அப்பாவியான அப்ஸல் குருவை அநியாயமாக தூக்கிலிட்டதோடு அவரது குடும்பத்திற்கும் தெரிவிக்காமல் பெரும் அநீதி இழைத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், முஸ்லிம் சமுதாயத் தின் மீது அறிவிக்கப்படாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அப்ஸல் குருதூக்கிலிடப் பட்ட சில தினங்களுக்குள் ஹைதராபாத் தில்சுக் நகரில் நடந்த இரட்டை குண்டு வெடிப்புத் தாக் குதலைத் தொடர்ந்து, இந்தியன் முஜாஹித்தீன் என்ற அமைப்பு தான் இந்த குண்டு வெடிப்பிற்குக் காரணம் என ஒரு பகுதி மீடியாக்கள் அலறின.

நாட்டில் எங்கு குண்டு வெடி ப்பு நடந்தாலும், மீடியாக்களும், விசாரணை அமைப்புகளும் உடனடியாக இஸ்லாமிய அமைப்புகளின் மீது பழியைப் போட்டு வருவது வாடிக்கை யான நிகழ்வு. அப்படித்தான் ஹைதராபாத் குண்டு வெடிப்புச் சம்பவத்திலும் இந்தியன் முஜாஹித்தீன் தொடர் புபடுத்தப்பட்டது என்றாலும், இந்த குண்டு வெடிப்புக்கு வேடிக் கையான காரணத்தை உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறினார். ஷிண்டே கூறினார் என்பதைவிட அப்படியொரு கருத்தை மீடியாக்கள் விதைத்து ஷிண்டேவை கூற வைத்தன.

அப்சல் குருவின் தூக்கிற்கு பழிவாங்கவே ஹைதராபாத் தாக் குதல் நடைபெற்றது என்பது தான் அந்த வேடிக்கையான கார ணம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, அப்சல் குருவிற்கு எந்த தீவிர வாத குழுக்களுடனோ, பயங்கர வாத செயல்களுடனோ தொட ர்பு இல்லை என்பது நாட்டு மக் களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இதனால் தனது சகாவை இந்திய அரசு தூக்கிலிட்டு விட்டது அதற்காக பழிவாங்க வேண்டும் என எந்த தீவிரவாத குழுவும் முனைப்பு காட்ட சாத்திய மில்லை. அடுத்து, காஷ்மீரின் விடுத லைக்கான ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு குடும்ப வாழ்க் கைக்குத் திரும்ப முடிவெடுத்த அப்சல், இந்திய இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளி.

 2007ல் ரேடியோ பசிபிக் செய்தி நிறுவனத்திற்கு அப்சல் குரு அளித்திருந்த பேட்டியில், “காஷ்மீர் சிக்கலில் பாகிஸ் தான் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் எந்த வகையிலும் இந்திய அரசியல்வாதிகளின் செயல்பாடுகளிலிருந்து மாறுப டாமல் இருப்பது கண்டு எனது மாயை தெளிந்தது. தெளிந்த மனதோடு, சில வாரங்களிலேயே நான் இங்கு திரும்பி வந்து விட் டேன். பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தேன்...'' எனத் தெரிவித்திருந்தார். அதாவது, காஷ்மீர் போராளி யாக இருந்த நிலையில் பாகிஸ்தா னுக்குச் சென்ற அப்சல், அங் குள்ள அரசியல்வாதிகளும் காஷ் மீர் பிரச்சினையில் அரசியல் லாப நஷ்டக் கணக்குப் போட்டு ஆதாயம் அடைவதற்கே காஷ் மீரை மையப்படுத்துகின்றனர் என்பதை புரிந்து கொண்டு இந் திய இராணுவத்திடம் சரண டைந்திருக்கிறார்.

