சங்பரிவார் அராஜகம்

மதுரை மாநகருக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றத் தில் முஸ்லிம் ஆண்களும், பெண்களும் இரண்டாயிரம் பேருக்கு மேல் திரண்டு நின்று ஆர்ப் பாட்டம் செய்வ தாகவும், அத னால் அப்பகுதி யில் பதட்டம் நிலவுவதாகவும் வந்த தக வலையடுத்து அங்கே விரைந் தோம்.

"நாரே தக்பீர்! அல்லாஹு அக்பர்'

நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!!

கொடிமரத்தை திருடியவர்கள் மீது

நடவடிக்கை எடு!

காவல்துறையே! காவல்துறையே!!

ஒரு சார்பாக நடக்காதே! முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்காதே!!

என்கிற கேஷங்கள் அந்த இடத் தையே அதிர வைத்துக் கொண்டிருந்தது. நூற்றுக் கணக்கில் குவிக்கப்பட் டிருந்த காவல் துறையினர் அவர் களை கட்டுப்படுதிக் கொண்டிருந் தனர்.

போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்த மதுரை ஐக் கிய ஜமாஅத் செயலாளர் அப்துல் காதரை அணுகி என்ன நடந்தது? என்று விசாரித் தோம்.

"திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந் தர் மலையின் கீழ் பகுதியில் காசி விசுவ நாதர் கோயிலும், அங்கிருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் மலையின் மேல் பகு தியில் பழமையான சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவும் உள்ளது. அந்த தர்கா விற்கு நன்கொடையாக 40 ஏக்கர் பரப்ப ளவு நிலத்தை சுமார் 1000 ஆண்டுக ளுக்கு முன்னால் மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் வழங்கினார். இதற்காக செப்பு பட்டயமும் வழங்கப்பட் டுள்ளது.

சிக்கந்தர் தர்காவிற்கு அருகிலுள்ள பகுதிகள் கீழேயுள்ள காசி விசுவநாதர் கோயிலுக்கு சொந்தமானவைகள் என்று கோயில் நிர்வாகத்தினர் வழக்கு தொடர்ந் துள்ளனர். 1975ஆம் ஆண்டு மதுரை நீதிமன்றம் அந்தப்பகுதி சிக்கந்தர் தர்கா விற்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியது.

இருந்த போதிலும் அந்த இடம் தங்க ளுக்கு சொந்தமானது என்று கோயில் தரப்பினர் மேல்முறையீடு செய்து வழக்கு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிக்கந்தர் தர்காவிற்கான சந்தன கூடு விழா வருகின்ற 9ம் தேதி நடைபெற்றது. சந்தனக் கூடு விழாவின்போது தர்காவின் எதிரேயுள்ள மரத்தின்மேல் கொடி ஏற்று வது வழக்கமான ஒன்று.

கொடியை ஏற்றும் மரம் பட்டுப்போய் உள்ளதால் அதற்கு பக்கத்தில் கொடி மரத்தை நட்டு கொடியை ஏற்றுவதற்கு 1 மாதத்திற்கு முன்பு பீஸ் மீட்டிங் நடத்தப் பட்டது.

இக்கூட்டத்தில் தர்கா தரப்பில் 8 பேரும், கோயில் தரப்பில் 8 பேரும், காவல் துறை துணை கமிஷ்னர், தாசில்தார் மற் றும் காவல்துறை, வருவாய் துறை அதி காரிகளும் கலந்து கொண்டனர். புதிய கொடி மரம் வைப்பதற்கு கோயில் தரப் பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு தர்கா தரப்பினர் அந்த இடம் எங்களுக் குத்தான் சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எங்களுக்கு சொந்த மான இடத்தில் கொடிமரம் ஊன்றுவதற்கு நாங்கள் யாருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை என்று தெரிவித்தனர்.

