சினிமா எனும் கனவுலகத் தொழிற்சாலை சிந்தனை களை உருவாக்கும் கூடம் என்று சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் சினிமா வும் அதன் குழந்தையான தொலைக்காட்சி சானல்களும் மக்களின் சிந்தனைகளை கெடுத்து மக்களை படுபாதகங் களை செய்வதற்கு தூண்டும் கருவியாகவே உள்ளது.

நாட்டில் நடந்த படுபாதக கொலைகள் பலவற்றிற்கு சினிமா வழிகாட்டும் கருவியாக இருந்துள் ளது. ரகசியத் திருமணம் செய்து கொண்டு ஆணும் பெண்ணும் "அலைபாயும்' காரியங்களை சினிமா கற்றுத் தருகிறது.

அண்ணியை, அத்தையை, கொழுந்தனை, மருமகளை, மாம னாரை முறைகேடாக வளைப்ப தற்கு சினிமா பாடம் நடத்துக்கிறது. கல்லூரி காலங்களில் வரும் காதலை, நடுநிலைப் பள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியது சினிமா.

ஆசிரியையும் மாணவனும் முறையற்ற காதல் கொள்வதற்கு முழுமுதற் காரணமும் இந்த சினிமா தான். பாடம் கற்பிக்கும் ஆசிரியர் களை மாணவர்கள் கேலி செய்யும் காட்சிகளை காட்டி, ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் நன்மதிப் பைக் குலைத்தது சினிமா.

உச்ச கட்ட பாதுகாப்பு உள்ள வங்கிகளில் கொள்ளையடிப்பது எப்படி?

பாதுகாப்பு மிகுந்த பகுதிகளில் குண்டு வைப்பது எப்படி?

சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் எவ்வாறெல்லாம் தப்பிப்பது என்றெல்லாம் பாடம் நடத்தியது சினிமா.

ஒரு சமுதாயத்தினரை குறி வைத்து தீவிரவாதிகளாக, பயங் கரவாதிகளாக, மோசடியாளர்களாக காட்டி, அவர்களை குற்றப் பரம்ப ரையாக மக்கள் மனதில் பதிய வைத்தது சினிமா.

சினிமாவின் இத்தகைய சாகசங் களுக்கு சற்றும் குறையாமல் தொலைக்காட்சியின் சீரியல் கள் செய்து வருகின்றன.

வெள்ளித்திரையில் காலா வதியான நடிகைகள் சின் னத்திரையில் மறு பிரவேசம் செய்து, சீரியல் என்ற பெயரில் மாமியார் - மரும கள், பெற்றோர் - பிள்ளை உறவுகளுக்கு வேட்டு வைக் கின்றனர். இதைப் பார்க்கும் மக்களின் மனதில் அந்த காட்சிகளை பிம்பமாக பதிக் கின்றனர்.

மானாட-மயிலாட என்று, இளசுகள் முதல் பெருசுகள் வரை மனதை ஆடவைத்து ஆபாசத்தின் பக்கம் தள்ளும் காரியத்தை கச்சிதமாக செய்கின் றன. பக்தி என்ற பெயரில் கற்ப னைக் கதைகளை தத்ரூபமாக காட்டி, மூட நம்பிக்கையை முழு தாக புகுத்துகின்றன.

முன் ஜென்மம் என்ற பெயரில் பகுத்தறிவுக்கு சாவுமணி அடிக் கின்றன. சிறுவர்களை மயக்கும் சாகசக் காட்சிகளை காட்டுவதன் மூலம் அவர்களின் மனதிலும் அந்த சாகசங்களை செய்துபார்க் கும் எண்ணத்தை விதைக்கின்றன. சக்திமான் காப்பாறுவார் என்று மாடியிலிருந்து குதித்து மாண்ட சிறுவன் பற்றிய செய்தியெல்லாம் அனைவரும் அறிந்ததே!

சினிமாவாகட்டும் தொலைக் காட்சி சேனல்களாகட்டும் அவை கள் ஏற்படுத்திய நன்மைகள் கடுகளவு; ஆனால் சமுதாயத்தில் அவைகள் ஏற்படுத்திய பாதிப்பு மலையளவு என்றால் அது மிகை யல்ல. இதை நாம் மட்டும் சொல் லவில்லை. பல மனோதத்துவ நிபு ணர்களும், இந்த சினிமாவும் - சீரி யல்களும் மனிதனின் உள்ளத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தை வெளிச் சம் போட்டு காட்டியுள்ளார்கள்.