இந்திய இராணுவத்திடம் சரணடைந்ததால் இவர் இந்திய இராணுவத்தின் இன்பார்மராக மாறக் கூடும் என்ற பார்வைதான் காஷ்மீர் போராளிகளின் எண்ண மாக இருக்கும். தவிர, சிறப்பு அதி ரடிப்படை முகாம்களில் வைத்து - இராணுவத்திற்கு இன்பார்ம ராக மாறச் சொல்லி இராணுவ அதிகாரிகள் அப்சலை சித்திர வதை செய்த தகவலையும் அவர் பசிபிக் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டிருந்தார். இவையெல்லாம் போராளிக் குழுக்களுக்கு அப்சல் மீது வெறுப்பையும், கோபத்தையும் தான் விதைத்திருக்கும். இந்த வகையில் போராளிக் குழுக்க ளின் பார்வையில் அப்சல் இந்திய அரசிடம் சரணடைந்த ஒரு துரோகியாக இருந்திருப்பார். ஏனெனில் சரணடைவதைப் பொறுத்தவரை அதை ஒரு கோழைத்தனமாக கருதுபவர்கள் போராளிகள். அதனால் அப்சல் குருவின் தூக்கு அவர்களை எந்த வகையிலும் பாதிக்காது. ஆக, அப்சல் குருவிற்காக பழி வாங்கவே ஹைதராபாத் குண்டு வெடிப்பு நடந்தது என்பது அபத் தமானது.

 இன்னும் சொல்லப் போனால், தீவிரவாதக் குழுக்கள் அஜ்மல் கசாபை இந்திய அரசு ரகசியமாக தூக்கிலிட்டது என்ற காரணத் திற்காக - அஜ்மல் கசாபை தூக்கி லிடப்பட்ட காலத்தில் குண்டு வெடிப்பை நடத்தியிருக்க வேண் டும். ஆனால் அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனைக்கு பிறகு அப்படி எந்த குண்டு வெடிப்பும் இந்தியாவில் நிகழ வில்லை.

ஒருவேளை அப்படி ஒரு பயங்கரவா தச் செயல் நடந்தி ருந்து அப்போது மீடி யாக்களும், உளவுத் துறையும் கசாப்பின் தூக்கிற்கு பழி வாங் கவே குண்டு வெடி ப்பு நடத்தப்பட்டுள் ளது என்று சொல்லி யிருந்தால் அதில் முகாந்திரம் இருப்ப தாக கருத முடியும். அப்சல் குரு விஷ யத்தில் இப்படி எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் அப் படியொரு பிரச்சா ரத்தை மேற்கொள் வது கேவலமான செயல் மட்டுமல்ல. நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, முஸ்லிம் சமூகத்தின் மீது ஒடுக்குமு றையை கட்டவி ழித்துவிட உளவுத்து றையும், ஒரு பகுதி மீடியாக்களும், மத்திய அரசில் வீற்றிருக்கும் சங்பரிவார சிந் தனை கொண்ட அதிகாரிகளும் செய்யும் சதி என்றே கருத வேண்டியுள்ளது. சமீப காலங்களாக முஸ்லிம் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மட்டுமல்லாது உச்ச நீதிமன்றத் தின் முன்னாள் நீதிபதி மார்க் கண்டேய கட்சு முதல் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒரு விஷ யத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் பயங்கரவாத பொய் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்பதுதான் அது. சமாஜ்வாதி கட்சி, ஜனதா தள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களின் தலைவர்கள்கூட மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதனால் ஏற்படும் அழுத்தம் - உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மீது மதிப்பு குறை வையும், அவற்றின் செயல்பாடுகள் மீது சந்தேகப் பார்வையை யும் படர வைத்திருக்கின்றன.

இதன் காரணமாக, குண்டு வெடிப்பை நிகழ்த்துவது இஸ்லா மியத் தீவிரவாதிகள்தான் என்ற பரப்புரையை மேற்கொண்டு, ஏற்கெனவே கைது செய்யப்பட்டி ருக்கும் முஸ்லிம் இளைஞர்களை சிறையிலேயே வைத்திருக்கவும், அவர்களுக்கு ஆதரவான குரல் எழுவதை மட்டுப்படுத்தவும் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப் புகளே குண்டு வெடிப்புகளை நிகழ்த்துகின்றனவோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடிய வில்லை. எங்கு குண்டு வெடிப்பு நடந் தாலும், ஏற்கெனவே கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப்ப டிருக்கும் முஸ்லிம் கைதிகளிடம் விசாரணை நடத்த புலனாய்வு நிறுவனங்கள் முடிவு செய்திருப்ப தாக மீடியாக்களுக்கு இதே விசா ரணை அமைப்புகளும், உளவுத் துறையும் செய்தி தருகின்றன.

