்களை நாங்கள் பெற்றிருக்கிறோம். குற்றவாளிகளின் இருப்பிடங் களை கண்டுபிடிக்க நாங்கள் நவீன டெக்னிக்குகளை பயன்படுத்தி வருகிறோம் என்றனர் அதிகாரிகள்.

காவல்துறை ஏன் துரிதகதியில் செயல்படவில்லை என நாங்கள் வினவியபோது, சூழ்நிலையை கட்டுப்படுத்தும் அளவிற்கு போதுமான படை எங்களிடத்தில் இல்லை. எனவே, மேற்கொண்டு காவல்படை வீரர்கள் வந்து சேரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்றனர்.

2010ல் தொகாடியா போன்ற வட இந்திய இந்துத்துவாவாதி கள் ஹைதராபாத் நகருக்கு வந்து சென்றதன் பின்னால் ஹைதராபாத் நகரம் கலவர பதட்டம் நிறைந்ததாக காணப்பட்ட போது, தொகாடியாவை ஏன் மீண்டும் நகருக்குள் அனுமதித் தீர்கள் என்ற எங்களின் அடுத்த கேள்விக்கு காவல்துறையினரி டத்தில் பதில் இல்லை.

இதற்கு பதில் சொல்லாமல், இந்துக்கள் மற்றும் முஸ்லிம் கள் நடத்தும் ஊர்வலங்களை தடை செய்ய ஏதேனும் செய்யுங் களேன். இதன் மூலம் எங்களின் டென்ஷனும் குறையும். எங்கள் வேலையிலும் கவனம் (!?) செலுத்துவோம் என எங்களிடமே கோரிக்கை வைத்தனர் காவல்துறை அதிகாரிகள்.

விசாரணையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து நாங்கள் கேட்டபோது, சட்டம் ஒழுங்கிற்குத்தான் நாங்கள் இப்போது முன்னுரிமை அளித்து வருகிறோம். பெரும்பாலான குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்குகளை விசாரித்து வருகின்றது...'' என்றனர் அவர்கள்.

அவதானிப்பு!

மதனப்பேட் கலவரத்திற்குப் பின் பல பள்ளி வாசல்களில் இறந்துபோன நாய் மற்றும் பன்றியின் உடல்கள் வீசியெறியப்பட்டு அவமதிக் கப்பட்டுள்ளது.

இப்பள்ளிவாசல்கள் ஹைதராபாத் புதுநகருக்குள் அடங்கு கின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் இந்துத்துவா சக்திகள் தீவிரமாக முஸ்லிம்களை (வன்முறையின் பக்கம்) தூண்டி விடுகின்றன என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தக் கலவரத்தில் முஸ்லிம்களின் வீடுகள் தாக்கப்பட்டு, அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. முஸ்லிம் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். முஸ்லிம் இளை ஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்க ளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக ஹிந்துத்துவா சக்திகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அரணாக இருந்துள்ளது என்பதை அவதானிக்க முடிகிறது.

பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் இளைஞர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. மேலும் பல முஸ்லிம் இளைஞர்கள் தலைமறைவாகி இருப்பதாகக் கூறும் போலீஸ், அவர்களில் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பவத்தில் (சம்மந்தபடுத்தப்பட்டு அப்பாவிகள் என) விடுதலை செய்யப் பட்டவர்களையும் இணைத்து குறிப்பிடுகிறது.

ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர அரசாங்கம் அதன் குடிமக்கள் மீதான தனது பொறுப்பை நிறைவேற்றத் தவறி விட்டது என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

தற்போதைய நிலவரப்படி ஹைதராபாத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. அரசு நிர்வாகத் திறனை இழந்துள்ளது. இதுபோன்ற சூழலில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அவர்களின் பொறுப்பை நிறைவேற்றத் தவறி விட்டனர்.

நாங்கள் கண்டறிந்தவை''

1. காவல்துறை இந்துத்துவ சக்திகளை கட்டுப்படுத்தத் தவறியிருக்கிறது. இது காவல்துறையின் மிக மோசமான அலட்சியப் போக்கு.

2. சமூக ஒற்றுமையுடன் மக்கள் வாழும் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற இந்துத்துவ சக்திகள் தங்களின் பலத்தை கூட்டி வருகிறார்கள். இந்தப் பகுதிகளில் தங்களின் பாசிச செயல் திட்டத்தை நிறுவ வகுப்பு மோதல்களை உருவாக்குகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

3. ஹிந்துத்துவா பயிற்சி முகாம்கள் மற்றும் வழக்கமான ஹிந்துத்துவ தலைவர்களின் மத துவேஷ பேச்சுக்களின் மூலம் அப்பாவி ஹிந்து இளைஞர்களின் சிந்தனையில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு விதைக்கப்படுகிறது.

4. 2010ல் ஏற்பட்ட ஹைதராபாத் கலவரத்தின்போது அண்டை மாநிலங்களிலிருந்து வன்முறை கும்பல் அணி திரட்டப்பட்டது. சமீபத்திய கலவரத்தில் முழுக்க முழுக்க உள் ளூர் வன்முறை கும்பலே ஈடுபட்டன. இதன் மூலம் இப்பகுதிக ளில் வகுப்புவாதம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

5. இந்த கலவரம் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு இலக்கு வைத்து செயல்படுத்தப்படுகிறது.