அப்போது வருவாய்துறை அதிகாரி கள், உங்களுக்கு சாதகமாக நீதிமன்ற தீர்ப்பு இருந்தாலும் நீதிமன்றத்தில் வர்க் கிங் ஆர்டர் பெற்று சர்வே செய்து உங்கள் நிலம் எது என்று உறுதி செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இறுதியாக, பழைய கொடி மரத்தின் அருகே மரத்தாலான புதிய கொடி மரத்தை ஊன்றிக் கொள்ளலாம் என்று பீஸ் மீட்டிங்கில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கொடி மரத்தை ஊன்றி விட்டு, கொடி ஏற்றுவதற்கு பள்ளி வாசலில் இருந்து கொடியை எடுத்துக் கொண்டு ரதவீதிகள் வழியாக ஊர்வலம் நடத்தி மலை மேலேயுள்ள தர்காவிற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிமரம் காணாமல் போயிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து விசாரித்தபோது, புதிய கொடி மரம் ஊன்றப்பட்ட இடம் காசி விசுவநாதர் கோயிலுக்கு சொந்தமானது என்று கோயில் தரப்பில் புகார் அளிக்கப் பட்டதையெடுத்து திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புராம் உத்தர வின் பேரில் கொடிமரம் அகற்றப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து ஒருசார்பாக அநீதி யாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் சுப்புராம் மீது நடவடிக்கை எடுக்கும்படி தற்போது ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டி ருக்கிறது...'' என்றார் மதுரை ஐக்கிய ஜமாஅத் செயலாளர் அப்துல் காதர்.

நேரம் செல்லச் செல்ல திருப்பரங்குன் றத்தில் போராட்டம் நடக்கும் தகவல் மதுரை மாநகருக்கு கசிந்து மதுரை மாநாகர முஸ்லிம்கள் ஆட்டோக்களிலும் மோட்டார் பைக்குகளிலும் போராட்டப் பகுதிக்கு விரைந்தனர். அப்பகுதி பெரும் பதட்டமாக காணப்பட்டது.

ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகிகளான ராஜ்முஹ்ம்மது, மரைக்காயர், சஹாபுதீன் மற்றும் தொண்டர்கள், பல்வேறு முஸ்லிம் ஜமாஅத்தினர் என்று அனைத்து தரப்பும் பங்கேற்றதால் போராட்டக்களத்தில் ஆவேசம் கட்டுக் கடங்காமல் போனது.

மதுரை காவல்துறை எ.டி.எஸ்.பி. மயில்வாகணன், டி.எஸ்.பி. பொன்ராம் தாசில்தார் கமலசேகரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சமாதனாக் கூட்டம் நடத்தி அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுப்பதாகவும் உடனடியாக அனைவ ரும் கலைந்து செல்லுமாறும் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பின்னர், திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் மதுரை காவல்துறை எ.டி. எஸ்.பி. மயில்வாகணன், விரைவில் நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தர்கா தரப்பினர், கோயில் தரப்பினர் காவல்துறையினர் ஆகிய மூன்று தரப்பி னர் முன்னிலையில் புதிய கொடிமரம் ஊன்றப்பட வேண்டுமென்று முடிவெடுக் கப்பட்டது.

உடனடியாக மூன்று தரப்பினரும் சிக்கந்தர் மலை மீதுள்ள தர்காவிற்கு சென்று அங்கு கொடிமரம் வைத்து கொடி ஏற்றியதையடுத்து ஒரு வழியாக பதட்டம் தணிந்தது. இருந்த போதிலும் 19ஆம் தேதி சந்தனக் கூடு நடைபெறும் வரை வேறு எதுவும் பிரச்சினை ஏற்பட்டு கலவ ரமாக மாறிவிடக் கூடாது என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.

- அபு சுபஹான்

தர்கா வழிபாடு விஷயத்தில் எந்த உடன்பாடும் கிடையாது!

நம்மிடம் பேசிய மதுரை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி மரைக்காயர், "அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்ற விஷயத்தில் நாங்கள் உறுதி யாக உள்ளோம். எங்களுக்கு தர்கா வழிபாடு விஷயத்தில் எந்த உடன்பாடும் கிடை யாது. கார்த்திகை தீபத்தை சாக்காக வைத்துத்தான் இதுவரையில் சங்பரிவாரத்தினர் முஸ்லிம்களுக்கு சொந்தமான பகுதியில் விளக்கேற்றப்போவதாக பிரச்சினை செய்து கலவர பீதியை உருவாக்கி வந்தார்கள். இப்போது தர்கா சந்தனக் கூடு விஷயத்திலும் பிரச்சினையை உருவாக்கி உள்ளார்கள்.

இப்பகுதியில் பதட்டத்தை உருவாக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுவது அவர்களு டைய நோக்கமாக உள்ளது என்பது தெரிய வருகிறது. இதனை முறியடிப்பதற்கா கத்தான் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றோமே தவிர தர்கா வழிபாடு கூடாது என் பதில் இப்போதும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறோம்...'' என்றார் தீர்க்கமாக!

Pin It