சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லும் முஸ்லிம்கள்!!

டெல்லி ஜாமியா நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்தும் உத்திரப் பிரதேசத்தின் பல பகுதிகளிலிருந்தும், பீகாரிலிருந்தும் சமீப காலங்களாக பெருமளவிலான முஸ்லிம் இளைஞர்கள் விசாரணை அமைப்புகளால் பயங்கரவாத வழக்குகளில் கைது செய்யப்படுவது தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. இது குறித்து மத் திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் அல்லது போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் முஸ்லிம் சமூ கத்திற்கு மத்தியில் பெரும் குறையாக இருந்து வரு கிறது.

இந்நிலையில், மத்திய அரசை யும், மாநில அரசையும் நம்பிக் கொண்டிருப்பதைவிட, அடுத்த முயற்சி மேற்கொள்வோம் என்கிற முடிவுக்கு வந்த வட இந்திய இஸ் லாமியத் தலைவர்கள், முஸ்லிம் இளைஞர்களின் கைதுகள், தடுப் புக் காவல் பயங்கரவாத முத்திரை குத்துதல் போன்றவை சட்ட விரோதச் செயல்கள் ஆகும் என் றும், இந்திய அரசின் சட்டங்கள் மற்றும் அதன் அரசமைப்பில் போற்றுதலுக்குரியதாக கருதப்ப டும் மனித உரிமைகளை மிக மோசமாக மீறும் செயலாகும் என் கிற வகையிலும் இப்பிரச்சினையை சர்வதேச மனித உரிமை அமைப்பு களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல தீர்மானித்திருக்கின்றனர்.

இப்பிரச்சினையை சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற் கென பல்வேறு முஸ்லிம் அமைப் புகளின் தலைவர்கள் இணைந்து (Co-ordination Committee for Indian Muslims (C.C.I.M) - இந்திய முஸ் லிம்களுக்கான ஒருங்கி ணைப்புக் குழு) என்கிற அமைப்பை உரு வாக்கியுள்ளனர்.

கடந்த 30ம் தேதி டெல்லியில் கூடிய இந்த அமைப்பினர், அண் மையில் சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த பீகார் இளைஞர் ஃபஸி முஹம்மது சவூதி அரேபி யாவிலுள்ள இந்திய அதிகாரிக ளால் கைது செய்யப்பட்டு இந் தியாவிற்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் விவாகரத்தின் பின்னணி மற்றும் கடந்த வாரம் உத்திரப் பிரதேச மாநிலம் ஆஸம் கரில் ஏ.டி.எஸ். படையினரால் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு காஷ்மீர் இளைஞர்கள் இதுவரை என்ன ஆனார்கள் என்பது குறித்து எவ்விதத் தகவலும் இல்லாததை குறித்தும் விவாதித்தனர்.

இதில், காஷ்மீர் இளைஞர்கள் ஆஸம்கர் நகரிலுள்ள ஜம்மியத் துல் ஃபலா மதரஸôவின் மாண வர்கள். அலிகர் ரயில் நிலையத்தி லிருந்து இவர்கள் ஏ.டி.எஸ். படையினரால் கடத்தப்பட்டனர். (கடந்த வார சமுதாய மக்கள் ரிப் போர்ட்டில் இது குறித்து செய்தி வெளியானது)

ஃபஸி மஹ்மூத் பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியைச் சேர்ந்த இளைஞர். இவர் கடந்த 5 வருடங் களாக சவூதி அரேபியாவில் பணி யாற்றி வருகிறார். இவர் பெங்க ளூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த குண்டு வெடிப்பு சதி வழக் கில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். இவர் சவூதி அரேபியாவில் தடுப் புக் காவலில் வைக்கப்பட்டிருக்கி றார் என்றும் இவரை இந்தியா விற்கு அனுப்புவது குறித்த இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வேண்டு கோளுக்காக சவூதி அதிகாரிகள் காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயம், ஃபஸி மஹ்மூத் கடந்த மே 13ம் தேதியே சவூதி அரேபியாவிலுள்ள இந்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக் கிணங்க இந்தியாவிற்கு அனுப்பப் பட்டு விட்டார் என்றும் செய்தி கள் வெளியாகியுள்ளன. ஆயி னும், சுமார் 20 நாட்கள் ஆன நிலையிலும் அவர் எங்கே இருக்கி றார் என்கிற தகவல் இல்லை.

