ஆந்திராவில் ஹைதராபாத் கடப்பா, கர்நூல், அனந்தபூர், சித்தூர், குண்ட்டூர், கறீம் நகர் விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உருது மொழியை இரண்டாவது அதிகா ரப்பூர்வ மொழியாக ஏற்கெனவே அறிவித்திருக்கிறது ஆந்திர அரசு.

ஆந்திர மாநிலத்தின் 23 மாவட் டங்களில் தெலுங்கு மொழி அதி காரப்பூர்வமான அரசு மொழி யாக இருக்கிறது. இதில், முஸ்லிம்கள் 12 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான சதவீத அளவில் இரு க்கும் மாவட்டங்களில் உருது மொழியை இரண்டாவது அதி காரப்பூர்வ மொழியாக அறிவித் திருக்கிறது அரசு.

இதற்கு காரணம், இந்த மாவட்டங்களில் முஸ்லிம்கள் தனித்துவமாக உருதுமொழி பேசி வருகிறார்கள் என்பதுதான். இந்த தனித்துவ கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில்தான் ஆந்திர அரசு இரண்டாவது அதி காரப்பூர்வ மொழியாக உருதுவை அறிவித்திருந்தது. இனி, அனைத்து அரசு அலுவல்களும் உருதுவிலும் இடம் பெற வேண் டும் என்றும் உத்தரவிட்டிருந்தது ஆந்திர அரசு.

இது மாத்திரமல்லாமல், உருது மொழியை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளிக்கூடங்களில் அதிக அளவில் உருது ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், அரசு உத்தரவுகள், குறிப் பாணைகள் மற்றும் இதர அரசின் அறிவிப்புகள் உருது பேசும் மக்களுக்கும் சென்று சேரும் வகையில், அரசு அலுவலகங்க ளில் உருது மொழி பெயர்ப்பா ளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஆந்திர அரசு கூறுகிறது.

மேலும், மாவட்ட ஆட்சியர் கள் தங்களது மாவட்டங்களில் அரசின் இந்த முடிவு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என் பதை குறிப்பிட்ட கால இடை வெளிக்குள் ஆய்வு செய்ய வேண் டும் என்றும் அறிவுறுத்தியிருக்கி றது ஆந்திர அரசு.

இந்நிலையில், உருதுமொழியை பாதுகாக்கும் வகையில், அதிகாரப்பூர்வ மொழியாக ஆக் கியதோடு மட்டுமல்லாமல், அறி விப்பு பலகைகள், பெயர் பலகை கள் அனைத்தும் மேற்சொன்ன 15 மாவட்டங்களில் உருதுமொழி யில் வைக்க வேண்டும் என்றும் கடந்த 11ம் தேதி உத்தரவிட்டிருக் கிறார் கிரண் குமார் ரெட்டி.

உருதுமொழியில் எழுதப் பட்ட பெயர்ப் பலகைகள் அரசு அலுவலகங்களில் மாத்திரமின்றி வர்த்தக நிறுவனங்களிலும், கடைகளிலும் அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர், பெயர்ப் பல கைகள் உருதுவில் இடம்பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரப் பூர்வ மொழி ஆணையத்தின் தலைவரான புத்தா பிரசாத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, மொழி ஆணை யத்தின் தலைவர் புத்தா பிரசாத், தெலுங்கு மொழியில் பெயர் பல கைகளை அமைக்குமாறு கடைக் காரர்களுக்கு அறிவுறுத்துமாறு தொழிலாளர் ஆணையரை கேட் டுக் கொண்டிருந்தார். இதனைய டுத்து, ஆந்திர முதல்வருக்கும், மொழி ஆணையருக்கும் கடிதம் எழுதிய எம்.எல்.சி. முஹம்மது ஷபீர் அக்கடிதத்தில் உருது மொழி குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து உகாதி திருநா ளையொட்டி நடந்த அரசு விழா வில் மொழி ஆணையர் உருது மொழியை திட்டமிட்டு புறக்க ணித்து வருகிறார் என முதல்வர் கிரண் குமாரைச் சந்தித்து நேரடி யாக புகார் அளித்தார் ஷபீர். இதனை ஒப்புக் கொண்ட கிரண் குமார் ரெட்டி, அதன் பின்னர் தான் உருது மொழியில் பெயர்ப் பல கைகள் இடம்பெற நடவடிக்கை எடுக்குமாறு அறிவு றுத்தியுள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.

முதல்வரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து உஷாரான மொழி ஆணையர், தொழிலாளர் ஆணை யருக்கு இந்த பிரச்சினை தொடர் பாக அறிவுறுத்தல்களை வழங்கு வதாகவும், சிறுபான்மை தலை வர்களைக் கொண்ட ஒரு கூட்டத் தைக் கூட்டி இந்தச் சிக்கலை தீர்க்க முயற்சி செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.

