தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆய்வுக்காக ஒரு புத்த பிக்கின் தலைமையில் வந்த 19 மாணவர் கள் மீது தமிழ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி யுள்ள செய்தி சமூக ஆர்வலர்கள், அமைதியை விரும்பும் மக்கள், ஜனநாயக சக்திகள் என பல தரப்பினரிடத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

புத்த பிக்குடன் வந்த மாணவர் கள் அனைவரும் சிங்கள இனத் தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்களுடன் இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுக ளைச் சேர்ந்த மாணவர்களும் வந் திருக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்புகூட இதுபோன்ற தாக்குதல் நடை பெற்றது. இந்த வன்முறையை எந்த அரசியல் கட்சிகளும், அர சியல் சாரா இயக்கங்களும் கண் டிக்க முன் வரவில்லை என்பதும் கவலை அளிப்பதாய் உள்ளது.

தாக்குதல் செய்தியை அறிந்து காவல்துறையினர் அந்த புத்த பிக்குவையும், மாணவர்களையும் பத்திரமாக மீட்டு, வாகனத்தில் அனுப்பி வைக்க... திருச்சி விமான நிலையத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த அவர்களை வழி மறித்து தாக்குதல் நடத்தியுள்ள னர் தமிழ் அமைப்பினர். திருச்சி யில் வழிமறித்து தாக்கியதில் அவர்கள் பயணித்த வாகனத்தின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டி ருக்கின்றன.

இது தமிழ் உணர்வைத் தாண்டிய வன்முறை வெறியாளர் களின் செயல்.

இதை செய்திருப்பது தமிழக பொதுவுடமை கட்சி, மதிமுக மற் றும் நாம் தமிழர் கட்சியினர் என்று அறிகிறபோது வருத்தம் தான் மேலிடுகிறது. இந்த அமைப்புகள் ஈழத் தமிழர்களுக் காக கடுமையாக குரல் கொடுத்து வருபவை. சிங்கள அரசின் தமி ழர்கள் மீதான அட்டூழியங்களை யும், அநியாயங்களையும் கண் டித்து வருபவை. இவர்களுடைய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதர வான போராட்டங்களை அனைத்து தரப்பும் ஆதரித்தே வருகின்றன. இஸ்லாமிய அமைப் புகள் கூட இவர்களது போராட் டங்களில் கலந்து கொள்வ துண்டு.

தமிழகத்திற்கு வரும் சிங்கள மாணவர்களை அடிப்போம் என்று நாம் தமிழர் கட்சி அவ் வப்போது சற்றே ஆவேசமாக கூறி வந்தாலும், செயலளவில் அது இறங்கியதில்லை. ஆனால் சமீபத்திய சம்பவத்தில் அது வரம்பு மீறி இருப்பதை நம்மால் கண்டிக்காமல் இருக்க முடிய வில்லை.

மதிமுகவும் இப்படித்தான். ராஜபக்சே அரசுக்கு எதிராக கடுமையான வார்த்தைப் பிரயோ கங்களை செய்த போதும், உணர்ச்சிவசப்பட்ட போதும் அக்கட்சி ஜனநாயகக் கட்டுப்பா டுகளை உடைத்தெறிந்ததில்லை. சமீபத்திய சம்பவத்தில் இதுவும் வரம்பு மீறி செயல்பட்டிருப்பதை கண்டிக்காமல் இருக்க முடிய வில்லை.

ராஜபக்சே மற்றும் அவரது ராணுவம், அவரது அமைச்ச ரவை சகாக்கள் செய்த தமிழ் மக் களுக்கு எதிரான கொடுமைகள் மன்னிக்க முடியாதவை. இலங் கையின் ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவெறிக் கட்சியின் தலைவர்களும் மன்னிக்கப்பட முடியாதவர்கள்தான்.

இப்படியான அரச ஆதரவுத் தலைவர்கள் இந்தியாவிற்கு குறிப் பாக தமிழகத்திற்கு வரும்போ தெல்லாம் அவர்களை எதிர்த்து தமிழுணர்வாளர்கள் போராட் டம் நடத்தியதில் யாரும் குறை கண்டதில்லை.

மனித குல விரோதியான ராஜ பக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும்; இலங் கைத் தமிழர்கள் இனப்படு கொலை செய்யப்பட்டதற்கு நியாயம் வேண்டும் என தமிழ கத்தின் ஒட்டுமொத்த கல்லூரி மாணவர்களும் தொடர் போரா ட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அரசியல் கட்சிகள் கலக்காமல் மாணவர்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்து வருகின்ற இந்தப் போராட்டங்கள் மத்திய அரசின் கவனத்தையும், சர்வதேச கவனத் தையும் பெற்று வரும் நிலையில் புத்த பிக்கு தலைமையில் தமிழ கத்திற்கு வந்த மாணவர்கள் தாக்கப்பட்டிருப்பது தமிழக மாணவர் போராட்டத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தும் செயல்.

இனவாத அரசும், அதிகாரிக ளும், இராணுவமும் நிகழ்த்திய தமிழர் படுகொலைகள், கொடு மைகளுக்காக இலங்கையின் பொது மக்கள் தாக்கப்படுவதும், தமிழகத்திற்கு அவர்களை வர விடாமல் அச்சுறுத்தலுக்கு உள் ளாக்குவதும் தமிழனின் பெரு மையல்ல; பண்பாடும் அல்ல.

இலங்கையிலும், தமிழ் மக்க ளின் நியாயங்களைப் பேசுகின்ற, அரசின் பயங்கரவாதத்தை எதிர்க்கின்ற அறிவு ஜீவிகளும், ஜனநாயக சக்திகளும் இருக்கவே செய்கின்றனர். இவர்களுக்கும், சர்வதேச அளவில் இயங்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இதுபோன்ற வன்முறைகள் அதி ருப்தியைத்தான் தரும். தவிர, தமிழ் மக்களின் அறப் போராட் டங்கள் வன்முறைத்தனமான அடையாளங்களைப் பெற நேரி டும்.

கொலைகார ராஜபக்சேவுக் கும், அவரது அரசாங்கத்திற்கெதி ராகவும் மட்டும்தான் போராட் டங்கள் இருக்க வேண்டும். அது அப்பாவி மக்களை நோக்கி எந்த வகையிலும் திரும்பி விடக் கூடாது. வன்முறையை யார் நிகழ்த்தினாலும் அதற்கு எந்த வகையிலும் நியாயங்களை கற் பித்தாலும் அதை ஏற்க முடி யாது!

Pin It