இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட, விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.

விடுதலைக்குப் பிறகு, இந்தியாவின் முன்னேற்றத் திற்கு சமூக நல்லிணக்கம் மிகவும் அவசியமானது என்று உணர்ந்து, இஸ்லாமியர்களுக்கு உண்மையான அரசியல் பாதையை வகுக்கவே இந்திய யூனியன் முஸ் லிம் லீக் 1948 ஆம் ஆண்டு சென்னையில் துவங் கப்பட்டது. அதன் நிறுவனர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹேப், "இளைஞர்களுக்கு சரியான சமூக சிந்தனையை யும், தன்னம்பிக்கையையும் அளிக்கக் கூடிய வலிமை யான அரசியல் இயக்கமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்படும்.

பொது வாழ்வில் உறுதியோடும், தனித்துவத்தோடும், சுதந்திரமாக செயல்படக் கூடிய தலைவர்களை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் கடமை" என்று அறைகூவல் விடுத்தார். காயிதே மில்லத் அவர்களின் அரசியல் நேர்மையும், ஆழமான சிந்தனையும், தன்னலமற்ற தேச பக்தியும், கனிவான பண்புகளும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அதிவேக வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தன. 'கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்' என்று அண்ணா வாலும், ராஜாஜியாலும் அன்போடு பாராட்டப்பட்ட அந்த மனிதரின் பெயர் இன்றும் தமிழக அரசியலில் முக்கியத் துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் மறைவுக் குப் பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ரீதியாக தனித்தன்மையை சிறிது சிறிதாக இழந்து வருவ தாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தற்போதைய அரசியல் சூழ்நிலை யில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எவ்வாறு தன்னை வெற்றிப் பாதையில் நிலைநிறுத்திக் கொள்ளப் போகிறது என்ற கேள்வியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் தாவூத் மியாகானிடம் முன் வைத்தோம். தாவூத் மியாகான் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹேப் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் ஒரு நேர்காணல்

இந்திய அரசியலில் மிகப் பெரும் பங்கு வகித்த காயிதே மில்லத் அவர்கள், தன பேரனான உங்க ளுக்கு அளித்த ஊக்கமும், அரசியல் ரீதியான அறிவுரைக ளும் எவ்வாறு இருந்தன?

தாவூத் மியாகான் : அவரது பரந்த சமூக சிந்தனையும், இணையற்ற மனித நேயமும், உடனி ருந்த எனக்கு கிடைத்த அடிப்படை பாடங்கள். மேலும், அவரது எளிமை, வெளிப்படையான கருத் துகள், பொது வாழ்வில் தூய்மை அனைவரையும் கவரக் கூடியவை. அவரது அளவில்லாத அரசியல் அறி வும், அனைவரிடமும் உண்மையாகப் பழகும் குணமும் நான் கற்றதில் முக் கியமானவை. அவரது முயற்சிகளால், அரசியலில் இஸ்லாமியர்கள் முக்கியத் துவத்தோடு இருந்தார்கள். எந்த விதமான பிரிவினை சிந்தனைகளும் இல்லாத இந்திய சமூகத்தை அவரது காலத்தில் நம்மால் காண முடிந்தது.

உங்களது அரசியல் நடவ டிக்கைகள் எவ்வாறு துவங்கின?

தாவூத் மியாகான் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனரின் பேரனாக இருப்பதால், இளமைக்காலம் தொடங்கி நான் அரசியலில், சமூக முன்னேற்றத்தில் அக்கறையோடு இருந்தேன். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் எம்.எஸ்சி, எலக்ட்ரானிக்ஸ் படித்து விட்டு, அயல் நாடுகளில் தொழில் நுட்பத் துறைகளில் பணியாற் றினேன். என்னுடைய தந்தையாரும் தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்ததால், நானும் சென்னைக்கு திரும்பி முழு நேரமாக சமுதாய, அரசியல் பொறுப்பு களை ஏற்றுக் கொண்டேன்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்திற்குப் பிறகு தமிழக அரசியலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எவ்வாறு செயல்பட்டு வருகிறது?

தாவூத் மியாகான் : அவரது மறைவுக்குப் பின், அரசியல் ஆதாயங்களுக்காகவும், சுயநலத்திற்காகவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் செயல்பட ஆரம்பித்தார்கள். சமூக அக்கறையில் ஊறிப்போன என் னைப் போன்றவர்கள் மிகுந்த மன வேதனை அடைந் தோம். இதற்காகவா நம் முன்னோர்கள் இந்த இயக் கத்தை வளர்த்தார்கள் என்று வருந்தினோம்! அதுவும், காலம் சென்ற அப்துல் சமத் போன்றவர் கள் சுயநலத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள்! தங்கள் வளர்ச்சிக்காக மத நல்லிணக்கத்தையும் கெடுக்கத் துவங் கினார்கள். அப்போது ஏற்பட்டதுதான் இந்து முன்னணி போன்ற இயக்கங்கள். சுயநலவாதிகள் பதவிக்காக செயல்பட்டு, முஸ்லிம்களை அரசியல் ரீதியாக தனிமைப் பட வைத்தார்கள்.

முஸ்லிம் லீக்கின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது?

தாவூத் மியாகான் : எதைச் சொல்வது? சிறிதளவும் சமூக உணர்வில்லாத நிலைதான் மிஞ்சியுள்ளது. கே.எம். காதர் மொய்தீன் ஒருபடி மேலே சென்று கட்சியை தி.மு. க.விற்கு அடகு வைக்கும் நிலைக்கு சென்று விட் டார். அவர் தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டு பதவி பெற, இந்திய யூனியன் முஸ் லிம் லீக் என்பது அரசியல் இயக்கமே இல்லை என்று கூறும் அளவிற்கு சென்று விட்டார்! எனவே, அனை த்து நற்சிந்தனை யாளர்களும் ஒன் றுபட்டு பாரம்பரி யமிக்க இந்த அர சியல் இயக்கத்தை சீர்படுத்தி வருகி றோம். இனிமே லும், கட்சிக்கு களங்கம் வரு வதை அனும திக்க மாட்டோம்! சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பழைய உன்னதமான நிலையை மீண்டும் உருவாக் கக் கடினமாக உழைத்து வருகிறோம்!

உங்களது சமீப கால தேர்தல் அனுபவங்கள் எப்படி?

தாவூத் மியாகான் : உங்கள் கேள்வி புரிகிறது! கருணாநிதி அவர்களை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டது காரணத்தோடுதான். அதாவது, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பெயரைச் சொல்லியே, கருணாநிதி அவர்கள் அரசியல் செய்து வருகிறார். அந்த மாயையை உடைத்து, காயிதே மில்லத் பெயரைச் சொல்லி மலிவான அரசியல் செய்வதைத் தடுக்கவே அவரது பேரனான நான் போட்டியிட்டேன்!

தற்போதைய முதல்வரின் செயல்பாடுகள் எப்படி?

தாவூத் மியாகான் : மாண்புமிகு முதல்வர் அவர்கள் தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தது முதல் சாதனை. என்னைப் பொறுத்த வரையில் அம்மா அவர்கள் இந்திய அரசியலில் ஒரு பொற்காலத்தை வரும் காலத்தில் உருவாக்கப் போகிறார். அவர்களது சீரிய தலைமையில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் உயர்ந்து நிற்கும் என்பது உறுதி!

சந்திப்பு : தஞ்சை வெங்கட் ராஜ்

Pin It