மோடியையும், அவரது தலைமையிலான அரசையும் ஒவ்வொரு பிரச்சினையிலும் வெளுத்து வாங்கி வருகின்றன நீதிமன்றங்கள். நீதிமன்றங்களின் கண்டனங்களுக்கு கூடுதலாக இலக்கானவர் என்ற பரிசையே மோடிக்கு வழங்கலாம். ஆனாலும் மோடியின் ஆட்சியில் குஜ ராத் இந்தியாவின் முதன் மாநி லமாக திகழ்கிறது என்ற வாதம் சங்பரிவார சக்திகளால் முன் வைக்கப்படுகிறது. குஜராத் இந்தியாவில் ஒரே ஒரு விசயத்தில் முதலிடத்தில் இருப்பது உண்மைதான். அது எதுவென் றால், முஸ்லிம் மக்களை கருவறுக்கும் விசயமாகும். மற்றபடி மாநிலத் தின் வளர்ச்சியில் முன்னேற்றம் என்ற இவர்களின் இந்த வாதம் சரியா? மோடியின் திறமையால் குஜராத் முதல் மாநிலமாக திகழ்கிறதா? இதன் உண்மை நிலை என்ன என்பதை விடுதலை' நாளேடு புள்ளி விவரத்துடன் வெளியிட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகளை நன்றியுடன் கீழே தருகிறோம்.

"மோடி அளவுக்கு சிறுபான்மை மக்களை வேட்டையாடும் இந்துத்துவ வெறியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார் களே! கோவில்களில் ஆட்டுக் கிடா வைப் பலியிடுவது போல, கோழிகளின் கழுத்தைத் திருகிப் போடுவதைப்போல அல்லவா இஸ்லாமிய மக்களை ஆயிரக்கணக்கில் குரூரமான முறையில் கொன்று குவித்து அவர்களின் ரத்த ஆற்றில் நீந்தித் திளைத்தார்.

இப்படி ஓர் ஆள் கிடைத்தால் பார்ப்பனர்களுக்கு மிகப் பெரும் வாய்ப்புதானே! அதனால்தான் மோடிக்கு லாலி பாடிக் கொண்டிருக்கிறார் சோ! துக் ளக் இதழில் குஜராத் மாநிலத்தில் பாலாறும் தேனாறும் பாய்கிறது என்று தொடர் கட்டுரைகளை எழுதிடச் செய்துள்ளார்.

குஜராத் போல நல்லாட்சி இந்தி யாவுக்குக் கிடைக்க வேண்டுமா? அப்படியானால் மோடியை இந்தியாவின் பிரதமராக்குங்கள் என்ற முழக்கத்தைக் கொடுத்து வருகிறார். அப்படிப் பார்த்தாலும் அவர் கூறுவதாவது உண்மையா என் றால் அதுதான் இல்லை; எல்லாம் வெத்து வேட்டு! இட்டுக் கட்டிச் சொல்லப்படும் தகவல்கள்.

மனிதவள அடிப்படையில் இந்தியாவில் குஜராத்துக்கு உரிய இடம் - 20.
வருமான அடிப்படையில் ஆறாவது இடம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 4வது இடம்.

தனிநபர் வருமான அடிப்படை யில் 9ஆவது இடம். பாலின விகித அடிப்படையில் 22 ஆவது இடம்.

கல்வியில் 14வது இடம்.
மின் உபயோகத்தில் 10ஆம் இடம்.

தடுப்பூசி குறித்த விழிப்புணர் வுச் செய்திகளை அறிவோர் விகித அடிப்படையில் ஆண் கள் 12ஆம் இடம்.

பெண்கள் 15ஆம் இடம்.
சரியான உடல் எடை விகிதத் தில் ஆண்கள் 11ஆம் இடம், பெண்கள் 12ஆம் இடம்.
தொலைக்காட்சியுடையோர் கணக்கிட்டால் 11ஆம் இடம்.
மொத்த சாலைகளின் நீளத் தில் 10ஆம் இடம்.

சாலைகளின் அடர்த்தி விஷயத்தில் 21வது இடம். மின் நிலைய நிர்மாண இடத்தில் 2வது இடம். மருத்துவமனையில் பிரசவம் நடக்கும் இடத்தில் 8வது இடம். சராசரி வாழ்நாளின் ஆயுள் அளவில் 10ஆம் இடம்.

ஏராளமான சலுகைகளை அளித்து அந்நிய முதலீட்டைக் கவருவதில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இந்த மாநிலத்திற்கு உற்பத்தியில் நான்காம் இடம்.

இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மாநிலம்தான் இந்தியாவில் நல்லாட்சி நடக்கும் மாநிலமாம், மக் கள் வளமாக வாழும் மாநிலமாம். சோ கூட்டம் புளுகுகிறது - மயக்க மிட்டாய்க் கொடுக்கிறது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.