வடசென்னை பகுதியான வண்ணா ரப்பேட்டை சிமிட்டரி சாலையில் அமைந்துள்ள பிக் பஜார் என்கிற சூப்பர் மார்க்கெட்டிற்கு பர்சேஸ் பண்ணச் செல்கிறார் முஹைதீன் என்கிற இளைஞர். தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு பில் போடச் சொன்னவரிடம், பில் கலெக்டர் கேரிபேக்குக்கும் சேர்த்து பணம் கேட்க அங்கே இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பொது மக்களும் கூடி விட பிக் பஜார் களேபரமானது.

பிரச்சினை குறித்த தகவல் நமக்கு கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் ஸ்பாட்டில் இருந் தோம்.

நாம் சென்ற சிறிது நேரத்தில் கல்மண்டபம் எண் 1 ஸ்டேஷன் காவல்துறையினரும், ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசாரும் ஸ்பாட் டிற்கு வந்து சேர்ந்தனர்.

நாம் முஹைதீனிடம் என்ன நடந்தது என்றோம்.

“நோன்பை முன்னிட்டு சமையல் பொருட்களை பர்சேஸ் பண்ண இங்கே வந்தேன். பர்சேஸ் பண்ணுன பொருட்களைக் கொண்டு செல்ல காசு கொடுத்து கேரி பேக் வாங்கனுமாம். அதுவும் அவங்க கடை விளம்பரம் போட்ட கேரி பேக். காசு தர முடியாதுன்னு சொன் னதுக்குத்தான் அவங்க தகராறு செய்யுறாங்க. இது நான் ஒருத்தன் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. பொது மக்களும் இதனால் பாதிக்கப்படறாங்க. இவங்க விளம்பரம் போட்ட பையை 1 ரூபாயிலேர்ந்து 4 ரூபாய் வரைக்கும் காசு கொடுத்து வாங்க நிர்பந்திக்கிறாங்க. இது பொது மக் களை சுரண்டுற வேலைதானே...'' என்று நம்மிடம் நியாயம் கேட்டவர் அங்கிருந்த காவல்துறையினருடன் மல்லுக்கட்டத் தொடங் கினார்.

நாம் பில் கவுண்டரில் நின்ற கேஷியரிடம் முஹைதீனின் குற்றச் சாட்டை சொல்லி விளக்கம் கேட்டோம்.

“அரசாங்கமே பாலித்தீன் பை விற்பனை செய்ய ரூ. 1 முதல் 4 வரை நிர்ணயித்துள்ளது. அத னைத்தான் நாங்கள் கேட்டு வாங்குகிறோம் என்றவர். இதை நாங்கள் போர்டில் எழுதி தொங்கவிட்டிருக்கிறோம்...'' என்றபடி தொங்க விடப்பட்டிருக்கும் அட் டையில் உள்ள விலைப் பட்டியலைக் காட்டினார்.

“சரி, அரசாங்கம் தொகையை நிர்ணயித்திரு ந்தால் நீங்கள் எப்படி உங்கள் சூப்பர் மார்க்கெட் விளம்பரத்தைப் போட்டு அதை விற்பனை செய்யலாம்...?'' என நாம் கேட்க, மவுனமானார் கேஷியர்.

சூப்பர் மார்க்கெட்டின் மேனேஜரோ, “சார்... அரசாங்கம் சட்டம் போட்டிருக்கிறது. கேரிபேக்குக்கு காசு வாங்கச் சொல்லி... அதைத்தான் நாங்கள் செய்கிறோம்...'' என்று கேஷியர் சொன் னதையே ரிப்பீட் செய்தார்.

இதற்கிடையில் தகவல் அறிந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் வட சென்னை மாவட்ட நிர்வா கிகள் கேரிபேக் மூலம் பொது மக்களைச் சுரண் டும் பிக்பஜார் நிர்வாகத் தைக் கண்டித்ததோடு - அவர்கள் அங்கே தொங்கவிட்டிருந்த கேரிபேக்கின் விலைப் பட்டியல் போர்ட் டையும் அப்புறப்படுத்தக் கோரினர்.

அங்கே திரண்டிருந்த பொது மக்களும் பிக்பஜார் ஊழியர் களை கண்டபடி பேசத் தொடங் கினர்.

நாம் கேஷ் கவுண்டரில் கேள்வி கேட்டதை வைத்து நம்மை செய்தியாளர் என்று அறிந்து கொண்ட இளம் பெண் ஒருவர், “சார்... நான் போன வாரம் இங்கே வந்து பேன்டீஸ் வாங்கினேன். அதை எடுத்துட்டுப்போக கேரிபேக் கேட்டா காசு கேட்டாங்க. இல்லன்னா அப்படியே கையில எடுத் துட்டுப் போன்னாங்க சார். எப்படி சார் எடுத்திட்டு போறது? நீங்களே சொல் லுங்க...'' என்று மிரட்சியு டன் நம்மிடம் சொன்னார்.

“இன்னொரு நடுத்தர வயதுப் பெண்மணியோ, “இவங்க விளம்பரம் போட நாங்க எதுக்கு காசு கொடுக்க னும்...?'' என்றபடி வெளியேறி னார்.

சூப்பர் மார்க்கெட் நிர்வாகத் தரப்போடு பேசிய காவல்துறை யினர், ஐஎன்டிஜே நிர்வாகிகளி டம் வந்து “அவர்கள் இனி கேரி பேக்குக்கு பணம் வாங்க மாட் டார்கள்; நீங்கள் புறப்படுங்கள்'' என்று சொல்ல... கேரிபேக் விலை எழுதி மாட்டியிருக்கும் விளம்பர போர்டுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். பையை இலவச மாக தர வேண்டும் என்று ஐஎன் டிஜே நிர்வாகிகள் கூற... சூப்பர் மார்க்கெட்டில் தொங்கிக் கொண்டிருந்த அத்தனை போர்டுகளை அகற்றச் சொல்லியது போலீஸ்.

அதன்படி மாட்டப்பட்டிருந்த விலைப் பட்டியல் அட்டைகளை சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் அகற்றினர். அங்கிருந்த பொது மக்கள் இதைக் கண்டு மகிழ்ச்சி யடைந்தனர்.

தொடர்ந்து, பர்ச்சேஸ் செய்ய பொது மக்களுக்கு கேரிபேக்கை இலவசமாக தருகிறார்களா? காசு கேட்கிறார்களா என்பதை சற்று நேரம் அங்கிருந்தபடியே உறுதிப்படுத்திக் கொண்ட ஐஎன்டி ஜேவின் வட சென்னை மாவட்ட நிர்வாகிகள், மீண்டும் அடுத்தடுத்த நாட்களில் நேரில் வந்து ஆய்வு செய்வோம். அப்போது பொது மக்களிடமிருந்து கேரி பேக்கிற்காக பணம் வசூலிப்பது தெரிந்தால் நிச்சயமாக கடும் விளைவுகளை பிக்பஜார் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துவிட்டு புறப்பட்டனர்.

Pin It