ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பசி, பட்டினிக் கொடுமையினால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக மரணித்து வருவதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கக் கூடியவையாக உள்ளன. இதில் முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

சோமாலியாவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை நோக்கி நடக்கும் உடல் நலிவுற்ற பிள்ளைகளும், இளைஞர்களும் உயிர் துறப்பதாக செய்திகள் வருகின்றன. ஐக்கிய நாடுகளின் சார்பாக சோமாலியாவில் முகா மிட்டிருக்கும் நிவாரணக் குழுவி னர் பட்டினியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 1.4 பில்லியன் டாலர்களுக்கு மேல் அதிகமாக தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா மற்றும் டிஜிபொடி ஆகிய நாடுகளில் நிலைமை மிக மோசமாகி வருவதாகவும், இப்பகுதிகளில் சுமார் 12.4 மில்லியன் மக்கள் உதவிக்காக காத்திருக்கி றார்கள் என்று அவசர உதவிக ளுக்கான ஐ.நா.வின் இணைப்பா ளர் வலேரியா அமொஸ் தெரி விக்கிறார்.

சோமாலியாவைப் பொறுத்த வரை அங்கு இரண்டு பிராந்தியங் கள் கடுமையாக பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகு திகள் பட்டினி பிராந்தியங்கள் என கடந்த மாதமே ஐ.நா.வால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால் ஏனைய பிராந்தியங்களிலும் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும்.

ஏற்கெனவே ஆயிரக்கணக்கா னோர் பட்டினியால் இறந்துள்ள னர். பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச சமூகமோ பட்டினி யிலிருந்து காப்பாற்றுவதற்காக 1 பில்லியன் டாலர்களை உதவி யாக வழங்குவதாக உறுதியளித் துள்ளது. இருந்தும் மேலதிகமாக 1.4 பில்லியன் டாலர்கள் இருந் தால்தான் தேவையை பூர்த்தி செய்ய இயலும் என்கிறார் அமொஸ்.

ஐ.நா.வின் கணக்கின்படி, சோமாலியாவில் 3.7 மில்லியன் மக்களும், எத்தியோப்பியாவில் 4.5 மில்லியன் மக்களும், கென் யாவில் 3.7 மில்லியன் மக்களும், டிஜிபோடியில் இலட்சக்கணக் கான மக்களும் பட்டினியால் வாடுகிறார்கள்.

சோமாலியாவின் பல பகுதிக ளில் போராளிகள் அரசுத் தரப்பு டன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயந்து பயந்து நிவா ரண முகாம்களை நோக்கி நீண்ட தூரம் நடந்து செல்லும் மக்கள் வழியிலேயே இறந்து விடுவதாக அமொஸ் குறிப்பிடுகிறார்.

பூமிப் பந்தின் ஒருபுறம் வறட்சி, பசி, பட்டினி என மக்கள் உயிர் துறந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு புறம் பெருமளவு உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுகின்றன. வளர்ச்சி யடைந்த நாடுகளில் உபரியாகும் உணவுப் பொருட்கள் குப்பைகளில் வீசப்படுகின்றன. இதில் அரபு நாடுகளும் வீண் விரயத்தில் ஈடுபடுவது கவலையளிக்கிறது.

ரமலான் மாதங்களில் அரபு நாடுகளில் மிகுதியான உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுகின் றன. “உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள்...'' என திருக்குர்ஆன் சர்வதேச சமூ கத்தை அறிவுறுத்துகிறது.

உணவுகள் வீணாக்கப்படு வதை அரசாங்கங்கள் கட்டுப்படுத்த வேண்டும். அரசாங்கம் மட் டுமல்ல ஒரு தனிப்பட்ட குடும்பம் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக் குத் தேவையான அளவிற்கு சரி யாக கணித்து உணவு வகைகளை தயாரித்தால் உணவுப் பொருட்கள் வீணாகாது. குப்பைகளால் பூமி மாசு அடைவதையும் இதன் மூலம் தடுக்கலாம்.

வீண் விரயம் செய்வதால் உலகில் உணவுப் பொருட்களை விட கழிவுப் பொருட்கள்தான் அதிகரித்துள்ளது.

- ஹிதாயா

Pin It