மேற்கு வங்க இமாம்களுக்கு மாத சம்பளம்

ஏப்ரல் 3, 2012 அன்று முஸ்லிம் நலன் சார்ந்த அறி விப்பு ஒன்றை வெளியிட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அது என்ன முஸ்லிம் நலன் சார்ந்த அறிவிப்பு?

மாநிலத்திலுள்ள பள்ளிவாசல் இமாம்களை (முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்தும் மத குருமார்களை) கண்ணியப் படுத்தும் வகையில் மாதந்தோறும் தலா ரூ. 2500 வழங்கிட தனது அரசு திட்டமிட்டுள்ளது என்ற அறிவிப்புதான் அது!

இதன்படி, மாநிலத்திலுள்ள 30 ஆயிரம் இமாம்களுக்கு இத் தொகை வழங்கப்படும் என்றும் பானர்ஜி அறிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டதுதான் தாமதம், விடுவார்களா இந்துத்துவாவினர்? முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டையே திரும் பப் பெற வேண்டும் என சமூக நீதிக்கு எதிராகப் பேசி வரும் இந்துத்துவாவினருக்கு உடம்பெல்லாம் மிள காய் பொடியைத் தேய்த்ததுபோல் இருந் தது மம்தாவின் இந்த அறிவிப்பு.

இதனால் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தாவின் அறி விப்புக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கிறது பா.ஜ.க.

பா.ஜ.க.வின் வழக்கறிஞரான கவுசிக் சந்திரா, “இமாம்களுக் கான சம்பளம் மாநில வக்ஃபு வாரியத்தின் நிதியிலிருந்துதான் தர வேண்டும் என உச்ச நீதிமன் றம் வழிகாட்டுதல் வழங்கியிருக் கிறது. எனவே மாநில அரசு இந் தத் தொகையை இமாம்களுக்கு வழங்குவதை தடை செய்ய வேண்டும்...'' என கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஜே.என். பாட்டீல், சம்புதா சக்கர பர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசார ணைக்கு எடுத்துக் கொண்டு, மாநில அரசு இமாம்களை கண்ணியப்படுத்தும் வகையில் மாதந்தோறும் வழங்கவிருக்கும் தொகையை - இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் வரை தடை செய்ய முடியாது என மறுத்துள்ளது.

அதே சமயம், இப்படி தொகை வழங்குவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று நீதிமன்றத் தீர்ப்பு வரும்பட்சத்தில், (இமாம்களுக்கு) வழங்கப்பட்ட தொகை திரும்பப் பெறப்படும் என மாநில அரசு கோர்ட்டில் உறுதிப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும், மாநில அரசு வழங்கும் இந்தத் தொகை நீதிமன்றத் தின் முடிவுக்கு உட்பட் டுத்தான் வழங்கப்ப டும் என இமாம்களுக்கு தெரி விக்கும்படி அரசின் நிதி பங்கீட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள் ளது.

இந்நிலையில் கவ்சிக் சந்திரா வின் பொது நல மனுவின் அடிப் படையில் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டதை வெளிக் காட்டிக் கொள்ளாத வகையில், “இமாம்களுக்கு எதி ராக நீதிமன்றத் தீர்ப்பு அமையு மானால், இமாம்களுக்கு வழங் கப்பட்ட தொகையை திரும்பச் செலுத்தும் கடமை அவர்களுக்கு இருக்கிறது...'' என்று கூறி திருப் திபட்டுக் கொள்கிறார் கவுசிக்.

உத்திரப் பிரதேச அரசு அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதாகச் சொன் னாலும், முஸ்லிம்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிப் பதாகச் சொன்னாலும், ராஜ்ஜிய சபா எம்.பி. பதவியை முஸ்லிம்க ளுக்குத் தருவதாகச் சொன்னா லும் உடனடியாக எதிர்ப்பு தெரி விக்கும்படி ஆர்.எஸ்.எஸ். தலைமை அதன் அரசியல் வடி வமான பாஜகவுக்கு உத்தரவிட் டுள்ளது.

இதே உத்தரவின்படிதான் மம்தா பானர்ஜியின் முஸ்லிம் நலன் சார்ந்த அறிவிப்பிற்கும் தடை கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது பாஜக.

நீதிமன்றம் ஒருவேளை இமாம்களுக்கு எதிரான தீர்ப்பு வழங்கினாலும், வேறு வகையில் இமாம்களுக்கு மாதாந்திர ஊதியம் அல்லது உதவித் தொகை வழங்க மம்தா முன் வர வேண்டும்.

- ஹிதாயா

Pin It