ஆந்திர அரசின் அரசாணை (எ.ஞ.ஙந.சர். 383 தேதி 1-07-2007) கணிசமாக உருது மொழி பேசும் மக்கள் இருக்கும் 15 மாவட்டங்க ளில் உருது மொழி இரண்டாவது அதிகாரப்பூர்வமான மொழியாக கருதப்படும் என தெளிவாக பிர கடனப்படுத்துகிறது என்கிறார் எம்.எல்.சி. முஹம்மது ஷபீர்.

மறு ஆய்வுக் கமிட்டியை விரை வில் கூட்டி பிரச்சினையைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்று, முதல்வரின் அறிவு றுத்தல்களுக்கு பின் உறுதியளித் திருக்கிறார் மொழிக்கான ஆணையர் புத்தா பிரசாத்.

உருது மொழியை பாதுகாக்க ஆந்திர அரசு இத்தனை முயற்சி களை மேற்கொண்டு வருவதை பாராட்டும் நாம், தேவையான ஆசிரியர்களைக் கூட நியமிக்கா மல் உருது பள்ளிக்கூடங்களை இழுத்து மூடி வருகிறதமிழக அரசின் செயலை கண்டிக்காமல் இருக்க முடியவில்லை.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் உருது புறக்கணிப்பு!

இந்த வருடம், மே மாதம் 5ந்தேதி நடைபெறவுள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வில், உருது மொழி புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கு, நீதி யரசர்கள் ஏ.கே. பட்நாயக் மற்றும் எஸ்.ஜே. முகோபாத் யாய் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தது.

ஜம்யியத்துல் உலமா ஹிந்த் அமை ப்பு, மற்றும் அன்சாரி மாஹிம் பாத்திமா என்ற மாணவி ஆகியோர் இணைந்து தாக்கல் செய்த இந்த வழக்கை விசா ரித்த அமர்வு நீதிமன்றம், ஒரு வார காலத் துக்குள் பதிலளிக்குமாறு, மத்திய சுகா தாரத்துறை அமைச்சகம், சென்ட்ரல் போர்டு ஆப் செகெண்ட்ரி எஜுகே ஷன் (சி.பி.எஸ்.ஸி.) மற்றும் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா ஆகியவைக ளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நுழைவுத்தேர்வுக்கான கேள்வித்தாள்கள் ஆங்கிலம் தவிர ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி உள் ளிட்ட 8 மொழிகளில் மட்டும்தான் இருக்கும் என்ற அறிவிப்பால் உரு துவை தாய் மொழியாக கொண்ட லட் சக்கணக்கான மாணவ மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என வழக்கறிஞர் ஷகீல் அஹ்மத் எடுத்துரைத்தார்.

மகாராஷ்டிரம் உள்ளிட்ட 9 மாநிலங் களில் 2வது அந்தஸ்தில் உள்ள உருது மொழி புறக்கணிப்பு என்பது, குறிப் பிட்ட மாணவர்களை பாதிக்கும் என்ப தையும் கடந்து, நாட்டில் செயல்படும் ஆயிரக்கணக்கான உருது மீடியம் கல் லூரிகளின் எதிர்காலமும் இதில் அடங்கி யுள்ளது...'' என்றார் அவர்.

"மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 7,800 உருது வழிக்கல்வி மூலம் அறிவி யல் பாடம் பயிலும் மாணவர்கள் இருப் பதுடன், மாநிலத்தில் 227 ஜூனியர் உருது அறிவியல் கல்லூரிகள் இருப்ப தாக தெரிவித்த வழக்கறிஞர், மராட்டி வழிக்கல்வி பயிலும் 350 மாணவர்க ளுக்கு மதிப்பளிக்கும் அரசு, 7,800 மாணவர்களின் உரிமையில் பாரபட்ச மாக நடந்து கொள்வதை ஏற்க முடி யாது...'' என்றார்.

மேலும், மராட்டிய மீடியத்தில் மாநி லம் முழுவதிலும் ஒரு அறிவியல் கல் லூரி கூட இல்லாத நிலையிலும், மராட் டிய மொழிக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கி யத்துவம் - உருது மொழிக்கு ஏன் கொடுக்கப்படவில்லை? என கேள்வி யெழுப்பிய வழக்கறிஞர் ஷகீல் அஹ்மத், இந்த பாரபட்ச போக்கு அரசி யல் சாசன சட்டம் 14 மற்றும் 21 ஆகிய சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது...'' என் றார்.

இந்திய நாட்டில் ஹிந்திக்கு அடுத் தபடியாக அதிகமான மக்கள் பேசும் மொழி உருது, மொழி வாரி மாநிலம் பிரிக் கப்பட்டபோது, உருதுக்கென்று ஒரு மாநிலம் உருவாக்கப்படவில்லை என்ப தோடு, இந்த மொழியை முஸ்லிம்க ளோடு மட்டும் சம்மந்தப் படுத்தி, உருது மொழியை அழித்து வருகிறது மத்திய அரசு.

Pin It