காஷ்மீர் மாநிலத்திலுள்ள கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடையாளம் தெரியாத ஆயுத குழுக்களால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தெற்கு காஷ்மீரிலுள்ள புல்வாமா மாவட்டத்திற்குட்பட்ட கொல்போரா நியாய்னா கிராமத்தின் பஞ்சாயத்து தலைவ ரான குலாம் முஹம்மது லோன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

காஷ்மீர் கிராமங்களில் தொடர் படுகொலைகள் நடைபெற்று வருவதால் கிராமப் பஞ்சாயத்து தலை வர்கள் ஒன்றிணைந்து அனைத்து ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து மாநாடு  என்ற அமைப்பை உருவாக்கி போராடத் துவங்கியுள்ளனர்.

குலாம் முஹம்மதுலோன் படுகொலை சம்பவத்தையடுத்து கடந்த 8ம் தேதி இரங்கல் கூட்டம் நடத்தியது .இரங்கல் கூட்டத்திற்கு பின் பேசிய இவ்வமைப்பின் தலைவரான ஷஃபீக் மீர்,

“மாநிலத்தில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களின் உயிரை பாதுகாக்க காஷ்மீர் அரசாங்கம் தவறிவிட்டதகடந்த எட்டு மாதங்களில் இது ஆறாவது படுகொலை; இந்த வருடத்தில் 3வது படுகொலை இது'' என தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக விரோத படைகளால் பஞ்சாயத்து தலைவர்கள் கொல்லப்படுவது தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பங்களிப்பு என்ன என கேள்வியெழுப்பியுள்ள ஷஃபீக் மீர்,மக்களால் தேர்வு செய்யப்பட்ட கிராமப் பஞ்சாயத்து பிரதி நிதிகளின் படுகொலை விஷயத்தில் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கவனம் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில்,இச்சம்பவம் குறித்துப் பேசிய உள்துறை இணை அமைச்சரான சஜ்ஜாத் அஹ்மது கிச்லு,“பஞ்சாயத்து உறுப்பினர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றப் பணிக்கப் பட்டுள்ளனர்.இதன் மூலம் தாக்கு தல்களை அவர்களால் தவிர்க்க முடியும். ஆனால் குலாம் முஹம்மது லேன் பாதுகாப்பு இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி வந்தி ருக்கிறார்...'' என தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 2011ல் கிராம அளவிலான பஞ்சாயத்துத் தேர்தல்கள் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றன. அப்போது முதல் 12க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,காஷ்மீர் போராளி அமைப்புகள் மிரட்டல் விடுத்து 600 பஞ்சாயத்து தலைவர் களை பதவி விலகச் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மாநி லம் முழுவதும் 33 ஆயிரம் பஞ் சாயத்துகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

போராளிகளின் மிரட்டல்கள் பஞ்சாயத்து தலைவர்களுக்கு தொடர்கிறது என்று சொல்லப் பட்டாலும், போராளிகளைப் போன்ற உடையணிந்து வரும் இராணுவம், பஞ்சாயத்து தலை வர்களை கொலை செய்து விட்டு, அந்தப் பழியை போராளிகள் மீது போட்டு, மக்களுக்கும் போராளிகளுக்குமிடையில் பகைமையை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் போராளி அமைப்பினர்.

Pin It