செஞ்சேனையில் நாடோடி நபர்களின் தொகை பெரிதாய் இருப்பதாலும், சீனா முழுவதிலும் சிறப்பாக தெற்கு மாகாணங்களின் நாடோடிகள் பெரும் தொகையில் இருப்பதாலும், அலைந்து திரியும் கிளர்ச்சிக்காரக் குழுக்களின் அரசியல் சித்தாந்தம் செஞ்சேனையில் தோன்றியுள்ளது. இந்த சித்தாந்தம் பின்வருமாறு வெளிப்படுகின்றது.

1.         சில நபர்கள் அரசியல் செல்வாக்கை அலைந்து திரியும் கெரில்லா நடவடிக்கைகளால் மாத்திரம் பெருக்க விரும்புகின்றனர். மாறாக, தளப்பிரதேசங்களை அமைத்து, பொதுமக்கள் அரசியல் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் கடினமான வேலைகளைச் செய்வதன் மூலம் அச்செல்வாக்கை அதிகரிக்க விரும்பவில்லை.

2.         செஞ்சேனையை விஸ்தரிக்கும்போது, சிலர் ஸ்தல செங்காவலர் படைகளையும், ஸ்தல செஞ்சேனையையும் விஸ்தரித்து முக்கிய சக்தியாகிய செஞ்சேனையை விருத்தி செய்வதற்குப் பதிலாக, “ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி குதிரைகளை விலைக்கு வாங்குவது,” “விட்டோடியவர்களைச் சேர்த்து, கலகக்காரரை ஏற்றுக்கொள்வது” என்ற வழியைப் பின்பற்றுகின்றனர்.

3.         சில நபர்கள் பொறுமையாக பொதுமக்களுடன் சேர்ந்து கடினமான போராட்டங்களை நடத்த விரும்பாமல், பெரும் நகரங்களுக்குச் சென்று ஆசை தீர உண்ணவும் குடிக்கவும் மாத்திரம் விரும்புகின்றனர். அலைந்து திரியும் கிளர்ச்சிக்காரர் தத்துவத்தின் இந்த வெளிப்பாடுகள் எல்லாம் செஞ்சேனை அதன் சரியான கடமைகளைச் செய்வதைப் பெரிதும் தடைசெய்கின்றன. எனவே, இதை ஒழித்துக் கட்டுவது உண்மையில் செஞ்சேனையின் கட்சி ஸ்தாபனத்தில் நிகழும் சித்தாந்தப் போராட்டத்தின் பிரதான இலக்காகும். வரலாற்றில் இருந்த ஹுவாங்சௌ அல்லது லீசுவாஸ் போன்று அலைந்து திரியும் கிளர்ச்சிக்காரரின் முறைகள் இன்றைய நிலைமைகளில் அனுமதிக்கக் கூடாதவை என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

                                                                                                                                                 - மாசேதுங்

                                                            (கட்சியில் நிலவும் தவறான கருத்துக்களை திருத்துவது எப்படி?)

Pin It