நூறு ஆண்டுகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும், பொதுவுடைமை இயக்கத் தலைவர்களில் ஒருவரான பெரியவர் என்.சங்கரையா அவர்களுக்கு 2021, ஆகஸ்ட் 15 அன்று ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கிப் பெருமைப்படுத்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு.

sankarayya 277சங்கரையா அவர்களின் பெருமையை உலகறியும்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படிக்கும் மாணவப் பருவத்தில் இந்தியாவின் விடுதலைக்காகச் சிறை சென்றவர்.

தன்னலமற்றப் பொதுவுடைமைச் சிந்தாந்தவாதி அவர்.

அப்படிப்படவர்களின் உழைப்பை மதித்து பல்கலைக்கழகங்கள் சிறப்பு முனைவர் பட்டம் கொடுப்பது இயல்பு.

தமிழ்நாட்டின் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சங்கரையா அவர்களுக்கு சிறப்பு முனைவர் பட்டம் வழங்க பரிந்துரை செய்திருந்தார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட், செனட் ஆகியவைகளும் பரிந்துரைத்தன. அப்பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பும் இதற்கு வரவேற்பு தெரிவித்தது.

ஆனால் நியமன ஆளுநர் பதவியில் இருக்கும் ஆர்.என்.ரவி இதற்கான கோப்பில் கையெழுத்திட மறுத்து வருகிறார்.

விடுதலைப் போராட்ட வீரர்களை மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டும் அவருக்கு, விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சங்கரையாவைப் பாராட்ட, அங்கீகரிக்க மனம் வரவில்லை.

சனாதனம் சிவப்பை ஏற்றுக் கொள்ளாது என்பது தெரியும். ஆனால் அரசு சொல்வதை ஏன் ஆளுநர் கேட்பதில்லை என்பதுதான் தெரியவில்லை.

கருஞ்சட்டைத் தமிழர்

Pin It