25-02-2012 அன்று காலை 11.00 மணியளவில் நாம் விரைவாக அலுவலகத் திற்கு கிளம்பினோம். கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது வாகனங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. யாருக்கோ விபத்து தான் ஏற்பட்டுள்ளது என்று எண்ணி நாமும் சற்று பொறுமையாக இருந்தோம்.

நேரம் ஆக ஆக வாகனங்களின் ஒலிப்பான்கள் அலறிக் கொண்டிருந்தன. நாம் பொறுமை இழந்து நமது டூ வீலரை மேம் பாலத்தின் ஓரம் நிறுத்தி விட்டு சற்று முன்னே சென்று பார்த் தோம். அங்கே வாகன ஓட்டுனர் கள் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் தனது வாகனத்தை நடு ரோட்டில் நிறுத்தி வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பை ஏற்ப டுத்தி தனது வாகனத்தின் மீது மோதியவரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.

டிராபிக் போலீஸôர் யாராவது தென்படுகிறார்களா என்று பார்வையை அலையவிட்டபடியே மேம்பாலத்தின் கீழே பார்வையிட்டோம். அங்கே ஜரூராக வாகன வசூல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் டிராபிக் போலீசார்.

இதைக் கண்ட நாம் உடனே காவல்துறையின் அவசர எண் 100ஐ அழைத்து மேம்பாலத்தின் மீது ஏற்பட்டுள்ள வாகன நெரிசலையும், அங்கே இரண்டு வாகன ஓட்டிகள் தகராறு செய்து கொண்டிருந்ததையும், மேம்பாலத்தின் கீழே மூன்று காவல்துறை அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததையும் போட்டுக் கொடுத்தோம்.

சில நிமிடத்தில் மீண்டும் நமது லைனில் வந்த காவல்து றையினர் எங்கே பிரச்சினை என்று கேட்டனர். நாம் மீண்டும் மேம்பாலத்தின் மீதுதான் பிரச்சினை என்றும், மேம்பாலத் தின் கீழே வசூல் வேட்டை என் றும் கூறினோம்.

சில நிமிடங்களில் காவல் துறை கண்காணிப்பு வாகனம் வந்து வசூல் வேட்டை செய்து கொண்டிருந்த போலீசாரை மடக்கி, மேம்பாலத்தின் மீது வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது; அதை கண்டு கொள் ளாமல் வசூல் வேட் டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்களா என்று திட்டி விட்டு மேம்பாலத்தின் மீது தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு ஓட்டுனர்களையும் பிடித்து விசாரித்தனர். அங்கு ஏற்பட்ட வாகன நெரிசலையும் சரி செய்தனர். காவல் துறை இதுபோல் மக்கள் குர லுக்கு மதிப்பளித்தால் மக்கள் என்றும் காவல்துறையை போற்றுவர்.

Pin It