வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்.

சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.' என்று பாடினான் பாரதி.

சேதுவை மேடாக்கி இலங்கைக் கும் தமிழகத்திற்கும் பாலம் கட்டிட எண்ணிய பாரதியின் கனவை, சேது வுக்கு மதவாத முலாம் பூசி மூட்டை கட்டியது போன்று பாரதியின் கன வையும் மூட்டை கட்டிவிட்டார்கள் சங்பரிவாரத்தினர். அதே பாரதியின் மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்' என்ற கனவு மட்டும் நிறைவேறியுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து, கொழும்புக்கு பயணிகள் கப்பல் சர்வீஸ் துவக்கப்பட்டிருக்கிறது. முதல் பயணிகள் கப்பலாக, ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற கப்பல் பயணித் ததை, மக்கள் ஆர்வமுடன் வரவேற் றுள்ளனர். விமானச் சேவையை விட குறைந்த கட்டணம் கொண்ட இந்த பயணிகள் கப்பல் சேவையை, மத் திய கப்பல் போக்குவரத்து அமைச் சர் வாசன் துவக்கி வைத்திருக்கிறார்.

இந்த கப்பல் சேவையை தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட சில கட்சி கள் கண்டித்துள்ளன. ஆனால் இலங்கைக்கு கப்பல் விடுவது என் பது இன்று நேற்றல்ல; சுதந்திர போரட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்ட வருமான வ.உ.சி. காலத்திலயே இருந்தது என்பது இந்த எதிர்ப்பாளர் களுக்கு தெரியாதா? பிரிட்டானிய ஆட்சியாளர்களுக் கெதிராக கொழும்புக்கும் தூத்துக் குடிக்குமிடையில் சுதேசி கப்பல் சேவை நடத்திக் காட்டி தமது பிரித் தானிய ஆட்சி எதிர்ப்பு போராட் டத்தை முன்னெடுத்தார் வ.உ.சி.

மேலும், இலங்கையில் தலை மன்னாருக்கும் ராமேஸ்வ ரத்துக்கும் மிடையே பயணிகள் கப்பல் சேவை நடைபெற்று வந்ததும் இலங்கையில் ஆயுதப் போராட்டம் தலைதூக்க தொடங்கியபின் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட் டதும் இவர்களுக்கு நினைவில் லையா? சற்றேறக்குறைய 104 ஆண்டுகளுக்குப் பின்னால் மீண்டும் வ.உ.சி.யின் கனவும் - பாதியின் கனவும் நிறைவேறியதை இவர்கள் தடுக்க நினைக்கலாமோ? அதுமட்டுமன்றி இலங்கை யோடு வியாபார தொடர்பு கொண்ட தமிழர்கள் அன் றைக்கு எந்த விமான சேவையை பயன்படுத்தி னார்கள்? இந்த கப்பல் பய ணத்தைதானே தேர்ந்தெடுத் தார்கள்? இலங்கையோடு வர்த்தக தொடர்பு உள்ள தமிழக குடும்பங்கள் இன்றும் தென் மாவட்டங்களில் உள்ளதே. இதெல்லாம் இலங்கைக்கும் - தமிழகத்திற்கும் உள்ள கப் பல் போக்குவரத்தை உறு திப்படுத்தவில்லையா?

இந்த பயணக் கப்பலை எதிர்ப்பவர்கள் கூறும் கார ணமும் நகைப்பிற் குரியது. ஒருசாரார் தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கையோடு கப்பல் உறவு கொள்வதா? என்கின்றனர். இன்னொரு சாரார் விடுதலைப் புலிகள் இந்த பயனியர் கப்பலை தவறான வழிக்கு பயன்படுத்த வாய்ப்புண்டு என்கின்றனர். இந்த இரண்டு காரணங்களும் தவறாகும். பாகிஸ்தானோடு இந்தியாவுக்கு என் றைக்குமே முழுமையான நல்லுறவு இருந்ததில்லை. அதே பாகிஸ்தானுக்கு நாம் ரயில் விடவில்லையா? பஸ் விடவில்லையா? அப்போது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் இந்த பயணத் தொடர்பை தவறாக பயன்படுத்துவர் என்று இவர்கள் கூறவில்லையே? பாகிஸ்தானோடு இந்திய பயணத் தொடர்பை தடுக்கவில்லையே? மேலும் விமான சர்வீஸ் வளர்ந்து விட்டது. அதில் அதிகம் குற்றச் செயல்கள் நடப்பதை, செய்திகள் காட்டுகின்றன. இந்த கப்பல் சர்வீசில், ஏன் உரிய நடைமுறைகள் மூலம், அம்மாதிரி தவறுகளைத் தடுக்க முடியாது? அதைத் தடுக்க, நவீன சட்ட திட்ட நடைமுறைகள் இருக்கும்போது ஏன் பயப்பட வேண்டும்?

மேலும், தூத்துக்குடி - இலங்கை பயணக் கப்பலால் எதிர் காலத்தில் தென் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் அதிக வாய்ப்புகள் ஏற்படும். இனி நாட்கள் செல்ல செல்ல அதிக அளவில் சுற்றுலா செல்பவர்கள், சிறிய வர்த்தகர்கள் இந்த சர்வீசைப் பயன்படுத்துவர். இலங்கைக்கு தேவைப்படும் ஆயத்த ஆடைகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகிய வைகளை, அதிக அளவில் இனி இங்கிருந்து அனுப்ப, இந்த கப்பல் சர்வீஸ் பயன்படுத்தப்படும். இந்த கப்பல் சர்வீசால் தூத்துக்குடிக்கு, அதிக பொருளாதார முக்கியத்துவம் கிடைக்கும் என்பதையும் கவனத் தில் கொள்ள வேண்டும்.

ஆக எந்த வகையில் பார்த்தாலும் இலங்கையுடனான இந்த புதிய பயண உறவு நிச்சயம் பாரதத்திற்கு பலனளிக்குமேயன்றி, பாதகம் விளைவிக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

-முகவையார்

Pin It