சிவசேனா ஏற்கெனவே அறிவித்திருந்தபடி அதன் தலைவர் மறைந்த பால் தாக்கரேவின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு 2500 கத்திகளை வழங்கியிருக்கிறது.

சிவசேனா கட்சியின் தென் மத்திய மும்பை கிளை லால்பாக் பகுதியில் பெண்களுக்கான நிகழ்ச்சியை நடத்தி இந்த கத்திகளை வழங்கியுள்ளது. இது அட்டைக் கத்தியல்ல. பதம் பார்க்கும் நிஜக் கத்திகள்தான்.

இதோடு, விரைவில் மும்பை நகரம் முழுவதிலும் ஷாக்கா பயிற்சி வகுப்புகளை நடத்தி 18,500க்கும் மேற்பட்ட கத்தி களை வழங்கவும் சிவசேனா முடிவு செய்திருக்கிறது.

ஏற்கெனவே மும்பை நகரம் முழுவதும் வன்முறையைத் தூண்டி வரும் சிவசேனா கட்சி அதன் பெண் தொண்டர்கள் மத் தியில் ஆயுதங்களை கொடுத்து அவர்களையும் வன்முறைக்கு தயார் செய்து வருகிறது.

சங்பரிவாரின் துர்கா வாஹினி அமைப்பு நாடு முழுவதும் பெண் களுக்கு பகிரங்கமாகவே துப் பாக்கி பயிற்சி அளித்து வருகி றது. விஸ்வ ஹிந்து பரிஷத் சூலா யுதங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் சிவசேனா கத்தி களை வழங்கி வருகிறது.

இந்தியாவை மதக் கலவர காடாக மற்ற இந்துத்துவாவினர் திட்டமிட்டிருக்கின்றன என்ப தற்கு இவையெல்லாம் சான்று கள்தான்.

சிவசேனா நடத்திய கத்திகள் வழங்கும் விழாவில் அக்கட்சி யின் எம்.பி.யான அனில் தேசாய், முன்னாள் எம்.பி. மோகன் நாவலே உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டிருக்கின்ற னர்.

“இப்படி கத்தி வழங்குவது கண்டிப்பாக மும்பை நகரத்தில் பெண்கள் தொடர்பான குற்றங் களை குறைக்கவே உதவும். இந்த நிகழ்வுக்குப் பின்னால் எவ்வித அரசியலும் இல்லை. இது பெண் களின் மன உறுதியை ஊக்கப்ப டுத்தும் ஒரு வழிகாட்டுதல் தான்...'' என்கிறார் எம்.பி. அனில் தேசாய்.

“பெண்களுக்கு கத்திகளை வழங்குவது அவர்களின் தற்காப் புக்காகத்தானே தவிர தவறாக பயன்படுத்த அல்ல...'' என்று கூறும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சிவசேனாவின் நிர்வாகி அஜய் சவுத்திரி,

“ஒரு ஆயுதத்தை வைத்திருப்ப தன் முக்கியத்துவத்தை நான் அறிவேன். ஒரு பெண் பிரச்சி னையை எதிர் கொள்ளும் சூழ் நிலை ஏற்பட்டால் அப்போது மட்டும் அவள் கத்தியை பயன் படுத்துவாள். கட்சி அவளுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்யும்...'' என்று இதற்கு நியா யம் கற்பிக்கிறார்.

நிகழ்ச்சியில் கத்தியைப் பெற் றுக் கொண்ட சவார்தேகர் என்ற பெண்மணி, “இதை நான் என் தற்காப்புக்காக மட்டுமே பயன்ப டுத்துவேன். தவறாக பயன்படுத்த மாட்டேன்...'' என்கிறார்.

இவையெல்லாம், மீடியாக்க ளிடம் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ள சேனாவினர் ஆடும் நாடகம்தான். மதக் கலவ ரங்களின்போதும், இஸ்லாமியர் களுடன் ஏற்படும் சர்ச்சைகளின் போதும் ஆயுதத்தை பயன்படுத் தவே இவர்களுக்கு கத்திகள் வழ ங்கப்படுகின்றன என்கின்றனர் மும்பை முஸ்லிம்கள்.