மக்கள் சினிமாவையும் சீரியலை யும் ஒரு பொழுதுபோக்காக மட்டும் பார்க்கவில்லை. அதை தமது வாழ்வின் அங்கமாகவே பார்க்கின்றார்கள். அதை ரோல் மாடலாக கொள்கிறர்கள் என்ப தற்கு ஒரு சிறிய சான்று;

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி கோழி பண்ணை பகுதியை சேர்ந்தவர் பாரதி கணேசன் (வயது 58). பாரதி கணேசன் முத்தம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந் தார்.

அவருடைய தந்தையான கருப் பண்ண கவுண்டர் (85), பாகப் பிரி வினையின்போது, தான் கேட்ட அளவிற்கு தனியாக சொத்து பிரித்து தரவில்லை என்று கூறி பாரதிகணேசனிடம் தகராறு செய்து வந்தார். இந்நிலையில், இர வில், வீட்டின் வெளியே போடப் பட்ட கட்டிலில் பாரதிகணேசன் தனியாக படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கருப்பண்ண கவுண்டர், இரும்புக் கம்பியால் பாரதி கணேசனின் தலையில் ஓங்கி அடித்தார். பின்னர் அங்கிருந்து அவர் வேகமாக சென்று விட்டார். பாரதிகணேசன் மூளை சிதறிய நிலையில் இறந்தார்.

கொலை பற்றி தகவல் அறிந்த தும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கருப்பண்ண கவுண்டரை கைது செய்தனர். கொலை குறித்து போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில்,

"எங்கள் குடும்பத்தில் 6 மாதத் திற்கு முன்பாக பாகப்பிரிவினை செய்யப்பட்டது. அப்போது நிலத்தை எனக்கு விட்டு கொடுக் காமல், அதற்கு பதில் ஜீவனாம்சம் தருவதாககூறி ஒரு வெற்றுப் பத்தி ரத்தில் கையெழுத்து பெற்றனர். நானும் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன்.

இந்த நிலையில், டி.வி. நாடகத் தில் வரும் தொடரை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது ஒருவரை கடத்தி சென்று வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டு, பின்னர் அந்த நபரை கொலை செய்து விடுவது போன்ற காட்சி வந்தது.

என்னிடமும் வெற்று பத்திரத் தில் கையெழுத்து வாங்கி இருந்ததால், என்னையும் அதுபோல கொன்று விடுவார்களோ என்ற பயம் இருந்தது. எனவே, நானே முந்திக் கொண்டு, பெற்ற மகனையே கொலை செய்து விட்டேன்'' என்று கூறி இருக்கிறார்.

இந்த சம்பவத்தில் ஒரு என்பத்தைந்து வயது முதிய வர் உள்ளத்தில்தான் பெற்ற மகனையே கொல்லும் அள வுக்கு ஒரு தீய சிந்தனையை சீரியல் விதைக்கிறது என்றால், எளிதில் உணர்ச்சி வசப்படும் இளைஞர்கள் - சிறுவர்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சினிமாவையும் சீரியலையும் தணிக்கை செய்ய ஒரு துறை இருந்தாலும் அதன் கத்தரி "பணம்' எனும் பசை'யால் மழுங்கடிக்கப் பட்டுவிட்டதோ என மக்கள் கரு துகிறார்கள். காரணம் ரத்தம் ஓடும் காட்சிகளும், கதையை விட சதையை முன்னிலைப்படுத்தும் காட்சிகளும் நிறைந்துள்ள படங்க ளும் கூட "யு' சர்டிபிகேட் பெற்று விடுகிறதே!

ஒரு காலத்தில் மலையாளப் படங்களில் அந்த மாதிரி காட்சிகள் "பிட்'டாக ஒட்டி ஓட்டிய நிலை போக, இன்று தமிழில் 'அநாகரீக' மாக முழு நீலப் படங்களே வலம் வருகின்றதே!

ஒரு நேரத்தில் கதாநாயகியை தொடாமல் மரத்தை சுற்றி வந்து டூயட் பாடிய நாயகன், இன்று உரித்த கோழியாக உள்ள நாயகி யோடு மஞ்சம் கொள்ளும் காட்சி கள் மறைவின்றி வருகின்றதே!

படுக்கையறை காட்சியில் பகிரங்கமாக நடிக்கும் ஒரு கழிசடைக்கு, துணிச்சலாக' நடித்துள்ளார் என்று பத்திரிக்கைகளின் பாராட்டு, டர்ட்டி பிக்சர்ஸ் (அழுக்கான, அசுத்தமான படம்) நடி கைக்கு மத்திய அரசின் சிறந்த நடிகை விருது வேறு. கேவலம்.

மத்திய, மாநில அரசுகள் இனி யாவது இந்த சமூக சீர்கேட்டை விதைக்கும் சினிமா - தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக் குமா என்பதுதான் சமுதாய ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.

- தரசை தென்றல்

Pin It