இப்படித்தான் ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவத்திலும் - ஏற்கெனவே பயங்கரவாத வழக் கில் தொடர்புபடுத்தப்பட்டு, இந் தியன் முஜாஹித்தீன் உறுப்பினர் கள் என்று கூறப்பட்டு, பெங்க ளூரு மத்திய சிறையில் இருக்கும் உபைதுர் ரஹ்மான் என்பவரை யும், திகார் சிறையில் இருக்கும் சையத் மக்பூல் மற்றும் இம்ரான் கான் ஆகியோரையும் கஸ்டடி யில் எடுத்து விசாரித்து வருவ தாக விசாரணை அமைப்புகள் மீடியாக்களுக்கு தகவல் கொடுத்தன. இதன் மூலம், சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர் கள் அப்பாவிகளல்ல தீவிரவாதி கள்தான் என்று நிறுவும் முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டு, அவர்க ளுக்கு ஆதரவான ஜனநாயக சக்திகளின் குரலை பலவீனப்படுத் தப்பார்க்கின்றன உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள். அதனால்தான் அப்சல் குரு வின் தூக்குத் தண்டனைக்கு பழி வாங்கவே ஹைதராபாத் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது என்ற செய்திகள் திரும்பத் திரும்ப பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 15ம் தேதி கூட, அப்சல் குருவின் தூக்கிற்கு பழி வாங்க இந்தியன் முஜாஹித்தீன் தீவிரவா திகள் மஹாராஷ்டிராவில் தாக்கு தல் நடத்தக் கூடும் என்று உள வுத்துறை எச்சரித்திருப்பதாக மஹாராஷ்டிராவின் தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் ராகேஷ் மரியா செய்தியாளர்களி டம் தெரிவித்திருக்கிறார்.

இன்னொரு குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி, முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் குர்லா, மும்ப்ரா, நாக்பாடா போன்ற இடங்களில் போலீஸ் உளவாளி கள் நெட்வொர்க்கை வலுப்படுத் தியிருக்கிறோம் என தெரிவித்த தாக செய்திகள் கூறுகின்றன. இதன் மூலம், சந்தேகப்படும் முஸ்லிம்கள் துன்புறுத்தலுக்கும், பொய் வழக்கு போடப்படுவதற் கும் ளாக்கப்படுவார்கள். குண்டு வெடிப்பு நடக்கப் போகி றது என்று உளவுத்துறை கிளப்பி விடும் பீதி, மாநிலக் காவல்துறை முஸ்லிம் பகுதிகளில் புகுந்து தீவிரக் கண்காணிப்பு என்ற பெயரில் அவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவுவதற்கே வழி வகுக்கும்.

மாநில காவல்துறை அதிகாரி களுக்கு மத்திய உளவு அமைப்புக ளிடமிருந்து ரகசியத் தகவல் களோ, எச்சரிக்கை தகவல்களோ வந்தால் அந்த தகவல்களின் அடி ப்படையில் ரகசியமாக இயங் காமல் மீடியாக்களை அழைத்து ‘முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் தீவிர கண் காணிப்பு' என்று சொல்ல வேண் டிய தேவை என்ன? இதுபோன்ற செய்திகள் முஸ் லிம் சமுதாயத்தின் மீது தொடுக் கப்படும் பயங்கரவாதம் இல்லையா? இப்படி முஸ்லிம் மக்கள் மீது அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விடத்தான் அறி வுக்கு பொருந்தாத அப்சல் குரு வின் தூக்கிற்கு பழி வாங்க குண்டு வெடிப்பு நடைபெறும் என்று பீதி கிளப்பப்படுகிறதா? காவி பயங்கரவாதத்தை ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜகவும் ஊக்கப்படுத்துகின்றன என்று மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியது, அதை சங்பரி வார அமைப்புகள் எதிர்த்தது. அதற்கு மத்திய உள்துறை செய லாளர் ஆர்.கே. சிங் ஆதாரம் வெளியிட்டது.

இவையெல்லாம் சங்பரிவாரத் தின் நிஜமுகத்தை நாட்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி விட்டதை சரிகட்டி, தங்கள் மீதான பயங்கரவாதப் பார்வையை திசை திருப்பவும், மறக்கடிக்கவும் ஹைதராபாத் குண்டு வெடிப்பை நடத்தி விட்டு, இஸ்லாமிய அமைப்புகள் மீது பழியைத் தூக் கிப் போட்டிருக்கிறதோ என்ற சந்தேகமெல்லாம் உளவுத்துறைக் கும், பாதுகாப்பு அமைப்புகளுக் கும் ஏற்படாதா...? அப்சல் குருவின் தூக்கிற்கு பழி வாங்க... என்ற சந்தேகம் மட்டும் தான் ஏற்படுமா?

Pin It