ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் நாடாளு மன்ற உறுப்பினர்கள், தங்கள் நாட்டை விட்டு அமெரிக்கப் படைகள் வெளிறேய வேண்டும். அதே சமயம் தாலிபான்கள் அந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தினை மதிக்கும் காலம் எல்லாம் அவர்கள் அரசாங்க த்தில் அங்கம் வகிப்பதைப் பற்றி எங்களுக்கு கவலை யில்லை என குரல் எழுப்பியுள்ளனர்.

“நாங்கள் எங்கள் மண்ணிலி ருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதையே விரும்புகி றோம். ஆனால் தாலிபான்க ளைப் பொறுத்தவரை இந்நாட் டில் வசிக்கும் எந்த ஒரு நபரா னாலும் அவர் இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை யும் பெண்ணுரிமையையும் மதிக் கும்பட்சத்தில் இந்நாட்டின் அர சாங்கத்தில் அங்கம் வகிக்கலாம் என்று தய்யிபா ஜிஹாதி என்ற ஆப்கானிஸ்தா னைச் சேர்ந்த மேல்சபை உறுப்பினர், இந்திய மகளிர் பத்திரிகைக் குழுவினரு டன் நடந்த ஒரு கலந்துரையாட லின்போது கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா 2014லின் இறுதி யில் அமெரிக்காவின் ஆப்கான் போர் முடிவுக்கு வரும் என்றும், அமெரிக்கப் படைகள் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நஜீபா ஹுசைனி என்ற பெண்மணி, “இப்பொழுது ஆப்கானிஸ்தானில் அதிகமான பெண்கள் கல்வி கற்பதாகவும், கல்வி அதிகமான பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதா கவும், அதிகமான பெண்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பட்டம் பெறுவதாகவும், முனை வர் பட்டப் படிப்பிற்கு சேருவதா கவும் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் 1996ம் ஆண் டிலிருந்து டிசம்பர் 2001வரை நீடித்த தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் பள்ளிக் கூடங்க ளுக்கோ அல்லது வேலைக ளுக்கோ செல்வது சில இடங்க ளில் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Pin It