சென்னையை அடுத்த பட்டூர் மாங்காடு பஜார் தெருவைச் சேர்ந்த கணவரை இழந்த 62 வயது பெண் பசிலாபீவிக்கு 4 மகள்கள் உள்ளனர். குடும்பம் வறுமையில் வாடியதால், வெளிநாடு சென்று வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற முடிவு செய்த பசிலா பீ, டிராவல் ஏஜெண்டு மூலம் மலேசியாவுக்கு சென்றுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது பசிலா பீயிடம் டிராவல் ஏஜெண்டு ஒரு சூட்கேசை கொடுத்து மலே சியா போய்ச் சேர்ந்ததும் வாலிபர் ஒருவர் சூட் கேஸ் வாங்கிச் செல்வார் என்று கூறினாராம். சூட்கேசில் என்ன இருக்கிறது என்பதையறியாத பசிலா பீ எடுத்துச் சென்ற சூட் கேசை சோதனையிட்ட மலேசிய அதிகாரி கள், அதில் 3 கிலோ கேட்டமின் போதைப் பொருள் இருந்தததையடுத்து பசிலா பீவியை கைது செய்ய, மலேசியா கோர்ட்டு அவருக்கு தூக்கு தண் டனை விதித்தது.

இந்த தகவல் மாங்காட்டில் வசிக்கும் அவ ரது 4 மகள்களுக்கு தாமதமாக தெரியவந்தது. அவரை அனுப்பி வைத்த டிராவல் ஏஜெண் டிடம் கேட்டபோது அவர் தன்னால் எதுவும் செய்ய முடியாது என கை விரித்து விட்டார். ஆனால் பசிலாவை மலேசிய போலீசார் கைது செய்ததும் அவரது குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நஷ்டஈடு கொடுப்பதாக டிராவல் ஏஜெண்டு கடிதம் எழுதி கொடுத்தாராம். இந்த கடிதம் பசிலாவின் மூத்த மகள் நூர்ஜ கானிடம் உள்ளது.

இது முக்கிய ஆதாரமாக சிக்கியிருப்பதால் அந்த கடிதத்தை திரும்ப கேட்டு ஏஜெண்டு மிரட்டுவதாக நூர்ஜகான் புகார் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பசிலா பீ மகள்கள் முதலமைச்சரின் குறைகேட்பு பிரிவிலும், சென்னை கமிஷனர் ஆபீசிலும் புகார் மனு கொடுத்தனர். தங்களது தாயை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் கூறியிருந்த னர்.

இதனால் பசிலாபீயின் மகள்களும், உற வினர்களும் முதலமைச்சரின் குறை தீர்ப்பு பிரி விலும், சென்னை போலீஸ் கமிஷனரிடமும் தங்களது தாயாரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு கொடுத்துள் ளனர். இந்த வழக்கில் இன்றுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. முதலாவதாக அந்த டிராவல் ஏஜெண்டு கைது செய்யப்படாதது ஏன் என தெரிய வில்லை.

அடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் பசிலாவை முறையாக சோதித்தி ருந்தால் அவர் சென்னையிலேயே கைது செய்யப்பட்டிருப்பார். அப்போது பெட்டியை தன்னிடம் கொடுத்த டிராவல் ஏஜெண்டை பற்றிய விபரமும் கூறியிருப்பார். உண்மைக் குற்றவாளியான டிராவல் ஏஜெண்டு கைது செய்யப்பட்டு, பசிலாபீ விடுதலை செய்யப்பட்டிருப்பார். ஆனால் சென்னை விமான நிலைய சோதனை அதிகா ரிகளின் அலட்சியம் இன்று ஒரு அபலையை தூக்குக் கயிறை எதிர்நோக்க வைத்துள்ளது. இந்த தவறை செய்த விமான நிலைய சோதனை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

டிராவல் ஏஜெண்டு உடனடியாக கைது செய்யப்பட்டு அவனை மலேசிய அரசில் ஒப் படைத்து அந்த அபலை பெண்ணை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், இது பற்றி கேள்விப்பட்ட வேலூர் எம்.பி. அப்துர் ரகுமான் அவர்கள் இந்த பிரச் சினையை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் கவனத்துக்கு கொண்டு சென்று மலேசிய அரசுடன் பேசி சென்னை பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் மட்டுமன்றி, முஸ்லிம் சமுதாய அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளும் இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசை வலியு றுத்த வேண்டும். ஆண்களுக்கே வெளிநாட்டு பயணம் சவாலாக உள்ள நிலையில், பெண்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் இதுபோன்ற பயணங்களை தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது.

-அபு சைஃப்

Pin It