jallikattu_351ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு என்கிறார்கள்... இது பகுத்தறிவுக்கு உட்பட்ட செயலா என்றால் கோபம் வேறு வருகிறது.. வண்டலூரில் பேசி ஒரு சிங்கத்தை இரண்டு நாட்கள் வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறேன்... இன்னும் நாங்கள் வீரமானவர்கள் என்று நிரூபிக்க விரும்புபவர்கள் கிளம்பி வரலாம்... என்ன இருந்தாலும் மாட்டை விட சிங்கம் பெஸ்ட் தானே?

சங்கமத்தில் கர்நாடக இசைக்கு என்ன வேலை?

பள்ளிகளில் அகதிகளைப் போல் தங்க வைக்கப்படுவது, கர்நாடக இசைக்கலைஞர்களுக்கு அள்ளியும், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கிள்ளியும் ஊதியம் தருவது, நிகழ்ச்சி நடைபெறும்போது, கர்நாடக இசைக்கலைஞர்கள் வந்து விட்டால் உடனடியாக மேடையை அவர்களுக்குத் தந்து நமது கலைஞர்களை இறக்கி விடுவது... என சங்கமத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்குத் தான் எத்தனை அவமானங்கள்... நாட்டுப்புறக் கலைவிழா என்ற பெயரில் நடைபெறும் சங்கமத்தில் கர்நாடக இசைக்கு என்ன வேலை?

நீதித்துறை யாருக்கானது?

மதுரை அங்கம்மாள் வழக்கு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள் தானே? விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்கமாளின் கணவரை சித்திரவதை செய்து கொலை செய்து, அங்கம்மாவை காவலர்கள் (?) பாலியல் பலாத்காரம் செய்து நடுத்தெருவில் வீசியபோது அவருக்கு வயது 33...
 
இந்த வழக்கை மக்கள் கண்காணிப்பகம் கையில் எடுத்தது. 13 ஆண்டுகளாக நீதி கேட்டு அங்கம்மாள் நடத்தி வரும் நெடிய போராட்டத்தில், தற்போது அவரது மகன் வழக்கறிஞர் மலைச்சாமியும் இணைந்திருக்கிறார். அங்கம்மாள் சார்பாக அவரும் ஆஜராகப் போகிறார். துன்பியல் சம்பவங்கள் நடந்தபோது மலைச்சாமி எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
 
இதுதொடர்பான செய்தியை எடிட் செய்து கொண்டிருந்தேன்... அங்கம்மாள் தன்னுடைய கண்ணீர்க் கதையை சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒரு இடத்தில், ''என்னோட டிரஸ்ஸை கழட்டி, என்னை பாலியல் பலாத்காரம் பண்ணி.......    இந்தக் கதையை இத்தனை வருஷத்தில எத்தனை பேர்கிட்ட சொல்லியாச்சு" என்று அழுகிறார்....
 
என்னால் அந்த இடத்தை மிகச் சாதாரணமாக தாண்டவே முடியவில்லை. எனக்கு ஏதேனும் சிறு துன்பம் நடந்தால் கூட நான் அதிலிருந்து உடனே மீண்டு, மகிழ்ச்சியை நோக்கித் தான் நகர்வேன்.... இதுதான் மனித இயல்பும் கூட இல்லையா?
 
பதிமூன்று வருடங்களாக தனக்கு நேர்ந்த துன்பத்தில் இருந்து மீண்டு வரமுடியாமல் அதையே பேசிக் கொண்டிருக்க நேர்வது எவ்வளவு பெரிய சோகம்?
 
ஒரு எளிய பெண்ணின் கண்ணீருக்கு பதிமூன்று ஆண்டுகளாக விடைசொல்ல முடியாத இந்த நீதித்துறையை நம்ப வேண்டிய அவசியம் சாமானிய மனிதர்களுக்கு என்ன இருக்கிறது?

(பேஸ்புக்கில் எழுதியது; படம் நன்றி: தி ஹிந்து)

- மினர்வா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It