மஹாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் தீவிரவாத எதிர்ப்புப் படையான ஏ.டி.எஸ்., சட்ட வரம்புகளையும், மனித உரிமைகளையும் மீறும் வகையில் செயல்பட்டு வருவது நாட்டிலுள்ள பத்திரிகைகளும், சமூக ஆர்வலர்களும் அறிந்த விஷயம்.

மும்பையிலிருந்து டெல்லி என்று மாநிலம் விட்டு மாநிலம் போய் தனது அதிகார வரம்பை மீறி செயல்படும் ஒரே அமைப்பாக ஏ.டி.எஸ். செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டத்திற்கு கட்டுப்படாத ஒரு அமைப்பாகவே ஏ.டி.எஸ். நடந்து வருவதை மத்திய உள்துறை அமைச்சகமோ, மாநில அரசோ கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் அது தீவிரவாத தடுப்புப் படை என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை இலக்கு வைத்து இயங்கி வருவதால்தான்!

முஸ்லிம்களைக் குறி வைத்து இயங்கும் ஏ.டி.எஸ். படையின் கடந்த வார வேட்டைக்கு இரையாகியிருக்கிறார் மஹாராஷ்டிரா மாநில ஒளரங்காபாத்தைச் சேர்ந்த 22 வயது முஸ்லிம் இளைஞர் அஸ்ஹார் குரைஷி.

கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி அஸ்ஹார் குரை ஷியை சுட்டுக் கொன்ற மஹாராஷ் டிரா ஏ.டி.எஸ். படை அப்ரார் ஷேக், ஷகீல் அஹ்மது என்ற இரு முஸ்லிம் இளைஞர்களையும் கைது செய்திருக்கிறது.

அஸ்ஹாரை போலி என்க வுண்ட்டர் செய்திருக்கும் ஏ.டி. எஸ்., 2008ல் அஹ்மதாபாத்தில் நடந்த குண்டு வெடிப் பில் சம்பந்தப்பட்டிருப்ப தாக தேடப்படும் கலீல் கில்ஜி என்பவர் இந்த அஸ்ஹார்தான் என்றும், மோதலின்போது (?!) ஒரு கான்ஸ்டபிள் படுகா யம் அடைந்தார் என் றும் கூறியுள்ளது.

ஏ.டி.எஸ். கூறிய இந்த பச்சைப் பொய் இரண்டே நாட்களில் அம்பலமானது. கொல் லப்பட்ட அஸ்ஹார் குரைஷி மத்தியப் பிர தேசத்தைச் சேர்ந்தவர். இவர் போலீஸ் தேடும் கலீல் கில்ஜி அல்ல என்பது தெரிய வந்தவுடன் ஆடிப் போயிருக்கிறது ஏ.டி.எஸ்.

இந்த போலி என்கவுண்ட்டர் தொடர்பாக முஸ்லிம்கள் உள் ளிட்ட மஹாராஷ்டிரா அரசியல் தலைவர்கள் முதல்வர் பிரித்வி ராஜ் சவுகானை சந்தித்து முறை யிட்ட பின்னர் சி.ஐ.டி. போலீ சார் விசாரணைக்கு உத்தரவிட்டி ருக்கிறது மஹாராஷ்டிரா அரசு.

“குரைஷி ஓர் அப்பாவி இளைஞர். இந்தியாவில் எங்கும் அவர் மீது எந்த வழக்கும் பதி வானதில்லை. எந்த அமைப்பி லும் அவர் உறுப்பினரா கக்கூட இருந்ததில்லை...'' என்று கூறும் அஸ்ஹார் குரைஷியின் தாய் மாமனான அப் துல் ஹஃபிஸ்,

“மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர் ந்தவர் குரைஷி. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கம்ப்யூட்டர் டிப் ளமோ கோர்ஸ் பயின்று வேலை தேடிக் கொண்டி ருந்தார். நல்ல வேலை கிடைக் கும்வரை மிட் டாய், பிஸ்கட்டு களை குழந்தைகளி டம் விற்று பிழைப்பு நடத்தி வந்தார். மத்தியப் பிரதேசத்தில் காண்ட்வா நகரில் வசிக்கிறது குரைஷியின் குடும்பம்...'' என்ற தக வல்களையும் தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த குரைஷியை ஒளரங்காபாத்தில் ஏ.டி.எஸ். படை எப்படி சுட்டுக் கொன்றது?

ஏழ்மையின் காரண மாக சில நாட்களுக்கு முன் வேலை தேடி ஒளரங்காபாத்திற்கு சென்ற குரைஷியை 2008 அஹ்மதாபாத் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டதாக போலீசார் சந்தேகப்ப டும் கலீல் கில்ஜி என்று நினைத்து குறைந்தபட்சம் குரை ஷியை விசாரிக்காமலும், கைது செய்யாமலும் போலி என்கவுண் ட்டர் நடத்தி சுட்டுக் கொன்று விட்டது ஏ.டி.எஸ். போலீஸ்.

இந்த அநீதிக்கு எதிராகப் போராடும் வலிமையோ, கோர்ட், கேஸ் என செலவழிக்க பொருளாதாரமோ இல்லாத நிலையில் எவ்வித உதவியுமின்றி நிர்க்கதியாக நிற்கிறது குரைஷி யின் குடும்பம்.

இந்த சம்பவத்தில் உண் மையை வெளிக் கொண்டு வரவும், நீதியை பெறவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் ஆதரவை நாடி நிற்கிறது அந்தக் குடும்பம்.

இச்சம்பவத்தை ஒளரங்காபாத்திலிருந்து வெளிவரும் உருது நாளிதழான ஆசியா எக்ஸ்பி ரஸ், "என்கவுண்ட்டர் அல்லது படுகொலை - நீதிக்கான அழைப்பு' என்ற தலைப்பிட்டு முதல் பக்க செய்தியாக வெளியிட்டுள்ளது. பிர பல இந்தி நாளிதழான தய்னிக் பாஸ்கர் என்ற பத்திரிகையும் இச்செய் தியை வெளியிட்டுள் ளது. சி.என்.என். உள் ளிட்ட தொலைக் காட்சி களும் இச்செய்தியை முக்கியத்துவத்துடன் வெளியிட் டுள்ளன.

இவ்விவகாரம் மஹாராஷ்டிரா அரசுக்கு பிரச்சினையை உருவாக்கியுள்ள நிலையில், அது சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட் டிருக்கிறது. ஆனால், “இந்த சி.ஐ. டி. போலீசும் அதே போலீஸ் தான். இவர்கள் உண்மையை வெளிப்படுத்துவதற்கு பதிலாக போலீசுக்குத்தான் உதவிகரமாக இருப்பார்கள். அதனால் “இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்...'' என்கின்றனர் அஸ்கார் குரைஷியின் குடும்பத்தினர்.

ஏ.டி.எஸ். படை தீவிரவாதிகளை எதிர் கொள்கிறதோ இல்லையோ அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறது. மத்திய அரசு இந்தப் படையை கலைத்தால் அது நாட்டுக்கு நல்லதுதான்.

- அபு

Pin It