“பெண்களுக்கு கத்தியைக் கொடுப்பது வன்முறையை ஊக் குவிப்பதாகாதா?'' என்று செய்தி யாளர்கள் கேட்டதற்கு,

“தீவிரவாதிகள் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை வைத்திருக்கும் போது எங்கள் பெண்கள் அவர்க ளின் தற்காப்புக்காக சின்னதாக ஒரு கத்தி வைத்துக் கொள்ளக் கூடாதா? நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். இது, எதிர்காலத் தில் ஏற்படும் குற்றங்களைத் தவிர்ப்பதன் மூலம் காவல்து றைக்கு உதவிகரமாக இருக்கும்.

நான் ஏற்கெனவே 14 வழக்கு களை சந்தித்து வருகிறேன். எனது சகோதரிகளுக்காக இன் னொரு வழக்கையும் சந்திக்க நான் தயாராகவே இருக்கிறேன்...'' என தனது வன்முறை வழிகாட் டுதலுக்கு நியாயம் கற்பிக்கிறார் சவுத்திரி.

“1962ன் ஆயுதச் சட்டத்தின் 1 (ய) பிரிவு, துப்பாக்கி மட்டுமல்லா மல், வாள்களைப் போன்ற கூரிய முனை கொண்ட கொடிய ஆயு தங்கள், குத்து வாள்கள், ஈட்டி கள் மற்றும் 2 அங்குலத்தை விட அகலமான, 9 அங்குலத்தை விட நீளமான பிளேடுகளுடன் கூடிய (சீக்கியர்கள் வைத்திருக்கும்) கிரு பான் உள்ளிட்ட கத்திகள் தடை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற ஆயுதங்களை வைத்தி ருப்பது ஒரு வருட சிறைத் தண்ட னைக்குரிய குற்றம். இந்த தண் டனை மூன்று வருடம்வரை கூட நீட்டிக்கப்பட முடியும்...'' என்று கூறும் மும்பை இணை கமிஷ்ன ரான சதானந்த் தாத்தே,

“சிவசேனாவினர் பொது மக் கள் மத்தியில் கத்திகளை வினி யோகிப்பது சட்ட விரோதமா னது; இந்த கத்தி வழங்கும் நிகழ்ச் சியின்போது எங்கள் காவல் துறை அதிகாரிகள் அந்த இடத் தில் இருந்தனர். உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்...'' என்று தெரிவித்துள்ளார்.

மும்பை இணை கமிஷ்னர் சதானந்த் தாத்தே கூறும் ஆயுதச் சட்டத்தின்படி பார்த்தால், இந் துத்துவாக்கள் பகிரங்கமாகவே துப்பாக்கி பயிற்சி எடுப்பதையும், வாட்களுடன் ஊர்வலம் செல்வ தையும் எந்த மாநிலக் காவல்து றையும் தடுப்பதில்லை.

சிவசேனா கட்சியினர் பெண்க ளுக்கு கத்திகளை வழங்கிய நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரிகள்,அந்த நிகழ்ச்சியை முன் கூட்டியே தடுக்காதது ஆச்சரியமளிக்கிறது.

இனி, சிவசேனாவை பின்பற்றி இஸ்லாமிய அமைப்புகளும் கத்திகளை வழங்கும் நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்தால் அதை மட்டும் முன் கூட்டியே முண்டி யடித்து வந்து காவல்துறை தடுக் கும் என்பதை இப்போதே நாம் உறுதி கூறமுடியும்.

இஸ்லாமியரல்லாத ஜனநா யக சக்திகள் இந்துத்துவாவின ருக்கு கவுண்ட்டர் நடவடிக்கை யாகவே கத்திகளை வழங்கப் போகிறோம் என்று அறிவித்தால் கூட போதும் அலறியடித்துக் கொண்டு ஓடி வரும் காவல்துறை.

அப்படித்தான் சமீபத்தில் சென்னை காவல்துறையும் நடந்து கொண்டது. பெரியார் திராவிடர் கழகத்தினர் பெண்க ளுக்கு ‘துப்பாக்கி' வழங்கப் போகிறோம் என அறிவித்த மாத் திரத்தில் எங்கே வைத்து கொடுக் கப் போகிறீர்கள்? துப்பாக்கியை எங்கே பதுக்கி வைத்திருக்கிறீர் கள்? எங்கிருந்து துப்பாக்கிகளை வாங்கினீர்கள்? என்றெல்லாம் பெ.தி.க.காரர்களை கேள்விக ளால் துளைத்தெடுத்து விட்டது சென்னை சிட்டி போலீஸ்.

ஆனால், மும்பை மட்டும் இந்தியாவிற்கு வெளியில் இருக்கி றதோ என்னமோ?

Pin It