இந்நிலையில், கடந்த 30ம் தேதி மஹ்மூதின் மனைவி நிக்ஹத் பர் வீன் உச்ச நீதிமன்றத்தில் ஹேபி யஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்ய... ஜூன் 1ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத் திற்கு நோட்டீஸ் அனுப்பியுள் ளது உச்ச நீதிமன்றம். அதன் பின் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்படும்.

இந்த இரு சம்பவங்கள் உள்பட, கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாத வழக்குகளில் சம்பந் தப்பட்ட நிகழ்வுகளையும் இந்த அமைப்பினர் விவாதித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் பெரு மளவிலான முஸ்லிம் இளைஞர் கள் விசாரணை அமைப்புகளால் பிடித்துச் செல்லப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பயங்கரவாத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். சுமார் 12 பேர்வரை பயங்கரவாத வழக்குக ளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள னர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் பொலிட்டிகல் கவுன்சில் ஆப் இந்தியா என்கிற அமைப்பின் தலைவரும், இஇஐங யின் உறுப்பினருமான டாக்டர் தஸ்லிம் ரஹ்மானி,

“காணாமல் போன, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, கைது செய்யப்பட்டுள்ள, பயங்க ரவாத குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள முஸ் லிம் இளைஞர்கள் குறித்து விரி வான தகவல்கள் அடங்கிய ஆவ னத்தை தயாரித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்தி யாளர்களிடம் தெரிவித்திருக்கி றார்.

இதுபோன்று சட்ட விரோத கைதுகளுக்கு எதிராக களமிறங்கு வதற்காக ஒரு சட்டக் குழுவை தேசிய மற்றும் மாநிலங்கள் அள வில் ஏற்படுத்தவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இந்த ஆலோச னைக் கூட்டத்தை நடத்துவதற்கு இரு தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் வஜாவாத் ஹபீபுல்லாஹ் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிபுள்ளனர்.

அக்கடிதத்தில், நாடெங்கிலும் பல்வேறு பகுதிகளிலி ருந்து முஸ்லிம் இளைஞர்கள் ஆதாரமற்ற முறையில் கைது செய்யப்பட்டு வருவது முஸ்லிம் சமுதாயத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் நடந்த இரண்டு (ஃபஸி முஹ்மது மற்றும் காஷ்மீர் இளைஞர்கள்) சம்ப வங்கள் மேலும் அச்சத்தை கூட் டுவதாகவே உள்ளது...” என குறிப்பிட்டுள்ள தோடு,

“முன்பு பத்திரிகையாளர் காஸிமியின் கைது சம்பவத் தில் அவருக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பது தெரிய வந்தது.

இதுபோன்ற சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு வலியை உண்டாக்கும் வகையில் உள்ளன.

எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குறைந்த பட்சம் ஆறுதல் அளிக்கும் வகையில் மேற்கண்ட இரண்டு சம்பவங்களில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எவ்வித உறுதியான ஆதாரங் களும் இல்லாத நிலையில் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை அமைப்புகளின் தவ றான நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டவர்கள் தடுப்புக் காவ லில் வைக்கப்பட்டு விசாரணை அதிகாரிகள் அவர்களை சித்திர வதை செய்வதன் மூலமாக ஒப்பு தல் வாக்கு மூலம் பெற்று தங்க ளைப் பாது காத்துக் கொள்ளும் வகையில் போலியான ஆதாரங்களை ஏற்படுத்திக் கொள்ளும் நிலை உள்ளது.

இது சட்ட விரோதமும், இந்தியாவின் சர்வதேச ஒப்பத்தங்களுக்கும் எதிரானது...” என்றும் அக்கடிதத்தில் விரிவாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமாக பிடித்துச் செல்லுப்படுவது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரியாததல்ல... இருந்தும் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை என்ற பெயரில் சிறுபான்மை முஸ்லிம் சமு தாயத்தின் மீது அடக்குமுறைகளை ஏவி அச்சுறுத்திக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த மத்திய அரசு தயாராக இல்லை.

உ.பி. தேர்தலில் பாட்லா ஹவுஸ் என்கவுண்ட்டர் சம்ப வம் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து காங்கிரûஸ வீழ்த்தியதைப்போல, முஸ் லிம் இளைஞர்களின் சட்ட விரோதக் கைதுகள் பொதுத் தேர்தலின்போது எதிரொலிக் கும். அது காங்கிரûஸ வீழ்த் தும்!

- அபு

Pin It