மணிப்பூர் தலைநகர் இம்பாலாவில் நடந்த குடியரசுதின நிகழ்ச்சியில்,போலி என்கவுண்ட்டர் வழக்கில் சேர்க் கப்பட்ட ஒரு காவலருக்கு குடியரசுத் தலைவரின் காவலருக்கான வீரதீர செயலுக்கான பதக்கம் வழங்கப்பட்டிருக்கிறது.அவர் இப்பதக்கம் பெற்ற ஒன்பது காவலர்களில் ஒருவராவார்

என்.நுங்ஷிபாபு சிங் என்ற காவலரும் மேலும் வேறு மூன்று காவலர்களும் 2010ம் வருடம் நடத்தப்பட்ட ஒரு நீதி விசார ணையில் குற்றவாளிகள் என்று நிரூபணம் ஆகியும் இன்னும் அவர்களில் யாரும் தண் டிக்கப்படவில்லை.

முத்தும் ராஜன் சிங் மற்றும் முத்தும் ஹெரோஜித் சிங் என்ற இரு ஒன்றுவிட்ட சகோதரர்கள் மேற்கூறப்பட்ட காவலர்க ளால் கடந்த 2008ம் ஆண்டு நடந்த போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டவர்கள்.

இதில் ராஜன் என்பவர் தனது மனைவி யான இபச்சா தேவியுடன் சேர்ந்து இம்பா லாவில் ஒரு உணவகம் நடத்தி வந்தவர். அவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.

இதற்கிடையில்,மணிப்பூரில் மிக அதிக எண்ணிக்கையில் நடக்கும் போலி என்க வுண்ட்டர்களுக்கு இதுபோன்ற வீரதீர செயல்களுக்கான விருதுகளும் அந்த விருதுகளுக்கு வழங்கப்படும் பணி உயர்வு களும், பரிசுகளுமே ஒரு முக்கியமான காரணம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Pin It