6. அரசியல்வாதிகள் அவர்களின் அரசியல் ஆதாயத்திற் காக அப்பாவி மக்களை பயன்படுத்தி அவர்களின் வாழ்வை நாசப்படுத்துகின்றனர்.

7. இந்த கலவரத்தின் மூலம் முஸ்லிம்கள் மட்டுமே பாதிப்புக் குள்ளாகியுள்ளனர். கலவரத்திற்கு இவர்களே காரணம் என குற்றமும் சுமத்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் மட்டுமே துன் புறுத்தப்பட்டுள்ளனர். அதோடு, (வேறு தவறுகளுக்காக) முஸ்லிம்கள் கைதும் செய்யப்பட்டிருக்கின்றனர். 

8. கலவரத்தில் காவல்துறையின் பங்கு என்பது கேள்வி எழுப்பக் கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் காவல்துறை ஒரு புறத்தில் மோப்ப நாய்களை கொண்டு வந்து விசாரணை, பாதுகாப்பு என சம்பவங்களை பூதாகரப்படுத்தியுள்ளனர். இன் னொரு புறத்தில் மஸ்ஜிதின் புனிதத் தன்மை கெடுக்கப்பட்டால் அல்லது அசுத்தமாக்கப்பட்டால் அதனை உடனே சுத்தம் செய்ய வேண்டும் என முஸ்லிம் பெரியவர்களுக்கு உத்தரவிட்டிருக்கி றது காவல்துறை.

9. உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காட்டப்பட்ட பின்பும் பகிரங்கமாக தெரிந்த பின்பும் அவர்களிடத்தில் மென் மையான போக்கை கடைபிடித்துள்ளது போலீஸ்.

10. ஹனுமன் கோவிலை அசுத்தப்படுத்திய இந்து இளைஞர் ஷிவகுமாரை மீடியாக்களுக்கு முன் மரியாதையுடன் நிறுத்தியது காவல்துறை. “ஷிவ்குமார் சாப்கோ குச் இன்செக் யூரிட்டி தி. தோ போலீஸ் கி செக்யூரிட்டி கேலியே உனோனே மந்திர் மே கோஷ் ரக்காஹ். உன்கா இன்டன்ஷன் ராங் நை தா...'' (ஷிவகுமார் சார் பாதுகாப்பின்மையை உணர்ந்திருக்கிறார். எனவே போலீஸ் பாதுகாப்பை பெறுவதற்காக அவர் கோவி லில் மாட்டுக் கறியை வைத்திருக்கிறார். ஆனால் அவரது நோக்கம் தவறானதாக இருக்கவில்லை...)

இதன் மூலம் குற்ற வாளிகளுடனான காவல்துறையின் ரகசிய உறவு வெளிப்படுகிறது.

11. இந்தக் கலவரத்தை சாதகமாக எடுத்துக் கொண்டு, போலீஸ் துன்புறுத்தலின் பாதிப்பிலிருந்து வெளியே வந்த முஸ்லிம் இளைஞர்களை போலீசார் மீண்டும் குறி வைக்கின் றனர்.

12. அரசாங்கம் மற்றும் சில மேற்கத்திய நாடுகளின் மூலம் நிதிகளைப் பெறும் சில அமைப்புகள் (இக்கலவர) சூழ்நி லையை ஆதாயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கோரிக்கைகள்!

1. இக்கலவரத்திற்கும், நிர்வாக ரீதியாக காவல்துறைதோல்வியடைந்ததற்கும், முஸ்லிம்களுக்கு எதிராக காவல்துறை அதிகப்படியாக நடவடிக்கை எடுத்ததற்கும் ஆந்திரப் பிரதேச முதல்வர்தான் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என இக்குழு சுட்டிக் காட்டுகிறது.

2. அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்து அவர்களை தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் அரசை சிவில் உரிமைகள் கண்கா ணிப்பு கமிட்டி கேட்டுக் கொள்கிறது.

3. மத வன்முறைத் தடுப்புச் சட்ட மசோதா 2011ஐ பாராளுமன்றத்தில் அறிமுகப் படுத்தி உடனே அதனை அமுல்படுத்த வேண்டும்.

4. இந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளின் அடிப்படையில் கலவரத்தில் காயமடைந்த மற்றும் உடமைகளை இழந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

5. முஸ்லிம்களை துன்புறுத்தும் காவல்துறையின் போக்கு நிறுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களுக்கு மத்தியில் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் (அர சாங்கத்தால்) மேற்கொள்ளப்பட வேண்டும்.

6. ஹைதராபாத்தில் மத வெறுப்பை விதைக்கும் வகையில் பேசுகின்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

7. இனி சமூகத்தில் இதுபோன்ற வன்முறைகள் நிகழாமல் தடுக்க ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகளின் நடவடிக்கை களை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

தமிழாக்கம் : ஃபைஸல்

Pin It