கங்கு வரிசை 8ஆக. வந்த வீ.அரசு எழுதி, 2 ஆண்டுகளுக்கு முன் வந்த "சிறுபத்திரிகை அரசியல்" என்னும் நூல், பக்.10இல் இப்படி ஒரு பகுதி:

- எழுத்து (1959-1972) தொடங்கி பிரக்ஞை (1974-1978) வரையிலான சிறுபத்திரிகை மரபு.
- புதியதலைமுறை (1966) தொடங்கி நிகழ் (1983-1995) வரையிலான சிறுபத்திரிகை மரபு.
- படிகள் (1978) தொடங்கி வித்தியாசம் (1994) வரையிலான சிறுபத்திரிகை மரபு.
- நிறப்பிரிகை (1990-2000) உருவாக்கிய தமிழ்ச் சிறுபத்திரிகை மரபு.

இப்பாகுபாடு சமகாலத்தில் (1959-2000) நிகழ்ந்த சிறுபத்திரிகை மரபு சார்ந்த அச்சு ஊடகப் போக்குகளை அடையாளப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது.

காலச்சுவடு இதழ் 100, பக். 72இல் (ஏப்ரல் 2008) பழ.அதியமான் எழுதிய "தூக்க நினைத்த கோவர்த்தன கிரி" என்னும் கட்டுரையில் வந்துள்ள ஒரு பகுதி:

"இந்தச் சிறுபத்திரிகை மரபை எழுத்து (1959-1972)இலிருந்து பிரக்ஞை (1974-1978) என்பதாக ஒரு மரபையும், புதிய தலைமுறை (1966)லிருந்து நிகழ் (1983-1995) என இன்னொரு தீவிர மார்க்சிய மரபும், படிகள் (1978) முதல் வித்தியாசம் (1994) வரையிலான நவீனத்துவச் சாயல் மரபும், நிறப்பிரிகை (1990-2000) உருவாக்கிய அரசியலை முதன்மைப்படுத்திய மரபும் என நாம் பிரித்துப் பார்க்க முடியும்."

அச்சு யுகத்தை விடுங்கள். இது இணையதள யுகம் அல்லவா? ஒருபோலச் சிந்திக்கும் பெரிய மனிதர்கள் ஆகத்துக்கும் பெருத்துப் போய்விட்டார்கள்! வேறென்ன சொல்ல?

Pin It